Flax Seeds Benefits : 1 ஸ்பூன் ஆளி விதையில் ஓராயிரம் நன்மைகள், இப்படியும் ஆளிவிதைகளை சாப்பிடலாம்!

உடல் எடையை குறைப்பது முதல் பல உடல் நலப் பிரச்சனைகளை குணப்படுத்துவது வரை, இந்த சிறிய ஆளி விதைகளில் இவ்வளவு ஆரோக்கிய நன்மைகளா… 

flax seeds usage and benefits

உடல் எடையை வேகமாக குறைக்க வேண்டுமா?

ஆனால் உடலில் ஊட்டச்சத்து பற்றாக்குறை ஏற்படாமலும் இருக்க வேண்டுமா?

இதற்கான சரியான தீர்வு ஆளி விதை! ஊட்டச்சத்துக்களின் களஞ்சியமான ஆளி விதைகள் உடல் எடையை குறைக்கவும் பல உடல் நல பிரச்சனைகளை தடுக்கவும் உதவுகின்றன.

உங்களுடைய உடல் ஆரோக்கியத்தை பராமரிக்க மருத்துவ குணங்கள் நிறைந்த ஆளி விதைகளை தினமும் ஒரு ஸ்பூன் வீதம் எடுத்துக் கொள்ளலாம். இதில் நார்ச்சத்து, ஆன்டி ஆக்ஸிடன்ட்கள், ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள், வைட்டமின் B, இரும்புச்சத்து, புரதம் போன்ற ஏராளமான ஊட்டச்சத்துக்கள் காணப்படுகின்றன. ஆளி விதைகள் எடை இழப்புக்கு உதவுவதோடு மட்டுமின்றி நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தவும், கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்தவும் உதவுகின்றன. ஆளி விதைகளை அன்றாட உணவில் சேர்த்து வர புற்றுநோய், சர்க்கரை நோய் போன்ற பல நோய்களை தடுக்கலாம்.

இந்த பதிவும் உதவலாம்: தினமும் காலையில் வெந்நீர் குடிப்பதால் உடலில் ஏற்படும் அதிசய மாற்றங்கள்!

ஆளிவிதையின் முக்கிய ஊட்டச்சத்து விவரங்கள்

flax seeds benefits for women

  • ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் - ஆளி விதைகள் ஒமேகா-3 பாலிஅன்சாச்சுரேட்டட் கொழுப்பு அமிலங்களைக் கொண்டுள்ளது, இது மூளையைக் கட்டுக்குள் வைத்திருப்பதன் மூலம் அறிவாற்றல் செயல்பாட்டை மேம்படுத்துகிறது.
  • லிக்னான்கள்- ஆளிவிதை லிக்னான் எனும் ஆன்டிஆக்ஸிடன்ட்களின் நல்ல ஆதாரமாகும். இவை ஈஸ்ட்ரோஜன் ஹார்மோனின் இயற்கையான உற்பத்திக்கு உதவுகின்றன. இதை தவிர லிக்னான்கள் புற்றுநோய், சர்க்கரை நோய் மற்றும் இதய நோய்களின் அபாயத்தை குறைக்கின்றன.
  • தாவரப்பசைப்பொருள் - குடலை ஆரோக்கியமாக வைத்திருக்கவும், உடலில் உள்ள ஊட்டச்சத்துக்களை சரியான முறையில் உறிஞ்சுவதற்கும் ஆளி விதையின் தாவரப்பசைப்பொருள் உதவுகிறது. இந்த பிசின் போன்ற திரவம் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தவும், மலச்சிக்கலை நீக்கவும், வயிற்று புண்களை குணப்படுத்தவும் உதவியாக இருக்கும்.

ஆளி விதை நன்மைகள்

  • பலவிதமான ஹார்மோன் பிரச்சனைகளுக்கு ஆளி விதைகள் தீர்வாக அமைகிறது. இதில் உள்ள லிக்னான்கள் ஈஸ்ட்ரோஜன் அளவை சீராக வைத்துக் கொள்ள உதவுகின்றன. ஆளி விதைகளை தினமும் சாப்பிட்டு வந்தால் மெனோபாஸின் அறிகுறிகளையும் சமாளிக்கலாம்.
  • ஒழுங்கற்ற மாதவிடாய் சுழற்சியை சீராக்க ஆளி விதைகளை எடுத்துக் கொள்ளலாம். இது தலைவலி, பதட்டம், மனநிலை மாற்றம் போன்ற பல நிலைகளை மேம்படுத்த உதவுகிறது. இது மாதவிடாய் நாட்களில் ஏற்படும் அதிக உதிரப்போக்கையும் கட்டுப்படுத்த உதவுகிறது. உடல் உறுப்புகளின் செயல் திறனை மேம்படுத்தவும், மார்பக புற்று நோயின் அபாயத்தை குறைக்கவும் ஆளி விதைகளை எடுத்துக் கொள்ளலாம்.
  • ஆளி விதைகள் இதய ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. இது இரத்த நாளங்களில் ஏற்படும் வீக்கத்தை கட்டுப்படுத்துகிறது. மேலும் ஆய்வுகளின் படி ஆளி விதைகளை தினமும் சாப்பிட்டு வந்தால் உடலில் உள்ள நல்ல கொலஸ்ட்ராலின் அளவுகள் மேம்படும். இதனுடன் கெட்ட கொலஸ்ட்ராலையும் குறைக்கலாம்.
  • ஆளி விதைகளில் உள்ள அதிக அளவு நாச்சத்து மலச்சிக்கல் போன்ற வயிறு சார்ந்த பிரச்சனைகளை தடுக்க உதவுகிறது. மேலும் இதில் உள்ள நார்ச்சத்து உங்களை நீண்ட நேரம் நிறைவாக வைத்திருப்பதன் மூலம் எடை இழப்புக்கு உதவும்.
  • காய்கறி மற்றும் பழங்களுடன் ஒப்பிடுகையில், ஆளி விதைகளில் அதிக அளவு ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் உள்ளன. தினமும் ஒரு டீஸ்பூன் ஆளி விதைகளை சாப்பிட்டு வந்தால் வயது முதிர்வின் அறிகுறிகளை குறைக்கலாம்.
  • ஆளி விதைகள் சருமம் மற்றும் கூந்தல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. இதில் அதிக அளவு ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் காணப்படுகின்றன.

ஆளி விதை சாப்பிடும் முறை

flax seeds uses

  • ஆளி விதைகளை பொடி செய்து வைத்துக் கொள்ளலாம். தேவைப்படும் பொழுது இந்த பொடியை உங்கள் உணவுடன் சேர்த்துக் கொள்ளலாம்.
  • பிஸ்கட், சப்பாத்தி அல்லது பிரட் போன்ற உணவு வகைகளுக்கு மாவு பிசையும் பொழுது ஒரு டீஸ்பூன் ஆளி விதை பொடியை சேர்த்துக்கொள்ளலாம்.
  • சாலட் அல்லது சமைத்த காய்கறிகளின் மீது ஆளி விதை பொடியை தூவி பரிமாறலாம்.
  • சூடான உடல் வாகு உள்ளவர்கள், 1 டீஸ்பூன் ஆளி விதையை இரவு முழுவதும் ஊறவைத்து மறுநாள் காலையில் எடுத்துக்கொள்ளலாம்.
  • அழகாகவும், இளமையாகவும், நோய் நொடியின்றி ஆரோக்கியமாகவும் வாழ, ஒரு டீஸ்பூன் ஆளி விதையை உங்கள் தினசரி உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

இந்த பதிவும் உதவலாம்: வாய் விட்டு சிரித்தால், இதய நோயும் விட்டு போகுமா?

இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.

image source:freepik

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP