herzindagi
muskmelon

Musk Melon Benefits: கோடை வெயிலில் முலாம்பழத்தை சாப்பிடுவதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள்!

கோடை காலத்தில் கிர்ணி பழம் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் குறித்து இந்த கட்டுரையில் பார்க்கலாம். 
Editorial
Updated:- 2024-04-06, 23:28 IST

கோடைகாலம் வந்து விட்டாலே நம்மில் பலருக்கும் முதலில் ஞாபகம் வரும் பழங்கள் தர்பூசணி, முலாம்பழம், நுங்கு போன்றவைகள் தான். இந்த பழங்கள் நம் உடலை குளிர்ச்சியாக வைக்க பெரிதும் உதவுகிறது. குறிப்பாக கோடை வெயிலுக்கு இதம் தரும் இந்த முலாம்பழம் அதிக சுவை கொண்டது. இந்த பழத்தை சிலர் கிர்ணி பழம் என்றும் கூறுவார்கள். இந்த முலாம்பழத்தை ஃப்ரிட்ஜில் வைத்து ஜில்லாக எடுத்து சாப்பிட்டால் அதன் சுவை இன்னும் அட்டகாசமாக இருக்கும். இந்த பழத்தை துண்டுகளாக வெட்டி நாட்டு சர்க்கரை சேர்த்து சாப்பிடலாம் அல்லது முலாம்பழ மில்க் ஷேக் செய்தும் கோடை வெயிலுக்கு சாப்பிட்டு வரலாம். இந்த முலாம்பழம் சாப்பிடுவதால் நம் உடலுக்கு கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் குறித்து இந்த கட்டுரையில் பார்க்கலாம்.

ரத்த அழுத்தம் குறையும்: 

இந்த கிருணிப் பழத்தில் பொட்டாசியம் சத்து அதிக அளவு நிறைந்துள்ளது. இது உங்கள் உடலில் ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்திருக்க பெரிதும் உதவுகிறது. எனவே கோடைகாலத்தில் முலாம் பழங்களை உங்கள் தினசரி உணவில் சேர்த்து சாப்பிட்டு வரலாம்.

மேலும் படிக்க: உடல் எடை குறைக்க காலையில் இளநீர் குடியுங்கள்!

வயிற்றுப்புண் குணமாகும்:

இந்த கிர்ணி பழத்தில் அதிக அளவு வைட்டமின் சி சத்து உள்ளது. இது வயிற்றுப் புண்களை நாளடைவில் சரி செய்து ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. மேலும் இந்த பழத்தில் அதிக அளவு நார்ச்சத்து உள்ளதால் வயிற்று கோளாறுகள், மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகளையும் குணப்படுத்த உதவும். 

nigq muskmelon kharbuja cut

சிறுநீரக கற்கள் குணமாகும்:

சிறுநீரகப் பிரச்சனை உள்ளவர்கள் தாராளமாக இந்த கிர்ணி பழத்தை சாப்பிட்டு வரலாம். இந்த கிர்ணி பழத்தில் உள்ள ஆக்சிகைன் என்று அமிலம் சிறுநீரகப் பிரச்சனைகளை குணப்படுத்தும் தன்மை கொண்டது என்று மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.

கண் பார்வைக்கு நல்லது:

கிர்ணி பழத்தில் அதிக அளவு வைட்டமின் ஏ சத்து உள்ளது. இது நம் கண்களின் தசைகளை வலுப்படுத்த பெரிதும் உதவுகிறது. இதனால் நமக்கு எதிர்காலத்தில் ஏற்படும் கண் சார்ந்த பிரச்சனைகளை முன்கூட்டியே தடுக்கலாம்.

உடல் எடை குறையும்:

இந்த கிர்ணிப்பழத்தில் மிகக் குறைந்த அளவு கொழுப்பு சத்தும் அதிகளவு பொட்டாசியம் சத்து உள்ளது. மேலும் இந்த பழம் நம் உடலால் எளிதில் ஜீரணிக்க கூடிய நல்ல கார்போஹைட்ரேட்டுகள் கொண்டது. கிர்ணி பழம் மற்றும் அதன் விதைகளில் நார்ச்சத்து அதிக அளவு இருப்பதால் இது எளிதில் ஜீரணம் ஆகிவிடும். அதேபோல உடல் எடை குறைக்க முலாம்பழம் பெரிதும் உதவுகிறது. 

கர்ப்பிணி பெண்களுக்கு நல்லது:

இந்த முலாம் பழத்தில் அதிக அளவு ஃபோலேட் உள்ளதால் இது அதிகப்படியான சோடியத்தை நம் உடலில் இருந்து அகற்ற உதவும். இதனால் கர்ப்பிணி பெண்களின் நீர் பிடிப்பு பிரச்சனைகள் நாளடைவில் குணமாகும்.

மாதவிடாய் வலி குணமாகும்:

மருத்துவ ஆராய்ச்சிகளின் படி கிர்ணி பழத்தில் உள்ள வைட்டமின் சி சத்து, மாதவிடாய் நாட்களில் பெண்களுக்கு ஏற்படும் தசை பிடிப்பிலிருந்து விடுபட பெரிதும் உதவுவதாக கூறப்படுகிறது. இதனால் மாதவிடாய் காலத்தில் ரத்தப்போக்கும் சீராக இருக்கும் என்பதால் பெண்கள் மாதவிடாய் காலத்தில் முலாம் பழத்தை தாராளமாக சாப்பிட்டு வரலாம்.

Image source: google

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com