கொழுப்பை டக்குனு குறைக்க கட்டாயம் சாப்பிட வேண்டிய உணவுகள்

உடலில் கொழுப்பை அளவுகளை குறைப்பதற்கு உணவு முறையில் மாற்றத்தை ஏற்படுத்துவது அவசியம். இந்த பதிவில் கொழுப்பை குறைக்க உதவும் உணவுப் பட்டியல் பகிரப்பட்டுள்ளது. இவற்றை தொடர்ந்து சாப்பிட்டால் உடலில் கெட்ட கொழுப்பு குறையும்.
image

உடலில் கொழுப்பை குறைப்பதற்கு உணவுமுறை மாற்றமும் ஒரு வகையில் உதவும். கொழுப்பில் இரண்டு வகை உள்ளன. நல்ல கொழுப்பு, கெட்ட கொழுப்பு. உடலில் கெட்ட கொழுப்பு அதிகம் சேர்ந்தால் ஆரோக்கியத்தில பாதிப்பு ஏற்படும். இதை சரிசெய்ய நல்ல கொழுப்பு உள்ள உணவுகளை கொஞ்சம் அதிகளவில் உட்கொள்ளலாம். கெட்ட கொழுப்பு இரத்தத்தில் கலக்காமல் உடலில் இருந்து வெளியேற்றப்படுவதை உறுதி செய்தால் இதய நோய் உள்ளிட்ட பல பிரச்னைகளை தடுக்கலாம். இந்த பதிவில் கெட்ட கொழுப்பு அளவை குறைக்க சாப்பிட வேண்டிய உணவுகள் குறித்து பார்க்கலாம்.

ஓட்ஸ்

உடலில் கொழுப்பை குறைக்க முதல் முயற்சியாக காலையில் ஒரு கப் ஓட்ஸ் சாப்பிடுங்கள். இதில் 2 கிராம் நார்ச்சத்து உண்டு. அதுவும் எளிதில் கரையக்கூடியது. ஓட்ஸுடன் வாழைப்பழம் மற்றும் ஸ்ட்ராபெர்ரி சேர்த்து சாப்பிடலாம். ஒரு நாளில் நாம் 20 முதல் 35 கிராம் நார்ச்சத்து உட்கொள்வது நல்லது என ஆய்வுகள் கூறுகின்றன. அதிலும் 5 முதல் 10 கிராம் கரையக்கூடிய நார்ச்சத்து இருப்பது நல்லது.

தானியங்கள்

தானிய உணவுகளில் கரையக்கூடிய நார்ச்சத்து அதிகம் உள்ளது. இவற்றை தொடர்ந்து சாப்பிட்டால் இதய நோய் அபாயத்தை குறைக்கலாம்.

பீன்ஸ்

பீன்ஸில் குறிப்பாக கரையக்கூடிய நார்ச்சத்து அதிகம் உள்ளது. உடலில் இவை ஜீரணிக்க நேரம் எடுக்கும் என்பதால் சாப்பிட்டதில் இருந்து நீண்ட நேரம் முழுமையாக உணர முடியும். உடல் எடையைக் குறைக்கவும் பீன்ஸ் உதவும்.

கத்திரிக்காய், வெண்டைக்காய்

குறைந்த கலோரி கொண்ட இந்த இரண்டு காய்கறிகளும் கரையக்கூடிய நார்ச்சத்தின் சிறந்த ஆதாரமாகும்.

cholesterol lowering foods

நட்ஸ்

பல்வேறு ஆய்வுகள் பாதாம், வால்நட், வேர்க்கடலை மற்றும் இதர நட்ஸ் வகைகள் இதயத்திற்கு மிகவும் நல்லது என கூறுகின்றன. தினமும் 50 கிராம் அளவிற்கு நட்ஸ் வகைகள் சாப்பிட்டால் உடலில் கெட்ட கொழுப்பு குறையும். நட்ஸ் வகைகளில் இதர ஊட்டச்சத்தும் உள்ளன.

மேலும் படிங்கஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்திற்கு ரம்புட்டான் பழம் சாப்பிட்டால் போதும்

எண்ணெய் பயன்பாடு

சமையலுக்கு கடுகு எண்ணெய், சூரியகாந்தி எண்ணெய், குங்குமப்பூ எண்ணெய் ஆகியவற்றை பயன்படுத்தவும்.

பழங்கள்

ஆப்பிள், திராட்சை, ஸ்ட்ராபெர்ரி, ஆரஞ்சு போன்ற பழங்களில் பெக்டின் உள்ளது. இது ஒரு வகையான கரைக்கடிய நார்ச்சத்து ஆகும். இவற்றை சாப்பிட்டு உடலில் கெட்ட கொழுப்பை குறைக்கலாம்.

சோயா

சோயா மற்றும் அதை வைத்து தயாரிக்கப்படும் டோஃபு, சோயா பால் சாப்பிட்டால் கெட்ட கொழுப்பு எளிதில் குறையும். 25 கிராம் அளவு சோயா சாப்பிட்டால் உடலில் கெட்ட கொழுப்பு 5% முதல் 6% குறையும்.

மீன்

வாரத்திற்கு இரண்டு முறை மீன் சாப்பிடுவது கெட்ட கொழுப்பை இரண்டு வகைகளில் குறைக்கும்.

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP