herzindagi
pumpkin soup making

அல்சர் பிரச்சனைக்குத் தீர்வு காணும் வெண்பூசணி சூப்!

<span style="text-align: justify;">வயிற்றுப்புண் பிரச்சனை உள்ளவர்கள் வெண்பூசணியை உணவு முறையில் சேர்த்துக் கொள்ளும் குடலில் உள்ள அமிலத்தன்மையை சமன் செய்கிறது.</span>
Editorial
Updated:- 2024-03-24, 23:21 IST

இன்றைக்கு அல்சர் எனப்படும் வயிற்றுப்புண் பிரச்சனை இல்லாதவர்கள் யாருமே இருக்க முடியாது. துரித உணவுகள், பதப்படுத்தப்பட்ட உணவுகள், நேரம் தவறி உட்கொள்வது, காரம் நிறைந்த உணவுகளை உட்கொள்வது போன்ற பல காரணங்களால் ஏற்படக்கூடிய அல்சர் பிரச்சனையை ஆரம்பத்திலேயே கண்டறியாவிடில் பல்வேறு நெஞ்செரிச்சல், மலச்சிக்கல், வயிறு எரிச்சல், நாள் கணக்கில் தொடரும் போது புற்றுநோய் பாதிப்பு ஏற்படும் அபாயம் கூட உள்ளது. 

இதிலிருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக மருத்துவமனைகள் மருந்துகளை வாங்கி சாப்பிடும் போது, பல நேரங்களில் வயிற்றுப்புண்களை அதிகமாக்கி விடும். எனவே தான் அல்சர் பிரச்சனைக்கு வீட்டு வைத்தியம் தான் சிறந்த தேர்வு என்பார்கள். இதோ இன்றைக்கு அல்சர் பிரச்சனையைத் தீர்க்க வெண்பூசணி சூப் எப்படி செயல்படும்? இதைத் தயார் செய்வது எப்படி? என்பது குறித்து இங்கே அறிந்துக் கொள்ளலாம் வாருங்கள். 

 

pumpkin soup ()

மேலும் படிக்க: தாய்ப்பால் அதிகரிக்க இந்த வீட்டு வைத்தியங்களைப் பின்பற்றுங்க! 

அல்சர் பிரச்சனையைத் தீர்க்கும் வெண்பூசணி சூப்:

வெண்பூசணியில் வைட்டமின் சி , தயாமின், நியாசின், போலட், பி- காம்ப்ளக்ஸ் போன்ற பல்வேறு ஊட்டச்சத்துக்கள் உள்ளதால் உடலுக்கு ஆற்றலை அளிக்கிறது. குறிப்பாக வயிற்றுப்புண் பிரச்சனை உள்ளவர்கள் வெண்பூசணியை உணவு முறையில் சேர்த்துக் கொள்ளும் குடலில் உள்ள அமிலத்தன்மையை சமன் செய்கிறது. மேலும் வயிற்றில் குடல் புழுக்கள் உருவாவதைத் தடுக்கும் முயற்சியிலும் வெண்பூசணி செயல்படுகிறது என்பதால் தாராளமாக தினமும் உங்களது உணவில் கட்டாயம் சேர்த்துக் கொளள்ள வேண்டும். 

வெண்பூசணி சூப் செய்முறை:

தேவையான பொருட்கள்

  • வெண்பூசணி
  • வெண்ணெய்- 2 டீஸ்பூன்
  • கொத்தமல்லி - சிறிதளவு
  • மிளகுத்தூள் - 1 டீஸ்பூன்
  • சின்ன வெங்காயம் - 10

செய்முறை:

  • வெண்பூசணி சூப் செய்வதற்கு முதலில் ஒரு கடாயில் வெண்ணெய் ஊற்றி சூடேறியதும், வெங்காயம் மற்றும் பூண்டு சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
  • பின்னர் நறுக்கி வைத்துள்ள வெண்பூசணி மற்றும் உப்பு சேர்த்து சிறிது நேரம் வதக்கியவுடன் தண்ணீர் ஊற்றி வேக வைக்க வேண்டும். 
  • பூசணி நன்கு வெந்தவுடன் ஒரு பாத்திரத்தில் மாற்றி ஆற வைக்க வேண்டும். பின்னர் ஒரு மிக்ஸியில் வெண்பூசணி, வெங்காயம் மற்றும் பூண்டு ஆகியவற்றைச் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும். 

மேலும் படிக்க: அவல் சாப்பிடுவதால் நம் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள்!

white pumpkin soup

இதையடுத்து ஒரு பாத்திரத்தில் அரைத்து வைத்துள்ள பூசணி கலவை மற்றும் மிளகு தூள் சேர்த்து நன்கு கொதிக்க வைத்தால் போதும். சுவையான வெண்பூசணி சூப் ரெடி. பரிமாறுவதற்கு முன்னதாக சிறிதளவு கொத்தமல்லி இலைகளைத் தூவி பரிமாறுங்கள். சுவையுடன் ஆரோக்கியத்தையும் உங்களுக்கு சேர்த்தே கொடுக்கும். இனி வாரத்திற்கு ஒருமுறையாவது இந்த சூப் செய்து சாப்பிட்டு அல்சர் பிரச்சனைக்குத் தீர்வு காணுங்கள்.

 

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com