Garlic Benefits: இரவில் பூண்டு சாப்பிட்டால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் என்ன?

 இரவில் பூண்டு சாப்பிட்டால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் என்ன என்பது குறித்து இந்த கட்டுரையில் பார்க்கலாம்.

garlic at night

இன்றைய காலகட்டத்தில் நம்மில் பலருக்கும் உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள போதுமான நேரம் கிடைப்பதில்லை. ஆரோக்கியமான ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை நாம் உட்கொள்வது மிகவும் அவசியம். இரவில் தூங்குவதற்கு முன் பூண்டு சாப்பிடலாமா என்ற கேள்வி பலருக்கும் இருக்கிறது. பூண்டில் நம் உடல் ஆரோக்கியமாக இருக்க உதவும் பல சிறப்பு பொருட்கள் உள்ளன. ஒவ்வொரு நாளும் பூண்டை நீங்கள் தனியாகவோ அல்லது உங்கள் உணவோடும் சேர்த்து சாப்பிடலாம். படுக்கைக்கு முன் பூண்டு சாப்பிடுவது கூட நல்லது. இரவில் தூங்குவதற்கு முன்பு பூண்டு சாப்பிட்டால் நம் உடலில் ஏற்படும் ஆரோக்கிய நன்மைகள் குறித்து இந்த கட்டுரையில் பார்க்கலாம்.

இரத்த ஓட்டத்தை சீராக்கும்:

இரவில் பூண்டு சாப்பிட்ட பிறகு, சிறிது தண்ணீர் குடிப்பது அவசியம். படுக்கைக்கு முன் பூண்டு சாப்பிடுவது இரத்தக் கட்டி வராமல் தடுக்கும் மற்றும் நமது இரத்த ஓட்டத்தை மேம்படுத்த உதவும்.

சளி, ஜலதோஷம் நீங்கும்:

உங்களுக்கு சளி அல்லது இருமல் இருந்தால், படுக்கைக்கு முன் பூண்டு சாப்பிடுவது உங்களை வேகமாக குணப்படுத்தி நன்றாக உணர வைக்கும். இதில் உள்ள ஆன்டி ஆக்சிடன்ட் பண்புகள் நம் உடலுக்கு தேவையான ஊட்டச்த்துக்களை அளிக்க உதவுகிறது.

garlic

வாய்வு தொல்லை குணமாகும்:

பூண்டு வாயுவுக்கும் உதவும், ஆனால் நாம் இதனை அதிகமாக சாப்பிடக்கூடாது. தினசரி இரவு ஒரு பல் பூண்டு சாப்பிட்டால் போதுமானது. நமக்கு வாயு இருந்தால், படுக்கைக்கு முன் பூண்டு சாப்பிடுவது நல்லது.

புற்றுநோயை தடுக்கும்:

பூண்டில் புற்று நோய் வராமல் பாதுகாக்கும் சிறப்புப் பொருட்கள் உள்ளன. நாம் படுக்கைக்கு செல்லும் முன் இரவில் பூண்டு சாப்பிட்டால், அது புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பைக் குறைக்க உதவுகிறது.

நோய் தோற்று வராமல் தடுக்கும்:

நம் காதுகளிலோ, பாதங்களிலோ பாக்டிரியா தொற்று ஏற்பட்டால், அதனைப் போக்க சிறிது பூண்டை நசுக்கிப் போடலாம். இது எளிதில் குணப்படுத்தி நோய் தொற்றுகள் ஏற்படாமல் இருக்க பெரிதும் உதவுகிறது.

இதய ஆரோக்கியம்:

நம் இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள முதலில் நம் உடலில் கொலஸ்ட்ரால் அளவைக் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும். நமக்கு அதிக கொலஸ்ட்ரால் இருந்தால், படுக்கைக்கு செல்லும் முன் பூண்டு சாப்பிடுவது நல்லது. இது உங்கள் உணவு செரிமானத்தை சீர் செய்யவும் உதவுகிறது.

குறிப்பு:

நமது உடல் ஆரோக்கியத்திற்கு பூண்டு பயன்படுத்துவதற்கு முன்பு எப்போதும் நம் மருத்துவரிடம் கலந்து பேசுவது மிகவும் அவசியம். ஏனென்றால் இந்த பூண்டு நம் வயிற்றை பாதித்து, சிலருக்கு வயிற்று கோளாறு பிரச்சனைகளை ஏற்படுத்தும்.

Image source: google

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP