
வாழ்க்கை முறை நோய்களில் சர்க்கரை நோயும் ஒன்று. சமநிலையற்ற இரத்தச சர்க்கரை அளவுகளால் சர்க்கரை நோய் உண்டாகிறது. சர்க்கரை நோயை முற்றிலும் குணப்படுத்துவதற்கான சிகிச்சைகள் தற்போது இல்லை. இருப்பினும் ஆரோக்கியமான உணவு, உணவு கட்டுப்பாடு மற்றும் உடற்பயிற்சி போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மூலம் சர்க்கரை நோயை கட்டுக்குள் வைத்திருக்கலாம்.
சர்க்கரை நோய் உள்ளவர்கள் தங்கள் உணவில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். வெண்டைக்காய் போன்ற ஒரு சில காய்கறிகள் அவர்களுக்கு ஏராளமான நன்மைகளை தருகின்றன.

ஒரு சில காய்கறிகளும், பழங்களும் சர்க்கரை நோயை கட்டுக்குள் வைத்திருக்க உதவுகின்றன. அவ்வாறு உதவக்கூடிய காய்கறிகளில் ஒன்றுதான் வெண்டைக்காய்.
வெண்டைக்காயில் ஃபோலேட் வைட்டமின் B6, நார்ச்சத்து போன்ற ஏராளமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இதில் முக்கியமாக காணப்படும் வைட்டமின் B, சர்க்கரை நோயின் ஆபத்து காரணியான ஹோமோசிஸ்டைனின் அளவைக் குறைப்பதோடு மட்டுமின்றி நரம்பு இயக்க தடைகளையும் குறைக்க உதவுகிறது.
நமது இரத்த சர்க்கரை அளவை உணவுகள் எவ்வாறு பாதிக்கின்றன என்பதைப் பொறுத்து உணவுகளுக்கு GI தரவரிசை வழங்கப்படுகிறது. குறைந்த GI அளவு கொண்ட உணவுகள் நமது இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்கும். இந்த வகையில், வெண்டைக்காய் மிக குறைந்த கிளைசெமிக் இன்டெக்ஸ்(GI) அளவை கொண்டுள்ளது.

வெண்டைக்காய் கரையாத மற்றும் கரையக்கூடிய நார்ச்சத்துக்களின் சிறந்த ஆதாரமாகும். நார்ச்சத்துக்களை செரிமானம் செய்ய தாமதமாகும், இதனால் சர்க்கரை படிப்படியாக தான் இரத்த ஓட்டத்தில் வெளியிடப்படும். இது இரத்த சர்க்கரை அளவை சீராக வைத்துக்கொள்ள உதவுகிறது. நார்ச்சத்து நிறைந்த உணவுகளை சாப்பிட்டால், நீண்ட நேரம் வயிறு நிறைவாக இருக்கும். இது பசியைத் தடுக்கலாம். எனவே எடை அதிகரிப்பு மற்றும் இன்சுலின் தொடர்பான பிற சிக்கல்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகளும் குறைகிறது.
100 கிராம் வெண்டைக்காயில் 33 கலோரிகள் மட்டுமே உள்ளன. எனவே குறைந்த கலோரி உடைய வெண்டைக்காய் உங்கள் உடல் எடையை கட்டுக்குள் வைத்திருக்க உதவியாக இருக்கும்.

வெண்டைக்காயில் சக்தி வாய்ந்த ஆன்டி ஆக்ஸிடன்ட்களும், ஃபோலேட், லுடீன் மற்றும் பீட்டா கரோட்டின் போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களும் நிறைந்துள்ளன. இதனுடன் இது அழற்சி எதிர்ப்பு பண்புகளையும் கொண்டுள்ளது. இத்தகைய ஊட்டச்சத்துக்கள் நிறைந்த வெண்டைக்காய் உங்கள் அன்றாட உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.

வெண்டைக்காய் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்துவதோடு பல ஆரோக்கிய நன்மைகளையும் கொண்டுள்ளது. அவை பின்வருமாறு.
இந்த பதிவும் உதவலாம்: 14 நாட்களுக்கு சர்க்கரையை தவிர்ப்பதால் உடலில் ஏற்படும் மாற்றங்கள்
இந்த பதிவும் உதவலாம்: நீரிழிவு நோயை கட்டுக்குள் வைக்க உதவும் சிறந்த உணவுகள்.. அவசியம் தெரிஞ்சுக்கோங்க!
இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும், பதிவு குறித்த உங்கள் கருத்தினை கமெண்ட் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.
image source:freepik
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com