Weight loss foods: ஏழு நாட்களில் 5 கிலோ குறைக்கலாம்.. இந்த உணவுகளை சாப்பிடுங்க!

உடல் எடையை ஆரோக்கியமான முறையில் குறைக்க இந்த 7 நாள் டயட் உணவுமுறையை ட்ரை பண்ணுங்க.

low carb foods
low carb foods

இந்த காலத்து பெண்கள் பலரும் உடல் பருமன் பிரச்சனையால் அவதி படுகின்றனர். உடல் எடை குறைக்க முயற்சி செய்வபர்கள் முதலில் அவர்களின் உணவுமுறை பழக்கத்தை ஆரோக்கியமாக மாற்ற வேண்டும். நார்ச்சத்து நிறைந்த பழங்கள் மற்றும் காய்கறிகள் நம் உடலுக்கு தேவையான ஊட்டச்த்துக்களை அளிக்கிறது. இதன் மூலம் கெட்ட கொழுப்புகள் சேராமல் இருக்க உதவும். உடல் எடை குறைக்க உணவுமுறை முக்கியம் என்றாலும் அதை விட முக்கியம் உடற்பயிற்சி. தினமும் குறைந்தது 1 மணி நேரம் நடைப்பயிற்சி செய்யவேண்டும்.

இன்றைய காலகட்டத்தில் பெண்கள் பலரும் உட்கார்ந்த இடத்திலேயே வேலை செய்வதனால் உடல் எடை ராக்கெட் வேகத்தில் அதிகரித்து விடுகிறது. இது போல அதிகரித்த உடல் எடையை குறைப்பது மிகவும் கடினம் என்று கூறலாம். ஒரே வாரத்தில் 4 முதல் 5 கிலோ உடல் எடையை ஆரோக்கியமான முறையில் குறைக்க இந்த உணவு டயட் முறையை முயற்சி செய்து பாருங்கள்.

உடல் எடை குறைய 7 நாள் டயட் பிளான்:

மேலும் படிக்க:பெண்களின் எடை இழப்பிற்கு உதவும் பப்பாளி பழம்!

நாள் 1

காலை தூங்கி எழுந்ததும் வெறும் வயிற்றில் 1 கிளாஸ் எலுமிச்சை நீர்

காலை உணவு - முட்டை பொரியல், குடைமிளகாய் சாலட்.

மதிய ஸ்னாக்ஸ் - 1 கிளாஸ் தேங்காய் பால் அல்லது இளநீர்

மதிய உணவு - ஒரு கப் சாதம், கத்தரிக்காய் பொரியல், அரை கப் பருப்பு, தயிர், அரை கப் கீரை

மாலை ஸ்னாக்ஸ் - சிறிதளவு நட்ஸ் (பாதாம், உலர்ந்த திராட்சை, வால்நட்ஸ்),1 கேரட்

இரவு உணவு - ஒரு கப் காய்கறி சாலட், 2 அல்லது 3 சப்பாத்தி, பருப்பு

low carb fruits

நாள் 2

காலை தூங்கி எழுந்ததும் வெறும் வயிற்றில் ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான தண்ணீரில் ஒரு டேபிள் ஸ்பூன் ஆப்பிள் சீடர் வினிகர் கலந்து குடிக்க வேண்டும்

காலை உணவு: வேக வைத்த முட்டை 3 அல்லது 4

மதிய ஸ்னாக்ஸ்: அரை கப் ஸ்ட்ராபெர்ரி ப்ளூபெர்ரி போன்ற பெர்ரி பழங்கள், 5 அல்லது 6 வால்நட்ஸ்

மதிய உணவு: ஒரு கப் சாதம், சிக்கன், வெள்ளரிக்காய் தயிர் பச்சடி, பருப்பு அரை கப்

மாலை ஸ்னாக்ஸ்: பிளாக் காபி ஒரு கிளாஸ்

இரவு உணவு: இரண்டு சப்பாத்தி, 200 கிராம் மீன்

நாள் 3

காலை தூங்கி எழுந்ததும் வெறும் வயிற்றில் ஒரு கிளாஸ் நெல்லிக்காய் எலுமிச்சை இஞ்சி சேர்த்து ஜூஸ் குடிக்க வேண்டும்.

