மாதவிடாய் பிரச்சனை உடனே குணமாக; வெறும் வயிற்றில் முருங்கை தண்ணீரை குடித்து பாருங்க

முருங்கை இலையை நீரில் ஊறவைத்து தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடிப்பது பெண்களின் ஆரோக்கியத்திற்கு பல்வேறு விதங்களில் நன்மை பயக்கும். 
image

முருங்கை (மொரிங்கா) என்பது பல்வேறு ஊட்டச்சத்துக்கள் நிறைந்த ஒரு மருத்துவ மூலிகை ஆகும். தமிழ்நாட்டில் பல வீடுகளில் இந்த முருங்கை மரம் நம் முன்னோர் காலத்தில் வளர்க்கப்பட்டது. இதன் இலை, விதை, பட்டை போன்றவை பாரம்பரிய மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகின்றன. முருங்கை இலையை நீரில் ஊறவைத்து தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடிப்பது பெண்களின் ஆரோக்கியத்திற்கு பல்வேறு விதங்களில் நன்மை பயக்கும். அந்த வரிசையில் முருங்கை தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் என்ன என்று இந்த கட்டுரையில் பார்க்கலாம்.

உடல் எடை குறைக்க உதவும்:


முருங்கை நீர் உடல் கொழுப்பை குறைக்க உதவுகிறது. இது உடலில் உள்ள நச்சுத்தன்மையை நீக்கி, வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்துகிறது. இதனால் எடை குறைக்க விரும்பும் பெண்களுக்கு முருங்கை நீர் ஒரு சிறந்த தேர்வாகும்.


இரும்புச்சத்து குறைபாட்டை நீக்கும்:


பெண்களுக்கு அடிக்கடி இரும்புச்சத்து குறைபாடு (Anemia) ஏற்படுகிறது. முருங்கை நீர் இரும்புச்சத்து நிறைந்தது, எனவே இரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க உதவுகிறது. இது உடல் சோர்வு, தளர்ச்சி போன்ற பிரச்சனைகளை குறைக்கிறது.

moringa water

தோல் மற்றும் முடி ஆரோக்கியத்தை பராமரிக்கிறது:


முருங்கை நீரில் வைட்டமின் A, வைட்டமின் C, வைட்டமின் E மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளன, இவை தோல் மற்றும் முடியின் ஆரோக்கியத்தை பாதுகாக்கின்றன. இது முகப்பரு, சுருக்கங்கள் போன்றவற்றை குறைக்கிறது. மேலும், முடி உதிர்வதை குறைக்கவும், முடியை வலுவாக வைக்கிறது.


எலும்புகளின் வலிமையை அதிகரிக்கிறது:


கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் நிறைந்த முருங்கை நீர் எலும்புகளின் வலிமையை அதிகரிக்கிறது. இது ஆஸ்டியோபோரோசிஸ் (எலும்புப் பொருள் குறைதல்) போன்ற பிரச்சனைகளை தடுக்கிறது, குறிப்பாக மாதவிடாய் நிறுத்தத்திற்குப் பின் உள்ள பெண்களுக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

strong-bone-health

இதய ஆரோக்கியத்தை பராமரிக்கிறது:


முருங்கை நீர் கொலஸ்ட்ரால் அளவை குறைத்து, இதய நோய்கள் வராமல் தடுக்கிறது. இதில் உள்ள பாஸ்பரஸ், மெக்னீசியம் போன்ற தாது உப்புகள் இதயத்தின் செயல்பாட்டை மேம்படுத்துகின்றன.


நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது:


முருங்கை நீரில் உள்ள வைட்டமின் C மற்றும் முக்கிய ஊட்டச்சத்துக்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கின்றன. இது தொற்று நோய்கள், காய்ச்சல், சளி போன்றவற்றிலிருந்து பாதுகாக்கிறது.

மேலும் படிக்க: டீ குடிக்கும்போது மறந்தும்கூட இந்த உணவுகளை சாப்பிடாதீங்க; உடலுக்கு ஆபத்து

மாதவிடாய் பிரச்சனைகளை குறைக்கிறது:


மாதவிடாய் காலங்களில் அதிக வலி, மன அழுத்தம் போன்ற பிரச்சனைகளை முருங்கை நீர் குறைக்கிறது. இது ஹார்மோன் சமநிலையை பராமரிக்க உதவுகிறது. எனவே பெண்கள் இதை தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்து வரலாம்.

Stomach-Pain-870x488

அந்த வரிசையில் முருங்கை நீர் ஒரு இயற்கையான மருந்தாக பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது. தினமும் காலையில் ஒரு கிளாஸ் முருங்கை நீரை குடிப்பது பெண்களின் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை மேம்படுத்தும். ஆனாலும் அதிகமாக குடிப்பதை தவிர்க்கவும், ஏதேனும் உடல்நல பிரச்சனைகள் இருந்தால் மருத்துவரின் ஆலோசனையுடன் பயன்படுத்தவும்.

Image source: google

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP