Ridge Gourd Benefits : ஆரோக்கியமாக வாழ பச்சை நிற காய்கறிகளை சாப்பிட வேண்டும். உடலுக்கு ஏராளமான நன்மைகளை தரும் காய்கறிகளில் பீர்க்கங்காயும் ஒன்று. இது ஊட்டச்சத்துக்களின் பொக்கிஷம் என்று சொல்லலாம்.
உடலுக்கு நல்லது என்றாலும், பலரும் இந்த காய்கறியை சாப்பிட விரும்புவதில்லை. ஆனால் ஒருமுறை இன்றைய பதிவில் பகிரப்பட்டுள்ள பீர்க்கங்காய் நன்மைகளை முழுமையாக படித்துப் பாருங்கள். இதற்குப் பிறகு பீர்க்கங்காயை பிடிக்காதவர்கள் கூட, பீர்க்கங்காயை வாங்கி சாப்பிடுவார்கள். பீர்க்கங்காயின் நன்மைகளை ஊட்டச்சத்து நிபுணரான பிரியங்கா ஜெயஸ்வால் அவர்கள் நம்முடன் பகிர்ந்து கொள்கிறார்.
இந்த பதிவும் உதவலாம்: நார்ச்சத்து அதிகம் உள்ள உணவுகளால் உடலுக்கு இவ்வளவு நன்மைகளா!
பீர்க்கங்காயில் நிறைந்துள்ள வைட்டமின் A கண்களின் ஆரோக்கியத்தை பராமரிக்க உதவுகின்றன. வைட்டமின் A சத்துக்கள் கண்பார்வையை மேம்படுத்தவும், கண் சார்ந்த நோய்களின் அபாயத்தை குறைக்கவும் உதவுகின்றன. மேலும் இவை ஃப்ரீ ரெடிள்களால் ஏற்படும் சேதத்தில் இருந்து கண்களை பாதுகாக்கவும், நீண்ட காலத்திற்கு கண்களை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளவும் உதவுகின்றன.
பீர்க்கங்காயில் அதிக அளவு நீர்ச்சத்து உள்ளது. இதனுடன் பீர்க்கங்காயில் அதிக அளவு காணப்படும் நார்ச்சத்துக்கள் மலச்சிக்கலில் இருந்து விரைவில் மீண்டு வர உதவுகின்றன. இது செரிமான மண்டலத்தை ஆரோக்கியமாகவும், குடல் இயக்கத்தை சீராகவும் வைத்துக் கொள்ள உதவுகிறது. மலச்சிக்கலால் அவதிப்படுபவர்கள் பீர்க்கங்காய் சமைத்து சாப்பிடலாம் அல்லது ஜூஸ் ஆகவும் எடுத்துக் கொள்ளலாம். இதில் நிறைந்துள்ள நார்ச்சத்து உடல் எடையை குறைக்கவும் பயனுள்ளதாக இருக்கும்.
பீர்க்கங்காய் சர்க்கரை நோயாளிகளுக்கு அதிக நன்மைகளை தருவதாக நிரூபிக்கப்பட்டுள்ளது. இது குறைந்த கிளைசெமிக் குறியீட்டை கொண்டுள்ளது. இந்த அற்புதக் காய்கறி இரத்த சர்க்கரையின் அளவுகளை கட்டுப்படுத்தவும், திடீரென உயரும் இரத்த சர்க்கரையின் அளவுகளை தடுக்கவும் உதவுகிறது.
இரத்த பற்றாக்குறை அல்லது இரத்த சோகையால் அவதிப்படுபவர்களுக்கு பீர்க்கங்காய் பரிந்துரை செய்யப்படுகிறது. இதில் அதிக அளவு காணப்படும் இரும்புச்சத்து மற்றும் வைட்டமின் B இரத்த சிவப்பணுக்களின் உருவாக்கத்திற்கு உதவுகின்றன. இதை தொடர்ந்து சாப்பிட்டு வர ஹீமோகுளோபின் அளவுகளையும் கணிசமாக அதிகரிக்க முடியும்.
பலவீனமான நோய் எதிர்ப்பு சக்தி உள்ளவர்களுக்கும் பீர்க்கங்காய் பரிந்துரை செய்யப்படுகிறது. இதில் நிறைந்துள்ள வைட்டமின் C, மெக்னீசியம், தாமிரம், துத்தநாகம், தீயாமின் மற்றும் ரிபோஃபிளேவின் போன்ற சத்துக்கள் நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்துகின்றன.
இந்த பதிவும் உதவலாம்: 40 வயதிலும் 20 வயது போல் தோற்றம் பெற உதவும் அற்புத யோகாசனம் !
இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.
image source:freepik
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com