காலை உணவு: இரண்டு பிரட் துண்டுகள், முட்டை ஆம்லெட் 2

மதிய ஸ்னாக்ஸ்: ஆரஞ்சு அல்லது கொய்யாப்பழம் 1

மதிய உணவு: அரை கப் வெண்டைக்காய், தயிர் ஒரு கப், காய்கறி சாலட், இரண்டு சப்பாத்தி

மாலை ஸ்னாக்ஸ்: வேகவைத்த வேர்க்கடலை, ஒரு கிளாஸ் பிளாக் காபி

இரவு உணவு: ஒரு கப் பன்னீர், 2 சப்பாத்தி, பருப்பு அரைக்கப்.

low carb diet

நாள் 4

காலை தூங்கி எழுந்ததும் வெறும் வயிற்றில் ஒரு கிளாஸ் வெள்ளை பூசணி ஜூஸ் குடிக்க வேண்டும்

காலை உணவு: ரெண்டு ராகி இட்லி, தேங்காய் சட்னி, சாம்பார்

மதிய ஸ்னாக்ஸ்: நார்ச்சத்து அதிகம் உள்ள பழங்களை சேர்த்து ஃப்ரூட் சாலட்

மதிய உணவு: மாப்பிள்ளை சம்பா அரிசி சாதம் அரைக்கப், காய்கறி சாலட், மீன் ஒரு துண்டு, தயிர் அரை கப்

மாலை ஸ்னாக்ஸ்: மக்கானா அரைக்கப், ஒரு கிளாஸ் பிளாக் காபி

இரவு உணவு: ரெண்டு அல்லது மூன்று முழு தானிய பிரட், வேகவைத்த சிக்கன், காய்கறி சாலட் அரை கப்

நாள் 5

காலை தூங்கி எழுந்ததும் வெறும் வயிற்றில் ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான தண்ணீரில் எலுமிச்சை புதினா சேர்த்து குடிக்க வேண்டும்

காலை உணவு: வாழைப்பழ மில்க் ஷேக் ஒரு கிளாஸ்

மதிய ஸ்னாக்ஸ்: ஃப்ரூட் சாலட் அரை கப், ஒரு கிளாஸ் மோர்

மதிய உணவு: கவுனி அரிசி சாதம் அரை கப், சிக்கன் கிரேவி அரை கப், தயிர் ஒரு கப், பீன்ஸ் கேரட் பொரியல்

மாலை ஸ்னாக்ஸ்: ஒரு கிளாஸ் பிளாக் காபி

இரவு உணவு: இரண்டு சப்பாத்தி, மூன்று முட்டை

diet foods

நாள் 6

காலை எழுந்ததும் வெறும் வயிற்றில் ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீரில் ஒரு ஸ்பூன் ஆப்பிள் சீடர் வினிகர் சேர்த்து குடிக்க வேண்டும்

காலை உணவு: முட்டை வெள்ளை கரு மூன்று, முழு தானிய பிரட் 2, பீன்ஸ் அரை கப்

மதிய ஸ்னாக்ஸ்: தர்பூசணி ஒரு கப்

மதிய உணவு: கைக்குத்தல் அரிசி சாதம் அரை கப், ஒரு கப் காய்கறிகள், அரை கப் தயிர்

மாலை ஸ்னாக்ஸ்: தேங்காய் துருவல் சேர்த்த காராமணி சுண்டல் அரைக்கப்

இரவு உணவு: 3 சப்பாத்தி, அரை கப் காய்கறி சாலட், அரைக்கப் சோயா

மேலும் படிக்க: உடல் எடை அதிகரிக்கணுமா? இந்த உணவுகளை சாப்பிடுங்க!

நாள் 7

காலை தூங்கி எழுந்ததும் வெறும் வயிற்றில் ஒரு கிளாஸ் சீரக டி குடிக்க வேண்டும்

காலை உணவு: ராகி அடை 2, அவியல் அரை கப்

மதிய ஸ்னாக்ஸ்: கொய்யாப்பழம் அல்லது ஒரு ஆப்பிள்

மதிய உணவு: ஒரு கப் சாதம், அரை கப் காய்கறி சாலட், அரை கப் தயிர்

மாலை ஸ்னாக்ஸ்: பாதாம் மற்றும் வால்நட்ஸ்

இரவு உணவு: அரைக்கப் பன்னீர், அரைக்கப் ராஜ்மா, இரண்டு சப்பாத்தி

Image source: google
HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP