
நம் இந்திய உணவுகளில் அதிக அளவு பயன்படுத்தும் ஒரு மசாலா பொருள் தான் கசகசா. இது ஆங்கிலத்தில் பாப்பி விதைகள் என்று கூறப்படுகிறது. இந்த கசகசா பாப்பி செடியிலிருந்து நமக்கு கிடைக்கிறது. இந்த பாப்பி செடியின் விதைப் பைகள் வெயிலில் காய வைத்த பின்னர், அதிலிருந்து எடுக்கப்படுவது தான் இந்த கசகசா. பொதுவாக நம் வீடுகளில் அசைவ உணவுகள் சமைக்கும்போது இந்த கசகசாவை சுவையை அதிகரிக்க வேண்டும் என்று சேர்ப்பார்கள். இந்த கசகசா ஒரு உணவு பொருள் மட்டும் இல்லாமல் இதில் ஏராளமான மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளது. கசகசா சாப்பிடுவதினால் நம் உடலுக்கு கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் குறித்து இந்த கட்டுரையில் பார்க்கலாம்.
கால்சியம், பொட்டாசியம், மக்னீசியம், இரும்புச்சத்து உள்ளிட்ட பல ஊட்டச்சத்துக்கள் இந்த கசகசாவில் அடங்கி உள்ளது. மேலும் இந்த கசகசா விதைகள் முழுவதுமாக காய்வதற்கு முன்பு அதிலிருந்து கீறி எடுக்கப்படும் பால் ஓபியம் என்று கூறப்படுகிறது. இது புகையிலை, மதுபானம், கஞ்சா போன்ற போதை தரும் பொருளாக கருதப்படுகிறது. மேலும் இது ஒரு போதைப் பொருள் வரிசையில் அமைவதால் வளைகுடா நாடுகளில் கசகசா முழுவதுமாக தடை செய்யப்பட்ட உணவு ஆகும். என்னதான் இந்தியாவில் இதை அனுமதித்தாலும் வெளியே ஏற்றுமதி செய்ய சில துறைகள் அனுமதி கொடுப்பதில்லை. இந்த கசகசாவில் 46 கலோரிகள், 1.6 கிராம் புரதச்சத்து, 3.6 கிராம் கொழுப்பு, 2.5 கிராம் மாவுச்சத்து, 1.5 கிராம் நார்ச்சத்து, 2.5 கிராம் சோடியம் உள்ளது.
தூக்கமின்மை பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் தினமும் இரவு தூங்குவதற்கு முன்பு இந்த கசகசாவை தேநீர் வடிவில் அல்லது பேஸ்ட் போல செய்து சூடான பாலுடன் சேர்த்து குடித்து வரலாம். இது மன அழுத்தத்தை குறைக்க பெரிதும் உதவுகிறது. இதனால் இரவில் நன்றாக தூக்கம் வரும் என்று கூறப்படுகிறது.
மேலும் படிக்க: முந்திரி பால் குடித்தால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் என்ன?
பெண்களின் கருவுறுதலை அதிகரிப்பதில் இந்த கசகசா விதைகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. இது பெண்கள் உடலில் உள்ள ஃப்லோபியன் குழாய்களில் நச்சுக்களை அகற்றி கர்ப்பம் அடைய உதவி செய்கிறது.
இதில் கால்சியம் மற்றும் தாமிரம் அதிக அளவு நிறைந்துள்ளதால் எலும்பு ஆரோக்கியத்தை மேம்படுத்த பெரிதும் உதவுகிறது. இந்த கசகசா விதைகளில் உள்ள கொலாஜன் நம் உடலில் உள்ள எலும்புகளை வலுப்படுத்தி கடுமையான சேதத்தில் இருந்து பாதுகாக்க உதவும்.
இந்த கசகசா விதைகளில் அதிக அளவு நார்ச்சத்து நிறைந்துள்ளதால் அஜீரண கோளாறுகள் மற்றும் வயிற்று பிரச்சனைகள் எளிதில் குணமாகும். இது நம் செரிமான அமைப்பை வலுப்படுத்துவதன் மூலம் மலச்சிக்கல் போன்ற நோய்கள் குணமாக உதவுகிறது.
கசகசா விதைகளில் அதிக அளவு நார்ச்சத்துக்கள் இருப்பதால் நம் உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை வெளியேற்றி நல்ல கொழுப்பின் அளவை அதிகரிக்க செய்யும். இது நம் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. மேலும் இது மாரடைப்பு போன்ற இதய நோய்கள் ஏற்படும் அபாயத்தை குறைக்க உதவுகிறது.
Image source: google
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com
