Brain Tumor Diet : மூளை கட்டியில் இருந்து மீண்டு வர உதவும் ஆரோக்கிய உணவுகள்!

மூளை கட்டியால் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சையுடன், ஆரோக்கியமான உணவு முறையை பின்பற்றினால் மூளை கட்டியிலிருந்து எளிதில் மீண்டு வரலாம்….

diet for brain tumor patients

உடலுக்கு வலிமையும் ஆற்றலும் தரும் உணவுகள்

மூளை கட்டிக்கான சிகிச்சையை மேற்கொள்ளும் பொழுது பசியின்மையை உணரலாம். இருப்பினும் நோய் தொற்றுகளை எதிர்த்துப் போராட உடல் வலிமையும், ஆற்றலும் அவசியம். இதை பூர்த்தி செய்ய ஆப்பிள் பியூரி, பன்னீர், மசித்த காய்கறிகள், ஊட்டச்சத்து சப்ளிமென்ட் அல்லது வீட்டில் தயாரிக்கப்பட்ட மில்க் ஷேக், ஸ்மூத்தீஸ் மற்றும் சமைக்கப்பட்ட தானியங்களை உங்கள் அன்றாட உணவில் சேர்த்துக் கொள்ளலாம். உங்கள் உடல் எடையை பராமரிக்கவும் உடல் வலிமையை அதிகரிக்கவும் இந்த உணவுகள் உதவும்.

சமச்சீரான உணவுகள்

உங்கள் ஊட்டச்சத்து தேவையை பூர்த்தி செய்ய சமச்சீரான உணவை சாப்பிட வேண்டும். இதற்கு பலவிதமான வண்ணங்களில் இருக்கக்கூடிய பழங்கள், காய்கறிகள், தானியங்கள், பருப்பு வகைகள் மற்றும் ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடலாம். உங்களுடைய உணவு வண்ணங்கள் நிறைந்த வானவில் போல இருக்க வேண்டும். இதிலுள்ள ஊட்டச்சத்துக்கள் மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் மூலம் ஊட்டச்சத்து பற்றாக்குறையை போக்கலாம்.

தொற்று நோயின் அபாயத்தை குறைக்கும் உணவுகள்

diet for brain tumor

  • உடல் நோய்த்தொற்றுகளை எதிர்த்து போராட ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் உதவுகின்றன. இந்நிலையில் உங்களுடைய உணவில் வைட்டமின் A, C, D, E, துத்தநாகம் மற்றும் செலினியம் போதுமான அளவில் இருக்க வேண்டும். இதற்கு பின்வரும் உணவுகளை உங்கள் அன்றாட உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.
  • கேரட், பூசணி, சர்க்கரை வள்ளி கிழங்கு, பப்பாளி, கிவி போன்றவற்றில் வைட்டமின் A நிறைந்துள்ளது.
  • மாம்பழம், ப்ரோக்கோலி, அன்னாசி, தக்காளி, மிளகுத்தூள், காலிபிளவர், நெல்லிக்காய், ஆரஞ்சு, எலுமிச்சை போன்ற உணவுகளில் வைட்டமின் C அதிகமாக உள்ளது.
  • கொழுப்பு நிறைந்த மீன், காட் லிவர் எண்ணெய், முட்டையின் மஞ்சள் கரு காளான், பால் மற்றும் தயிர் போன்ற உணவுகளில் வைட்டமின் D உள்ளது.
  • வைட்டமின் E தேவையை பூர்த்தி செய்ய பாதாம், வேர்க்கடலை, சூரிய காந்தி விதைகள், பீட்ரூட் கீரைகள் போன்ற உணவுகளை சாப்பிடலாம்.
  • பயிறு பீன்ஸ் சணல் விதைகள், டோஃபு மற்றும் முழு தானியங்களில் துத்தநாகம் அதிகமாக உள்ளது.
  • செலினியம் தேவையை பூர்த்தி செய்ய பிரவுன் ரைஸ், பன்னீர், காளான், கீரை, முந்திரி, வாழைப்பழம், சிக்கன் போன்ற உணவுகளை எடுத்துக் கொள்ளலாம்.

மேலும் நீண்ட நாட்களாக ஸ்டெராய்டு எடுத்துக் கொள்பவர்கள் எலும்புகளின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். இந்நிலையில் கால்சியம் தேவையை பூர்த்தி செய்யக்கூடிய பால் தினை, பால் சார்ந்த பொருட்கள் போன்ற கால்சியம் நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும் மேலும் மருத்துவரின் ஆலோசனையுடன், தேவைப்பட்டால் வைட்டமின் D சப்ளிமெண்ட்களையும் எடுத்துக் கொள்ளலாம்.

healthy diet for brain tumor patients

காலை எழுந்தவுடன்

காலையில் எழுந்தவுடன் ஒரு கப் பால் மற்றும் ஊற வைத்த பாதாம் மற்றும் வால்நட்டுகளை சாப்பிடலாம்.

காலை உணவு

காலை உணவுக்கு இட்லி சாம்பார் போன்ற சீரான உணவுகளை எடுத்துக் கொள்ளலாம். சாம்பாரில் காய்கறிகளை சேர்த்துக் கொள்ள மறக்காதீர்கள். காலை உணவிற்கு பிறகு உள்ள இடைப்பட்ட நேரத்தில் வறுத்த விதைகள் அல்லது பழங்களை சாப்பிடலாம்.

மதிய உணவு

மதிய உணவிற்கு தவறாமல் கீரையை சேர்த்துக் கொள்ளுங்கள். உணவுடன் தயிர் மற்றும் உங்களுக்கு விருப்பமான காய்கறி அல்லது மீன் போன்ற ஆரோக்கியமான இறைச்சியை சேர்த்துக் கொள்ளலாம்.

மாலை நேரம்

மாலையில் ஒரு கப் மில்க் ஷேக் குடிக்கலாம் அல்லது பன்னீர்(5-7) துண்டுகளை கிரில் செய்து சாப்பிடலாம்.

brain tumor diet plan

இரவு உணவு

இரவு கிச்சடி அல்லது கஞ்சி எடுத்துக்கொள்ளலாம். இரவு தூங்கச் செல்வதற்கு முன் ஒரு கிளாஸ் மஞ்சள் பால் குடிக்கலாம்.

மேலே குறிப்பிடப்பட்டுள்ள டயட் பிளான் பொதுவானது. ஆகையால் நீங்கள் ஏதேனும் உணவு முறையை பின்பற்றுவதற்கு மருத்துவர் அல்லது உணவியல் நிபுணரை ஆலோசனை செய்வது நல்லது. உங்கள் உடல் எடை மற்றும் தேவைக்கு ஏற்ற பிரத்தியேகமான டயட் ப்ளானை வடிவமைத்து கொள்ளவும்.

இந்த பதிவும் உதவலாம்: ஓரே வாரத்தில் உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி ஒல்லியான இடை அழகு தரும் 5 உணவுகள்!

இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.

image source:freepik

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP