herzindagi
food heart

Heart Health Foods: இதய நோய்களை தடுக்க இந்த உணவுகளை சாப்பிடுங்க!

இதய நோய்களை தடுக்க உதவும் உணவுகள் குறித்து இந்த கட்டுரையில் பார்க்கலாம்.
Editorial
Updated:- 2024-04-05, 17:21 IST

இன்றைய காலகட்டத்தில் வயது வரம்பு இன்றி குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் மாரடைப்பு பக்கவாதம் போன்ற இதய நோய்கள் ஏற்படுகிறது இதற்கு ஒரு முக்கிய காரணம் உணவு முறை தான். நாம் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த ஆரோக்கியமான உணவு முறையும் ஆரோக்கியமான பழக்க வழக்கங்களும் மிகவும் அவசியம். நாம் தினசரி உட்கொள்ளும் உணவு ஆரோக்கியமானதாக இருக்கிறதா மற்றும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த காய்கறி மற்றும் பழங்களை சாப்பிடுவதை பழக்கம் செய்து கொள்ள வேண்டும். இதயம் ஆரோக்கியமாக இருந்தால் தான் நம் உடலும் ஆரோக்கியமாக இருக்கும். உங்களுக்கு பிடித்த உணவுகளை சாப்பிடும் போது அதுவே உங்கள் இதய ஆரோக்கியத்திற்கு எதிரியாக கூட மாறலாம். குறிப்பாக பிராசஸ்டு உணவுகள், வறுத்த உணவுகள், பர்கர், பீட்சா போன்ற அதிக கொழுப்பு நிறைந்த உணவுகள் இதய ஆரோக்கியத்தை பாதிக்கிறது. இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தி இதய நோய்கள் வராமல் தடுக்க தினசரி இந்த உணவுகளை காலையில் சாப்பிட்டு வரலாம். அது என்ன உணவுகள் என்பது குறித்து இந்த கட்டுரையில் பார்க்கலாம்.

நம் இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள முழு தானிய உணவு வகைகள், உலர் பழங்கள் மற்றும் நட்ஸ் வகைகள், பருப்பு வகைகள், மீன், கோழி, இறைச்சி மற்றும் குறைந்த கொழுப்புள்ள பால், பால் சார்ந்த உணவு வகைகள் போன்றவற்றை சாப்பிட்டு வரலாம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். 

மேலும் படிக்க: இரவில் பூண்டு சாப்பிட்டால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் என்ன?

ஆலிவ் எண்ணெய்:

olive oil in a bottle which may

இது ஒரு ஆரோக்கியமான எண்ணெய் என்பதால் நாம் சமையலுக்கு பயன்படுத்த பரிந்துரைக்கப்படுகிறது. இந்த ஆலிவ் எண்ணெய்யில் ஆக்ஸிஜனேற்றங்கள் அதிக அளவு நிறைந்துள்ளது. மேலும் இது குறைவான கலோரிகள் கொண்டது. நீங்கள் தினசரி சமைக்கும் உணவு பொருட்களில் இந்த ஆலிவ் எண்ணையை பயன்படுத்தி வந்தால் உங்கள் உடலில் இருக்கும் கெட்ட கொழுப்பை குறைக்க பெரிதும் உதவுகிறது. இதனால் உங்கள் இதய ஆரோக்கியம் மேம்பட்டு இதய நோய்கள் வராமல் தடுக்க உதவும்.

சால்மன் மீன்:

இதய நோயாளிகளுக்கு பரிந்துரைக்கப்படும் ஒரு முக்கியமான உணவு இந்த சால்மன் மீன். இந்த மீன் உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் நீங்கள் வேறு ஏதேனும் கடல் உணவுகள் அல்லது ஒமேகா-3 கொழுப்புகள் நிறைந்த மீன்களை சாப்பிட்டு வரலாம். இந்த மீன் வகைகள் இதய ஆரோக்கியத்திற்கு நல்லது. மருத்துவ ஆராய்ச்சிகள் படி ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் அதிகம் உள்ள உணவு வகைகள் இதய ஆரோக்கியத்திற்கு சிறந்தது என்று கூறப்படுகிறது. தினசரி உணவில் சால்மன் மீன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் இதய நோய் ஏற்படும் அபாயத்தை குறைக்கலாம்.

கீரை வகைகள்:

Spinach

கீரை என்று சொன்னாலே குழந்தைகள் பலரும் முகம் சுளித்து விடுவார்கள். ஆனால் இந்த கீரை வகைகளில் தான் நம் உடலுக்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களும் நிறைந்துள்ளது. அது மட்டும் இல்லாமல் இந்த கீரை வகைகளில் அதிக அளவு நார்ச்சத்து நிறைந்துள்ளது. இதய நோயை வராமல் தடுக்க உதவக்கூடிய போலேட் எனப்படும் முக்கியமான வைட்டமின் பி இந்த கீரை வகையில் உள்ளது. மேலும் நம் இதய ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் வைட்டமின் ஏ, ஆன்டி ஆக்சிடென்ட்கள், பைபர் போன்ற ஊட்டச்சத்துக்கள் இந்த கீரையில் அதிக அளவு நிறைந்துள்ளது. இந்தக் கீரை வகையை நீங்கள் சூப் செய்தோ அல்லது சாலட் வகைகளில் சேர்த்தோ சாப்பிட்டு வரலாம். இல்லையென்றால் கீரை பொரியல் போல செய்து உணவில் சேர்த்து சாப்பிட்டு வரலாம்.

நட்ஸ் வகைகள்:

பழங்கள், காய்கறிகள் போலவே நாம் அடிக்கடி நட்ஸ் வகைகளையும் விதைகளையும் சாப்பிட்டு வருவது நம் உடலுக்கு ஊட்டச்சத்தை அளிக்க உதவுகிறது. ஆளி விதை, சியா விதை, பாதாம், அக்ரூட் பருப்பு போன்றவை இதய ஆரோக்கியத்திற்கு நல்லது. உலர் நட்ஸ் மற்றும் உலர் பழங்களை ஓட்ஸ் கலவையோடு சேர்த்து தினமும் காலையில் உணவாக சாப்பிட்டு வரலாம். இந்த நட்ஸ் வகைகளில் நிறைந்துள்ள ஓமேகா 3 கொழுப்பு அமிலங்கள் இதய ஆரோக்கியத்தை பாதுகாத்து இதய நோய்கள் ஏற்படும் அபாயத்தை குறைக்க உதவுகிறது. எனவே தினமும் இரண்டு வேலையாவது நீங்கள் உங்கள் உணவில் நட்ஸ் வகைகளை சேர்த்து சாப்பிடலாம்.

Image source: google

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com