herzindagi
high calorie diet

Weight gain food: உடல் எடை அதிகரிக்கணுமா? இந்த உணவுகளை சாப்பிடுங்க!

ஆரோக்கியமான முறையில் உடல் எடை அதிகரிக்க இந்த 7 நாள் உணவு டயட் முறையை  ட்ரை பண்ணுங்க.
Editorial
Updated:- 2024-03-30, 09:27 IST

உடல் எடையை குறைப்பது எவ்வளவு கடினமோ அதே போல உடல் எடை அதிகரிக்கவும் சற்று கடினம் தான். ஒரு சிலருக்கு என்ன உணவு சாப்பிட்டாலும் உடல் எடை அதிகரிக்காது. இவர்கள் எவ்வளவு சாப்பிட்டாலும் உடல் எடை அதிகரிக்காமல் இருப்பதால் இவர்களை பார்ப்பவர்கள் விசித்திரமாக பார்ப்பது உண்டு. நீங்கள் உடல் எடை அதிகரிக்க விரும்பினால், உங்கள் உடல் எரிப்பதை விட அதிக கலோரிகளை உட்கொள்ள வேண்டும். அதிக கலோரி கொண்ட உணவுகளை சாப்பிடும்போது உங்கள் எடையை அதிகரிக்க உதவும்.

ஆரோக்கியமான உடல் எடை அதிகரிப்பு உணவுத் திட்டத்தை உருவாக்க, நீங்கள் உண்ணும் உணவுகள் சத்தானதாகவும் கலோரிகள் நிறைந்ததாகவும் இருப்பதை முதலில் உறுதி செய்ய வேண்டும். ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை சாப்பிடும்போது ஆரோக்கியமான முறையில் உடல் எடை அதிகரிக்கும். இந்த 7 நாட்கள் உணவு டயட் முறையை பின்பற்றி உடல் எடையை அதிகரிப்பது எப்படி என்று பார்க்கலாம். தினமும் காலையில் 5 ஊறவைத்த பாதாம், 2 ஊறவைத்த அக்ரூட் (வால்நட்) மற்றும் 2 முந்திரி சாப்பிடுவதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள்.

உடல் எடை அதிகரிக்க 7 நாள் டயட்:

நாள் 1

காலை : தினமும் காலை ஒரு கப் பால், ஒரு கப் காய்கறி உப்புமா, ஒரு டேபிள் ஸ்பூன் சிரோஞ்சி 

மதியம் ஸ்னாக்ஸ் : உங்களுக்கு பிடித்த ஏதாவது ஒரு அதிக கலோரி உள்ள பழங்கள் சாப்பிடலாம். உதாரணமாக மாம்பழம், கஸ்டர்ட் ஆப்பிள், சப்போட்டா, பலாப்பழம் போன்ற பழங்கள் சாப்பிடலாம்.

மதிய உணவு: 2 சப்பாத்தி , 1 கப் சோயா கறி, சிறிது புதினா சட்னி

மாலை ஸ்னாக்ஸ்: 1 கப் முளைக்கடிய பயிறு 

இரவு உணவு : 1 சக்கரை வள்ளி கிழங்கு, ஒரு டேபிள் ஸ்பூன் புதினா சட்னி. 

நாள் 2

காலை உணவு - 1 பன்னீர் காய்கறி சாண்ட்விச்

மதிய ஸ்னாக்ஸ் - 1 கப் வறுத்த போஹா, 1 கப் வேர்க்கடலை

மதிய உணவு - 1 கப் துவரம் பருப்புடன் 2 பன்னீர் பராத்தா

மாலை ஸ்நாக்ஸ் - 1 வேகவைத்த ஸ்வீட் கார்ன்

இரவு உணவு - 1 கப் சோயா மசாலா புலாவ்

fat foods

நாள் 3

காலை உணவு - 1 டேபிள் ஸ்பூன் பச்சை சட்னியுடன் 2 பச்சை பயிறு தோசை

மதிய ஸ்னாக்ஸ் - 1 வேகவைத்த உருளைக்கிழங்கு, தேவையான அளவு கருப்பு மிளகு 

மதிய உணவு - 3 கோதுமை ரொட்டியுடன் 1 கப் காய்கறி சாலட்

மாலை ஸ்னாக்ஸ் - 1 கிளாஸ் வாழைப்பழ பேரிச்சை மில்க் ஷேக்

இரவு உணவு - 3 ரக்தா பாட்டிஸ் அல்லது காய்கறி ஊத்தாப்பம்.

மேலும் படிக்க: வீகன் உணவு முறையை பின்பற்றினால் கிடைக்கும் நன்மைகள்

நாள் 4

காலை: ஒரு கப் உருளைக்கிழங்கு அவல் போஹா, ஒரு கப் பால்

மதிய ஸ்னாக்ஸ்: ஒரு கிளாஸ் பாதாம் மில்க் ஷேக்

மதிய உணவு: 2 உருளைக்கிழங்கு மேத்தி பராத்தா, ஒரு கப் சாதம்

மாலை ஸ்னாக்ஸ்: ஒரு கப் பால், ஒரு டேபிள் ஸ்பூன் பாதாம் பவுடர்

இரவு உணவு: ஒரு காய்கறி ரோல், ஒரு டேபிள் ஸ்பூன் அவகேடோ ஜாம்.

high calorie foods

நாள் 5 

காலை : 4 பன்னீர் ரோல், புதினா சட்னி 

மதிய ஸ்னாக்ஸ்: ஒரு கப் பாதாம் மில்க் 

மதிய உணவு: ஒரு கப் சோலே புலாவ், ஒரு கப் காய்கறிகள் 

மாலை ஸ்னாக்ஸ்: ஒரு கப் சோயா, ஒரு கப் பால் 

இரவு உணவு: இரண்டு பாலக் மசாலா தோசை, ஒரு கப் முருங்கைக்கீரை.

நாள் 6

காலை: ஒரு கப் உலர் பழங்கள் மற்றும் நட்ஸ் சேர்த்த ஓட்ஸ்

மதிய ஸ்னாக்ஸ்: ஒரு கிளாஸ் பாதாம் மாம்பழ ஜூஸ் 

மதிய உணவு: 2 கோதுமை சப்பாத்தி, ஒரு கப் உருளைக்கிழங்கு கறி 

மாலை ஸ்னாக்ஸ்: காய்கறிகள் மற்றும் வேர்க்கடலை 

இரவு உணவு: ஒரு சீஸ் காய்கறி சாண்ட்விச், ஒரு டேபிள் ஸ்பூன் புதினா சட்னி.

நாள் 7

காலை: ஒரு வெள்ளரிக்காய், ஒரு கப் தயிர் 

மதிய ஸ்னாக்ஸ்: ஒரு கப் சப்போட்டா பழம்

மதிய உணவு: 2 பாலக் பராத்தா, ஒரு கப் சோயா மசாலா 

மாலை ஸ்னாக்ஸ்: உலர் பழங்கள் மற்றும் நட்ஸ் சேர்த்த மில்க் ஷேக்

இரவு உணவு: ஜீரா ரைஸ், ஒரு கப் பருப்பு

ஆரோக்கியமான முறையில் உடல் எடை அதிகரிக்க இந்த 7 நாள் உணவு டயட் முறையை முயற்சி செய்து பாருங்கள்.  

Image source: google

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com