சிறுதானிய வகைகளில் ஒரு முக்கியமான தானியம் தினை. தானியங்களில் அதிகம் பயிரிடப்படுவதில் இரண்டாவது இடம் இந்த திணைக்கு உண்டு. இது உயிர் சத்து கொண்ட தானியம் என்று கூறப்படுகிறது. இந்த திணையை சாப்பிட்டு வந்தால் நம் உடலுக்கு பல விதமான ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும். இந்த திணையில் கால்சியம் புரத சத்து, இரும்பு சத்து, நார்ச்சத்து மற்றும் மெக்னீசியம் போன்ற உடலுக்கு தேவையான அனைத்து அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களும் நிறைந்துள்ளது. இந்த நிலையில் அரிசி கோதுமை கேழ்வரகு காட்டிலும் இந்த திணையில் இரும்பு சத்து அதிகம் நிறைந்துள்ளதால் உடல் எடை குறைய முயற்சி செய்பவர்கள் தாராளமாக இதை சாப்பிட்டு வரலாம். அரிசிக்கு பதிலாக திணை சாப்பிட்டு வந்தால் நம் உடலுக்கு கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் குறித்து இந்த கட்டுரையில் பார்க்கலாம்.
நம் இதயம் சீராக செயல்படுவதற்கு வைட்டமின் பி1 சத்து மிகவும் அவசியம். இது தசை மற்றும் நரம்புகளுக்கு இடையில் தகவல் பரிமாற்ற உதவுவதன் மூலம் இதயத்தின் செயல்பாடுகளையும் பாதுகாக்க உதவுகிறது. இந்த வைட்டமின் பி1 குறையும்போது இதயத்தின் செயல்பாடு குறையும். திணை அரிசியில் நம் இதயத்துக்கு வலிமை சேர்க்கும் பி1 வைட்டமின் சத்து அதிக அளவு நிறைந்துள்ளது. இது இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தி மாரடைப்பு, பக்கவாதம் போன்ற இதய நோய்கள் வராமல் தடுக்க உதவுகிறது. அதே போல அல்சைமர் நோய் மற்றும் மறதி நோய் தீவிரமாகாமல் தடுக்கவும் இந்த வைட்டமின் பி1 சத்து உதவுகிறது.
பொதுவாகவே நம் உடலில் இரும்பு சத்து போதுமான அளவு இருந்தால் மட்டுமே உடல் உறுப்புகளுக்கு ஆக்ஸிஜனை சீராக எடுத்துச் செல்ல முடியும். அந்த வரிசையில் மூளையின் செயல்பாட்டிற்கு ஆக்சிஜன் கிடைத்தால் மட்டுமே அறிவாற்றல் பெருகும். மேலும் நினைவுத்திறன் அதிகரிக்க உதவும். இந்த நிலையில் தினசரி திணை அரிசி சாப்பிட்டு வந்தால் முதுமையில் வரக்கூடிய மூளை குறைபாடு நோய்களை தடுக்கலாம். நம் மூளைக்கு தேவையான ஆக்ஸிஜன் அளிப்பதற்கு இரும்புச்சத்து மிகவும் அவசியம். இந்த திணை அரிசியில் இரும்பு சத்து அதிகம் நிறைந்துள்ளது. அதே போல திணையில் இருக்கும் புரதச்சத்து நம் நரம்பு மண்டலத்தின் செயல்பாடுகளை அதிகரிக்கவும் உதவுகிறது.
சர்க்கரை நோயாளிகளும் நீரிழிவு நோயாளிகளும் வெள்ளை அரிசி சாதம் சாப்பிடக்கூடாது என்று மருத்துவர்கள் கூறுவார்கள். இந்த நிலையில் திணை குறைந்த கிளைசெமி குறியீட்டை கொண்டுள்ள ஒரு சூப்பர் உணவு. இந்த திணையில் நார்ச்சத்து அதிகம் நிறைந்துள்ளதால் நீரிழிவு நோயாளிகளுக்கும் சர்க்கரை நோயாளிகளுக்கும் இது ஒரு ஏற்ற உணவு என்று கூறலாம். அதே போல இந்த திணை அரிசி செரிமானத்துக்கு அதிக நேரம் எடுத்துக் கொள்ளும் என்பதால் உடனடியாக அதில் இருக்கும் குளுக்கோஸ் ரத்தத்தில் கலக்க முடியாது. சர்க்கரை நோய் அல்லது இதய நோய் பாதிப்புக்கு உள்ளானவர்கள் கூட தினை அரிசியை உணவாக சாப்பிட்டு வரலாம். மேலும் உடல் பருமன், மூட்டு வலி போன்ற பிரச்சனைகள் உள்ளவர்களும் தினசரி திணை அரிசியை உணவில் சேர்த்து சாப்பிடலாம். இது உடல் சோர்வை குணப்படுத்தும்.
இன்றைய காலகட்டத்தில் குழந்தைகள் பலரும் கால்சியம் பற்றாக்குறை பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டுள்ளனர். பெண்களுக்கு இயல்பாகவே மாதவிடாய் காலங்களில் கால்சியம் பற்றாக்குறை ஏற்படும். தினை அரிசியில் கால்சியம் சத்து அதிகமாக இருப்பதால் இது நம் எலும்புகளை வலுவடைய செய்கிறது. அதே போல பற்கள் உறுதியாகவும் திணை பெரிதும் உதவுகிறது. இதனால் வளரும் குழந்தைகளுக்கு திணை அரிசியை அடிக்கடி உணவில் சேர்ப்பதன் மூலம் அவர்களின் எலும்புகள் உறுதியாக வளர்ந்த பிறகு எலும்பு தேய்மானம் உண்டாகாமல் பாதுகாக்கும். மேலும் இந்த திணை அரிசியில் பீட்டா கரோட்டின் அதிக அளவு இருப்பதால் நம் கண் பார்வை ஆரோக்கியத்திற்கு நல்லது.
Image source: google
Herzindagi video
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com