Chayote Benefits: தினமும் செள செள சாப்பிடுங்க! ஆறு ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும்

நம்மில் பலரும் வெறுத்து ஒதுக்கும் செள செள காய்கறியில் உடலுக்கு ஆரோக்கியத்தை வழங்கக்கூடிய முக்கிய விஷயங்கள் இருக்கின்றன.

chayote nutrition

சீமை சுரைக்காய் எனப்படும் செள செள அறிவியல் ரீதியாக சுரைக்காய் குடும்பத்தை சேர்ந்த பச்சை காய்கறி ஆகும். மெக்சிகோவை பூர்வீகமாக கொண்ட செள செள தற்போது உலகின் பல்வேறு பகுதிகளில் பரவலாக பயிரிடப்பட்டு உணவு பழக்கத்தில் சேர்த்துக் கொள்ளப்படுகிறது. குறைந்த கலோரி காய்கறியான செள செள அதன் ஊட்டச்சத்து மதிப்பிற்காக ஆரோக்கியமான காய்கறியாக கருதப்படுகிறது. செள செள-வில் நம் உடலுக்கான அத்தியாவசிய வைட்டமின்கள், தாதுக்கள், ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் நார்ச்சத்து ஆகியவை நிறைந்துள்ளன. வாரம் இரண்டு முறை செள செள உண்பதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகளை இந்த கட்டுரையில் தெரிந்து கொள்ளுங்கள்.

chayote squash

இதய ஆரோக்கியம் மேம்படுமா ?

ஆம். அதிக கொழுப்பு கொண்ட உணவுகளை சாப்பிடுவதால் தமனிகளில் அடைப்பு ஏற்பட்டு பலரும் இதய நோயால் பாதிக்கப்படுகின்றனர். கொழுப்பு பிரச்சினையால் உடலில் தமனிகள் வழியாக இதயத்திற்கு இரத்தம் செல்வதில் சிக்கல் ஏற்படுகிறது. செள செள-வில் உள்ள ஃபிளாவனாய்டுகள் தமனிகளில் கொழுப்பை கட்டுப்படுத்தி இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகின்றன. செள செள அதிக நார்ச்சத்து நிறைந்த உணவாகும். நார்ச்சத்து நிறைந்த உணவுகள் இதய நோயைத் தவிர்க்க உதவும் என ஆராய்ச்சிகள் சுட்டிக்காட்டுகின்றன.

கர்ப்பிணிகளுக்கான சிறந்த உணவு

கர்ப்ப காலத்தில் ஆரோக்கியமாக இருக்க பெண்களுக்கு இரும்பு, கால்சியம், ஃபோலேட் மற்றும் முக்கிய வைட்டமின்கள் போன்ற குறிப்பிட்ட ஊட்டச்சத்துக்கள் தேவை. செள செள ஃபோலேட்டின் சிறந்த மூலமாகும். இது வயிற்றில் வளரும் கருவுக்கு முக்கியமானது.

வயதான தோற்றத்தை தடுக்கும் செள செள

ஆய்வுகளின்படி ஆன்டிஆக்ஸிடன்ட்கள் வயதான தோற்றத்தை உண்டாகும் செயல்முறையை தாமதப்படுத்தும். செள செள-வில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் வைட்டமின் சி அதிகம் உள்ளது. வைட்டமின் சி கொலாஜனை உருவாக்குவதை ஊக்குவிப்பதால் உங்கள் சருமம் பாதுகாக்கப்படுகிறது. இது முகச் சுருக்கங்கள் மற்றும் மெல்லிய கோடுகள் போன்றவற்றை தடுக்கும்.

மேலும் படிங்ககாலையில் வெண்டைக்காய் தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் ஆரோக்கிய பலன்கள்

கல்லீரல் ஆரோக்கியம்

அதிகப்படியான கொழுப்பு கல்லீரலின் திசுக்களில் குவிந்தால் அது கொழுப்பு கல்லீரல் நோய் என்று அழைக்கப்படுகிறது. அதிக கொழுப்பு இருந்தால் கல்லீரலின் செயல்படும் திறன் பாதிக்கப்படலாம். இந்த நிலையில் செள செள-வின் சாறு கல்லீரலில் கொழுப்பு சேர்வதை தடுத்து கல்லீரல் ஆரோக்கியத்திற்கு உதவுகிறது.

குடல் ஆரோக்கியம்

நார்ச்சத்து அதிகம் உள்ள உணவை உட்கொண்டால் மூல நோய் மற்றும் மலச்சிக்கல் போன்ற பொதுவான செரிமான கோளாறுகளை நாம் தவிர்க்கலாம். செள செள போன்ற கரையக்கூடிய நார்ச்சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்வது செரிமான அமைப்பில் நல்ல பாக்டீரியாக்களின் வளர்ச்சியை ஊக்குவித்து குடல் ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது.

எடை இழப்பு

செள செள எடை இழப்புக்கும் உதவுகிறது. இதன் அதிக நார்ச்சத்து உள்ளடக்கம் பசியைக் குறைப்பதன் மூலம் நீண்ட நேரத்திற்கு உங்களை முழுமையாக உணர உதவும்.

மேலும் படிங்கதினமும் புதினா இலை சாப்பிடுங்க! உடலுக்கு ஏராளமான நன்மைகள் கிடைக்கும்

வைட்டமின்கள் சி, ஈ மற்றும் கே, பொட்டாசியம், கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் மெக்னீசியம் போன்ற தாதுக்கள், நார்ச்சத்து போன்ற பல்வேறு ஊட்டச்சத்துகள் செள செள-வில் நமக்கு கிடைக்கின்றன. இதை தொடர்ச்சியாக சாப்பிடுவது எடை மேலாண்மை, செரிமான அமைப்பு, இதய ஆரோக்கியம் மற்றும் நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்துதல் என பல்வேறு நன்மைகளை வழங்கி ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்கும்.

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP