spinach for weight loss: குளிர்கால உடல் எடை குறைப்பிற்கு உதவும் கீரை!

உடலில் உள்ள தேவையில்லாத கொழுப்புகளைக் கரைக்க வேண்டும் என்று நினைத்தால் கீரைகள் உங்களுக்கு சிறந்த தீர்வாக அமையும்.

spinach good weight loss

தற்போது குளிர் நம்மை வாட்டி வதைக்கிறது. காலையில் எழுந்திருக்க வேண்டும் என்று நினைத்தாலும் அடிக்குடி குளிருக்குப் போர்வையை இழுத்திப் போர்த்திக் கொண்டு தூங்க வேண்டும் என்று தான் தோணுகிறது. இதோடு ஸ்நாக்ஸ்களும் சேர்ந்துவிடுவதால் உடல் எடையைக் கட்டுக்குள் வைக்க முடியவில்லை. ஆனாலும் அதிகரித்த எடையைக் குறைக்க வேண்டும் என்ற நினைப்பில், டயட் ஈடுபடுவது, ஜிம்மிற்குச் செல்வது போன்ற பல முயற்சிகளில் ஈடுபடுகிறோம். இதோ உங்களுக்காகவே ஆரோக்கியமான முறையில் எப்படி? உடல் எடையைக்குறைக்கலாம் என்பது குறித்த சில டிப்ஸ்கள் இங்கே…

spinach weight loss tips

உடல் எடையைக்குறைக்கும் கீரைகள்:

உடலில் உள்ள தேவையில்லாத கொழுப்புகளைக் கரைக்க வேண்டும் என்று நினைத்தால் கீரைகள் உங்களுக்கு சிறந்த தீர்வாக அமையும்.இதில் உள்ள வைட்டமின்கள் ஏ, சி, மற்றும் கே, இரும்பு, கால்சியம், மெக்னீசியம் , நார்ச்சத்துகள் அதிகளவில் உள்ளது. இவை அனைத்தும் உங்களது உடலுக்கு ஆரோக்கியத்தை சேர்ப்பதோடு உடல் எடையை நிர்வகிக்கும் உதவுகிறது.

குளிர்காலத்தில் கீரைகளால் கிடைக்கும் நன்மைகள்:

  • குளிர்காலம் வந்தாலே பல தொற்றுநோய்களும் நம்முடனே சேர்ந்துப் பயணிக்கும் என்பதால் எப்போதும் விழிப்புணர்வுடன் இருக்கவேண்டும். சளி, இருமல், தொண்டை கரகரப்பு போன்ற பல்வேறு பிரச்சனைகள் வந்தாலும் நீங்கள் கீரைகளை எந்த பருவ காலத்திலும் உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.
  • இதில் உள்ள வைட்டமின் சி சத்துக்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, இரத்த வெள்ளை அணுக்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கிறது.
  • குளிர்ந்த கால நிலையால் வழக்கத்தை விட அதிக சோர்வை நாம் உணர நேரிடும். கீரையில் உள்ள ஊட்டச்சத்துக்ள் உடல் முழுவதும் ஆக்ஸிஜனை எடுத்துச் செல்ல உதவுகிறது.
  • குளிர்காலத்தில் கர்ப்பிணி பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு உணவு முறையின் வாயிலாக ஊட்டச்சத்துக்களைக் கொடுக்க வேண்டும் என்றால் கீரை உதவியாக இருக்கும். எலும்புகளை வலுப்படுத்த உதவுவதோடு இதில் உள்ள நார்ச்சத்துக்கள் உடலின் உள்ள செரிமான அமைப்பை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. மலச்சிக்கல் பிரச்சனையும் தடுக்கிறது.
  • உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமில்லை சருமத்தைப் பளபளப்பாக்க வேண்டும் என்று நினைப்பவர்களும் கீரைகளை தங்களது உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.
  • குளிர்காலத்தில் சருமம் வறண்டு விடும். கீரையில் உள்ள வைட்டமின் ஏ சத்துக்கள் சரும செல்களை சீராக்கி ஆரோக்கியமான சருமத்தைப் பெற உதவியாக உள்ளது.
keerai juice'

இதுப்போன்று பல்வேறு ஊட்டச்சத்துக்கள் கீரையில் அடங்கியுள்ளதால் நீங்கள் இதை உங்களது உணவு முறையில் வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும். பசலைக்கீரை, முருங்கைக்கீரை, அகத்திக்கீரை, அரைக்கீரை, சிறு கீரை, பொன்னாங்கன்னி, மொசு மொசு கீரை என உங்களுக்கு எது கிடைக்கிறதோ? அதை வைத்து நீங்கள் பருப்பு கூட்டு அல்லது கீரை பொரியல் செய்து சாப்பிடுங்கள். மேலும் வழக்கமாக நீங்கள் செய்யும் உடற்பயிற்சிகளையும் உடன் சேர்த்து செய்வது நல்லது.

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP