Red Banana Benefits: செவ்வாழை சாப்பிடுவதால் உடலுக்கு கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்!

நம் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் நிறைந்த செவ்வாழை பழம் சாப்பிடுவதால் ஏற்படும் ஆரோக்கிய நன்மைகள் குறித்து இந்த கட்டுரையில் பார்க்கலாம்.

red banana

இன்றைய காலகட்டத்தில் பலரும் காலை உணவு சாப்பிடுவது இல்லை. காலையில் உணவை தவிர்ப்பது நம் உடலுக்கு கேடு விளைவிக்கும். தினசரி காலையில் சமைக்க நேரம் இல்லை என்றப் போது ஏதேனும் பழங்கள் சாப்பிட்டு வரலாம். அதிலும் வாழைப்பழம் மிக சிறந்து ஒரு உணவு என்று சொல்லலாம். முக்கனிகளில் ஒன்றான இந்த வாழைப்பழம் அனைத்து சீசன்களிலும் கிடைக்கும். இதன் விலை கூட சற்று மலிவு தான். இந்த வாழைப்பழத்தில் பல வகைகள் உள்ளது. இருப்பினும், செவ்வாழை பழம் அதிக சத்தானது. குறிப்பாக, இந்த செவ்வாழைப் பழத்தில் பீட்டா கரோட்டின் மற்றும் வைட்டமின் சி அதிக அளவு நிறைந்துள்ளது. இப்போது இந்த செவ்வாழை பழத்தை சாப்பிடுவதால் நம் உடலுக்கு கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் குறித்து இந்த கட்டுரையில் பார்க்கலாம்.

சிறுநீரக கற்களை தவிர்க்கும்:

செவ்வாழையில் உள்ள உயர்தர பொட்டாசியம் சிறுநீரகக் கற்களைத் தடுக்க உதவும் என்பதால், சிறுநீரகக் கற்களைத் தவிர்க்க விரும்பும் நபர்கள் தினமும் உங்கள் உணவில் செவ்வாழைப் பழத்தை சேர்த்து சாப்பிட்டு வரலாம்.

எலும்புகள் வலுவாகும்:

strong bones

ஒவ்வொரு நாளும் செவ்வாழை சாப்பிடுவதன் மூலம், உங்கள் உடல் அதிக கால்சியம் சத்தை உறிஞ்சுகிறது. இது நம் எலும்புகளை பலப்படுத்த பெரிதும் உதவுகிறது. எனவே எலும்புகள் வலுவாக இருக்க வேண்டுமெனில், தினமும் செவ்வாழைப் பழத்தை சாப்பிடுங்கள்.

எடை குறையும்:

உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் அதிக கலோரி கொண்ட உணவுகளை சாப்பிடக்கூடாது. ஆனால் மற்ற உணவுகளுடன் ஒப்பிடும்போது இந்த செவ்வாழைப் பழத்தில் கலோரிகள் மிகவும் குறைவு. எனவே உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் தினமும் காலையில் ஒரு செவ்வாழைப் பழத்தை சாப்பிட்டு வர, பசி நீண்ட காலம் நீடிக்காது.

ஹீமோகுளோபின் அதிகரிக்கும்:

நம் உடலில் ஹீமோகுளோபின் அளவு குறைந்தால் பல நோய்கள் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே நம் உடலில் உள்ள இரத்த அணுக்களின் அளவை சரியாக வைத்திருக்க வேண்டும். இதற்கு இந்த செவ்வாழை அதிக உதவியாக இருக்கிறது. செவ்வாழையில் உள்ள வைட்டமின்கள் மற்றும் ஆண்டி ஆக்ஸிடென்ட்கள் நம் உடலில் உள்ள ரத்த அணுக்களின் அளவை சீராக பராமரிக்க உதவுகிறது.

கண் பார்வைக்கு செவ்வாழை:

eye sight

கண் பார்வை கோளாறு, மாலை கண் , கண் பிரச்சனை, திடீரென பார்வை பாதிக்கப்பட்டவர் உள்ளிட்ட நபர்களுக்கு இந்த செவ்வாழை பழம் ஒரு சிறந்த மருந்து என்று கூறப்படுகிறது. தினசரி ஒரு செவ்வாழை பழத்தை சாப்பிட்டு வந்தால் கண் சம்மந்தப்பட்ட பல பிரச்சனைகளும் நாளடைவில் குணமாகிவிடும்.

மேலும் படிக்க: உயரமாக வளரணுமா? இயற்கை முறையில் உயரத்தை அதிகரிக்க சில டிப்ஸ் இதோ!

நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்:

இந்த செவ்வாழை பழம் நம் உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் தன்மை கொண்டது. அதே போல சுற்றுப்புற சூழ்நிலை மாற்றம், தட்ப வெப்பநிலை மாறுபாடுகள் மூலம் ஏற்படும் தொற்றுநோய் கிருமிகள் போன்றவற்றை குணமாக்க செவ்வாழை பெரிதும் உதவுகிறது. உங்கள் உணவுமுறையில் வாரம் ஒருமுறை செவ்வாழை பழத்தை சேர்த்து சாப்பிட்டு வந்தால் உங்கள் உடலில் ஏற்படும் தொற்று நோய் பாதிப்பை கட்டுப்படுத்த உதவும்.

Image source: google

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP