இன்றைய காலகட்டத்தில் பலரும் தைராய்டு பிரச்சனையால் அவதிப்படுகிறார்கள். குறிப்பாக தைராய்டு பிரச்சனையால் பெண்கள் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். தைராய்டு என்பது நம் உடலில் உள்ள ஹார்மோன்களை ஒழுங்குபடுத்தும் ஒரு சுரப்பியாகும். இதில் ஏற்றத்தாழ்வுகள் ஏற்படும்பொழுது தைராய்டு ஹார்மோன் அதிகமாகவோ அல்லது குறைவாகவோ உற்பத்தியாகி தைராய்டு பிரச்சனைக்கு வழிவகைக்கிறது. சீரற்ற தைராய்டு சுரப்பி வளர்ச்சிதை மாற்ற விகிதம் மற்றும் உடல் வளர்ச்சியை பாதிக்கிறது.
தைராய்டு அறிகுறிகள்
- சோர்வு மற்றும் பலவீனம்
- எடை அதிகரிப்பு
- கண்களுக்குக் கீழே பாரம்
- குளிர்ந்த பாதம்
- உலர்ந்த சருமம்
- முடி கொட்டுதல்
- செரிமான பிரச்சனைகள்
- எரிச்சல் மற்றும் பதட்டம்
- தலைவலி
- தூக்கமின்மை
இந்த பதிவும் உதவலாம்: வெறும் வயிற்றில் வெந்நீர் குடிப்பது நல்லதா?
தைராய்டு அளவுகளை கட்டுப்படுத்துவது எப்படி?
தைராய்டு அளவுகளை கட்டுப்படுத்த பின்வரும் உணவுகளை உங்கள் அன்றாட உணவு முறையில் சேர்த்துக் கொள்ளலாம். இந்த தகவலை உணவியல் நிபுணர் மன்பிரீத் அவர்கள் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து உள்ளார்.
ஆளி விதைகள்
ஆளி விதைகளில் ஒமேகா 3 மற்றும் நார்ச்சத்து அதிக அளவில் உள்ளது. இவை தைராய்டு ஹார்மோன் சுரப்பை சீராக்குவதுடன், எடை இழப்புக்கும் உதவுகின்றன. ஆளி விதைகள் உங்களை நீண்ட நேரத்திற்கு நிறைவாக வைத்திருக்கும்.
பூசணி விதைகள்
தைராய்டு அளவுகளை கட்டுப்படுத்துவதில் பூசணி விதைகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இதில் உள்ள ஜிங்க் தைராய்டு செயல்பாட்டை மேம்படுத்தும். மேலும் இதில் உள்ள வைட்டமின் E கண்களைச் சுற்றியுள்ள வீக்கத்தையும் குறைக்கிறது.
சூரியகாந்தி விதைகள்
சூரியகாந்தி விதைகளில் செலினியம் மற்றும் அமினோ அமிலங்கள் உள்ளன. இவை தைராய்டு சுரப்பியின் செயல்பாட்டை மேம்படுத்த உதவுகின்றன. இதனுடன் சூரிய காந்தி விதைகளில் காணப்படும் செரோடோனின் மனநிலையை மேம்படுத்தவும் உதவுகிறது.
உலர் திராட்சை
உலர் திராட்சையில் ஏராளமான நற்பண்புகள் நிறைந்துள்ளன. இதில் அதிக அளவில் காணப்படும் இரும்புச் சத்து வளர்ச்சிதை மாற்றத்தை மேம்படுத்தவும், பலவீனத்தை குறைக்கவும் உதவுகிறது. தைராய்டு அளவை கட்டுக்குள் வைத்திருக்க உலர் திராட்சையை சாப்பிடும்படி நிபுணர் பரிந்துரை செய்கிறார்.
கருஞ்சீரகம்
உங்களுக்கு தைராய்டு பிரச்சனை இருந்தால், கருஞ்சீரகத்தை உங்கள் அன்றாட உணவில் சேர்த்துக் கொள்ளலாம். இது ஹார்மோன்களை சமநிலைப்படுத்த உதவுகிறது. இதனுடன் தூக்கமின்மை பிரச்சனையிலிருந்தும் விடுபடலாம்.
இந்த பதிவும் உதவலாம்: எடை இழப்பு முதல் செரிமானம் வரை பல நன்மைகளை தரும் லெமன் கிராஸ் டீ
இஞ்சி தண்ணீர்
தைராய்டு பிரச்சனை உள்ளவர்களுக்கு இஞ்சி தண்ணீர் மிகவும் நல்லது. இது வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்தி ஹைபோ தைராய்டின் அறிகுறிகளை குறைக்க உதவுகிறது. இதற்கு தண்ணீருடன் துருவிய இஞ்சியை சேர்த்து குடிக்கலாம்.
இதை தவிர்த்து தனியா பொடியையும் தண்ணீரில் கலந்து குடிக்கலாம். தனியா ஹார்மோன்களை சமநிலைப்படுத்துவதில் அதிக நன்மை தரும்.
இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும், பதிவு குறித்த உங்கள் கருத்தினை கமெண்ட் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.
image source:freepik