mint water for skin

Mint Water Benefits: கொளுத்தும் கோடை வெயிலுக்கு புதினா தண்ணீர் குடியுங்க!

புதினா தண்ணீரில் உள்ள ஆரோக்கிய நன்மைகள் குறித்து இந்த கட்டுரையில் பார்க்கலாம். 
Editorial
Updated:- 2024-03-21, 16:12 IST

கோடைகாலம் தொடங்கி விட்டால் போதும் கொளுத்தும் வெயிலால் நம் உடல் அடிக்கடி நீர்ச்சத்து வற்று போக கூடும். இதனை தடுப்பதற்கு உடலை நீர் சத்துடன் வைத்திருக்க வேண்டும். உடலை குளிர்ச்சியாக வைக்கவும், உடல் எடையை குறைக்கவும் ஒரு சிறந்த பானம் இந்த புதினா தண்ணீர். தினமும் இந்த புதினா தண்ணீரை குடிப்பதினால் உடல் ஆரோக்கியமாகவும் புத்துணர்ச்சியாகவும் வைத்துக்கொள்ள பெரிதும் உதவுகிறது. இந்த புதினா தண்ணீர் குடிப்பதால் நம் உடலுக்கு கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் குறித்து இந்த கட்டுரையில் பார்க்கலாம். 

செரிமானம் சீராகும்:

பருவ காலம் மாறும் போது நாம் உட்கொள்ளும் உணவு செரிமான பிரச்சனைகளுக்கு வழி வகுக்கலாம். குளிர்காலத்தை பொருத்தவரை அஜீரணக் கோளாறு மற்றும் வயிற்று சார்ந்த பிரச்சனைகள் ஏற்படுவது இயல்பு. பருவநிலை காலத்தில் அதிக வெப்பமில்லாமல் இருப்பதால் நம்மில் பலருக்கும் செரிமான பிரச்சனைகள் ஏற்படும். இந்த பிரச்சனைகளை குறைக்க ஒரு சிறந்த வழி இந்த புதினா தண்ணீர். தினமும் காலையில் ஒரு கிளாஸ் புதினா தண்ணீர் குடித்து வந்தால் செரிமான பிரச்சனைகள் நாளடைவில் குணமாகும் என்று கூறப்படுகிறது. 

வாய் துர்நாற்றம் நீங்கும்:

தினமும் காலையில் எழுந்தவுடன் ஒரு கிளாஸ் புதினா தண்ணீர் குடித்து வந்தால் வாயில் உள்ள பாக்டீரியாக்கள் நீங்கும். இதனால் வாய் துர்நாற்றத்தில் இருந்து விடுபடலாம். நம் உணவில் உள்ள ஊட்டச்சத்துக்களை உறிஞ்சுவதன் மூலம் புதினா தண்ணீர் நம் ஆரோக்கியத்தையும் மேம்படுத்த பெரிதும் உதவுகிறது.

mint water

இதய ஆரோக்கியம்:

மென்தோல் வகையை சேர்ந்த இந்த புதினாவில் வைட்டமின் ஏ, வைட்டமின் சி, வைட்டமின் பி6, நார்ச்சத்து, புரதம், பொட்டாசியம், இரும்பு, மெக்னீசியம் போன்ற நம் உடலுக்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துகளும் அதிக அளவு நிறைந்துள்ளது. இதில் உள்ள பொட்டாசியம் சத்து இதய நோய்களிலிருந்து நம்மை பாதுகாக்க உதவுகிறது. அதேபோல நம் உடல் வறண்டு போகாமல் எப்போதும் நீரேற்றமாக இருக்க புதினா தண்ணீர் பெரிதும் உதவும். 

அசிடிட்டி குறையும்:

வாயு பிரச்சனைகள், அசிடிட்டி போன்ற பிரச்சனைகளில் அவதிப்பட்டு வருபவர்கள் தினமும் புதினா தண்ணீர் குடித்து வரலாம். இது அவர்களுக்கு ஒரு சிறந்த மருந்தாக அமையும். இந்த புதினா தண்ணீரை அருந்திய சில நிமிடங்களில் உடலில் நல்ல மாற்றத்தை உணர முடியும். பொதுவாகவே நம் உடலில் அமிலத்தன்மை அதிகரிப்பதால் வாயில் பாக்டீரியாக்கள் சேர்ந்து வாய் துர்நாற்றம் போன்ற பிரச்சனைகள் ஏற்படும். இது போன்ற பிரச்சனைகளுக்கு ஒரு கிளாஸ் புதினா தண்ணீர் சிறந்த மருந்தாக உள்ளது. 

மேலும் படிக்க: கசகசா சாப்பிடுவதால் நம் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள்!

காய்ச்சல் குணமாகும்:

இந்த புதினாவில் அதிக அளவு ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள் இருப்பதால் நம் உடலில் ஏற்படும் சளி, காய்ச்சல் குறைக்க உதவுகிறது அதைப்போல இந்த புதினா தண்ணீரில் அலர்ஜி எதிர்ப்பு பண்புகள் அதிகம் உள்ளதால் நம் உடலில் ஏற்படும் வலி மற்றும் அசோகாரியத்தை குறைக்கவும் புதினா உதவும். 

சருமம் ஜொலிக்கும்:

புதினா தண்ணீருக்கு தோல் சார்ந்த நோய்களை குறைக்கும் வல்லமை உள்ளது. உங்கள் சருமத்தை ஈரப்பத்துடன் வைத்திருக்க புதினா தண்ணீர் குடித்து வரலாம். இது உங்கள் சருமத்தை மென்மையாகவும் அழகாகவும் பராமரிக்க உதவும். அதேபோல எப்போதும் இளமையாக வைத்திருக்கும் ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள் இந்த புதினாவில் உள்ளதால் வயதாகும் செயல்முறை தாமதமாகும் என்று மருத்துவர் கூறுகின்றனர். இது மட்டுமல்லாமல் நம் உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றவும் புதினா பெரிதும் உதவுகிறது.

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com