உடல் பருமன், நீரிழிவு நோய், இதய நோய்கள் போன்ற பலவற்றிற்கும் நாம் சாப்பிடும் கார்போஹைட்ரேட் உணவுகள் தான் முக்கிய காரணம். நாம் தினமும் சாப்பிடும் வெள்ளை சாதத்தில் இந்த கார்போஹைட்ரேட் அதிகம் உள்ளது. சர்க்கரை நோயாளிகள் பலருக்கும் மருத்துவர் வெள்ளை அரிசி சாப்பிடுவதை தவிர்த்து கோதுமை தோசை அல்லது கோதுமை சப்பாத்தி சாப்பிட சொல்லுவார்கள். ஆனால் நம் தமிழர்களுக்கோ ஒரு பெரிய வாழை இலையை விரித்து அதில் சூடான வெள்ளை சாதத்தை போட்டு சாம்பார், ரசம், மோர், கூட்டு பொரியல், அப்பளம் என்று ஃபுல் மீல்ஸ் சாப்பிட்டு தான் பழக்கம். இன்னும் சிலருக்கு காலை, மதியம், இரவு என்று மூன்று வேலையும் சாதம் சாப்பிடாமல் தூக்கமே வராது.
நம் முன்னோர்கள் காலை, மதியம், இரவு என்று மூன்று வேலையும் சாதம் சாப்பிட்டு வந்தார்கள். ஆனால் அவர்கள் இன்றும் ஆரோக்கியமாக இருக்க காரணம், அவர்கள் வெள்ளை அரிசியை பயன்படுத்தியது மிகவும் குறைவு. என்னது வெள்ளை அரிசி இல்லாமல் சாதமா என்று குழப்பமா இருக்கா? அப்படி ஆனால் இந்த கட்டுரை உங்களுக்கு தான். வெள்ளை அரிசிக்கு பதிலாக சாதம் போல சமைத்து சாப்பிடக்கூடிய உணவு வகைகளை இந்த கட்டுரையில் பார்க்கலாம்.
மேலும் படிக்க: நீண்ட ஆயுளுக்கு உட்கொள்ள வேண்டிய நார்ச்சத்து உணவுகள்
வெள்ளை அரிசிக்கு பதிலாக இந்த பார்லியை தினசரி உணவில் சேர்த்து சாப்பிட்டு வரலாம். ஊட்டச்சத்துக்களின் பவர் ஹவுஸ் இந்த பார்லி. இது உடல் பருமன், சிறுநீரகப் பிரச்சினைகள் போன்ற பல பிரச்சனைகளுக்கு இது தீர்வளிக்கிறது. உடல் எடை குறைக்க முயற்சி செய்பவர்கள் இந்த பார்லியை கஞ்சி போல சமைத்து சாப்பிட்டு வரலாம். இதில் நார்ச்சத்து அதிகம் நிறைந்துள்ளது மற்றும் கலோரிகள் மிகவும் குறைவு.
வரகு சாமை, தினை, குதிரைவாலி போன்ற சிறுதானியங்களின் ஒரு வகை இந்த கினோவா. இதில் நார்ச்சத்து அதிகம் நிறைந்துள்ளது. இது ஒரு குளூட்டன் ஃப்ரீ தானியம் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இதில் கலோரிகள் குறைவாக இருப்பதால் உடல் எடை குறைக்க பெரிதும் உதவுகிறது. கினோவா வைத்து பொங்கல் சமைத்து தினமும் உணவாக சாப்பிட்டு வரலாம்.
இது ஒரு வகையான சேனைக்கிழங்கு. வெள்ளை நிறத்தில் இருக்கும் இந்த சேனைக்கிழங்கை ஷிராடகி என்று சொல்வார்கள். கோதுமை மற்றும் வெள்ளை அரிசியில் உள்ள குளூட்டனுக்கு பதிலாக சீன மக்கள் இதனை அதிகம் பயன்படுத்துவார்கள். நூடுல்ஸ், பாஸ்தாவுக்கு பதிலாக அவர்கள் இந்த சேனைக்கிழங்கில் செய்யும் நூடுல்ஸை உணவாக பயன்படுத்துகிறார்கள். இது ஜவ்வரிசி போல சுவையில் இருக்கும். நம் தினசரி உணவில் இந்த சேனைக்கிழங்கை அரிசிக்கு பதிலாக துருவி எடுத்து சமைத்து சாப்பிட்டு வரலாம்.
ப்ராக்கோலியை துருவினால் நமக்கு உதிரி உதிரியாக அரிசி போல கிடைக்கும். இதனை 10 நிமிடம் ஆவியில் வேகவைத்து அரிசி உணவுக்கு பதிலாக சாப்பிட்டு வரலாம். இந்த ப்ரக்கோலியில் கலோரிகள் மிகவும் குறைவு மற்றும் ஊட்டச்சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளது. இதனால் உடல் எடையை வேகமாக குறைக்க இது பெரிதும் உதவுகிறது.
Image source: google
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com