உடலில் கெட்ட கொழுப்பு சேர்வதால், கல்லீரல் நோய், சர்க்கரை நோய், உயர் இரத்த அழுத்தம், இதய நோய், பக்கவாதம் போன்ற நோய்கள் ஏற்படும் ஆபத்து உள்ளது. இதனால் அதிகப்படியான உடல் கொழுப்பைக் குறைக்க மருந்துகளை விட நம் வாழ்க்கை முறையில் மாற்றங்கள் செய்வது மிகவும் நல்லது. இன்றைய காலகட்டத்தில் ஒவ்வொரு வீட்டிலும் கொலஸ்ட்ரால் பிரச்சினை உள்ள நோயாளிகள் உள்ளனர். இந்த நோயின் விளைவாக இதய நோய்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. உங்கள் உடலில் கொலஸ்ட்ரால் அதிகமாக இருப்பது தெரிந்தால், உணவுப் பழக்கங்களில் கவனம் செலுத்துவது மிகவும் அவசியம். வெண்ணெய், நெய் போன்ற கொழுப்பு நிறைந்த உணவுகளை முடிந்தவரை குறைவாக உண்பது நல்லது. ஆனால், நம் வீடுகளில் சமையலில் பயன்படுத்தும் எண்ணெயைத் தவிர்க்க முடியாது. எனவே, கொலஸ்ட்ரால் பிரச்சனை உள்ளவர்கள் எந்த வகை எண்ணெய்களை சமையலில் பயன்படுத்தலாம் என்பதை அறிந்து கொள்ள வேண்டும். அந்த வரிசையில் சமையலில் எந்த எண்ணெய் பயன்படுத்தினால் கொலஸ்ட்ரால் பிரச்சனையை கட்டுப்படுத்த முடியும் என்பது குறித்து இந்த கட்டுரையில் பார்க்கலாம்.
சோயா பீன்ஸ் எண்ணெய்யில் ஏராளமான ஊட்டச்சத்து நிறைந்துள்ளது. இதில் நிறைய அத்தியாவசிய கொழுப்பு அமிலங்கள், ஆன்டி ஆக்ஸிடன்கள் இருப்பதால் நம் உடலில் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும். உங்கள் தினசரி சமையலில் சோயா எண்ணெய் பயன்படுத்தினால் உடலை கட்டுக்கோப்பாக வைக்க உதவுகிறது. மேலும் இந்த எண்ணெய்யை உணவில் சேர்த்துக் கொண்டால் பல ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும்.
சோயாபீன் எண்ணெயில் ஒமேகா-3 மற்றும் ஒமேகா-6 கொழுப்பு அமிலங்கள் நிறைவாக உள்ளன. இவை கெட்ட கொலஸ்ட்ராலான (LDL) குறைக்கவும், நல்ல கொலஸ்ட்ராலான (HDL) அதிகரிக்கவும் உதவுகின்றன. இதனால் இதய நோய் மற்றும் ரத்த அழுத்தம் போன்ற பிரச்சனைகள் குறைகின்றன. மேலும், இந்த எண்ணெயில் உள்ள பாலிஅன்சாச்சுரேட்டட் கொழுப்புகள் இரத்தக் குழாய்களில் கொழுப்புப் படிவைத் தடுக்கின்றன.
சோயாபீன் எண்ணெயில் ஆல்பா-லினோலெனிக் அமிலம் (ALA) உள்ளது, இது இன்சுலின் உணர்திறனை மேம்படுத்துகிறது. இதனால், இரத்த சர்க்கரை அளவு நிலையாக இருக்கும். மேலும், இது வயிற்றுப்புண் உடல் பருமன் மற்றும் மெட்டாபாலிக் சிண்ட்ரோம் போன்ற பிரச்சனைகளை குறைக்க உதவுகிறது.
சோயாபீன் எண்ணெயில் உள்ள ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் மூளை செயல்பாடுகளை மேம்படுத்துகின்றன. இது நினைவாற்றலை அதிகரிக்கவும், மன அழுத்தம் மற்றும் கவலைகளை குறைக்கவும் உதவுகிறது. குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கும் இந்த எண்ணெய் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
இந்த சோயா எண்ணெயில் வைட்டமின் K நிறைவாக உள்ளது, இது எலும்புகளின் அடர்த்தியை அதிகரிக்க உதவுகிறது. இது ஆஸ்டியோபோரோசிஸ் போன்ற பிரச்சனைகளை தடுக்கிறது. மேலும், இது கால்சியம் உறிஞ்சுதலை மேம்படுத்துகிறது.
சோயாபீன் எண்ணெய் வைட்டமின் E மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்தது. இவை தோல் மற்றும் முடியின் ஆரோக்கியத்தை பராமரிக்க உதவுகின்றன. இது தோல் எண்ணெய்த்தன்மை, முகப்பரு மற்றும் வயதான தோல் சுருக்கங்களை குறைக்கிறது. மேலும், தலை முடியை மென்மையாகவும், உதிராமலும் பாதுகாக்கிறது.
மேலும் படிக்க: சப்பாத்தி மாவை பிரிட்ஜில் வைப்பது உடலுக்கு ஆபத்து; மாவு கெடாமல் இருக்க சில டிப்ஸ்
சோயாபீன் எண்ணெயில் ஐசோஃபிளேவோன்கள் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளன, அவை புற்றுநோய் செல்களை எதிர்க்கும் திறன் கொண்டவை. குறிப்பாக புரோஸ்டேட், மார்பக மற்றும் குடல் புற்றுநோய் ஆகியவற்றின் அபாயத்தை குறைக்கிறது.
Image source: Freepik
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com