இன்றைய காலகட்டத்தில் பெண்கள் பலரும் சர்க்கரை நோயால் அவதிப்பட்டு வருகின்றனர். இதற்க்கு முதன்மையான முக்கிய காரணம் உணவு பழக்கம் தான். நம் உடலில் சர்க்கரை அளவு அதிகரிக்காமல் இருக்க ஆரோக்கியமான உணவுமுறை மிகவும் விசையம். நார்ச்சத்து நிறைந்த பழங்கள், காய்கறிகள், குறைந்த அளவு கார்போஹைட்ரேட், புரதம் போன்ற உணவு வகைகளை உணவில் சேர்த்து கொள்வது அவசியம். நீரிழிவு நோயாளிகள் தங்கள் உடலின் சர்க்கரை அளவை குறைக்க உதவும் 2 பழங்கள் குறித்து இந்த கட்டுரையில் பார்க்கலாம்.
இது ஜாமூன் பழம் என்றும் கூறப்படுகிறது. இந்த நாவல் பழம் நீரிழிவு நோய்க்கு கொடுக்கப்படும் சக்தி வாய்ந்த மருந்து என்று கூறலாம். நாவல்பட்டை இருமல், வாய்ப்புண் போன்ற பிரச்சனைகளுக்கு ஒரு சிறந்த மருந்தாகும். கல்லீரல் வீக்கம் இவற்றுக்கும் நாவல் பழங்கள் சிறந்த சிகிச்சையாக ஆயுர்வேதத்தில் பயன்படுத்தப் படுகிறது. இந்த நாவல் பழத்தை சாப்பிட்டு வந்தால் விரைவாக இரத்த சர்க்கரை அளவை குறைக்கிறது. இது மட்டுமில்லாமல் நாவல் பழம், பழச்சாறு, பட்டை, விதைகள் எல்லாமே நீரிழிவு நோய் சிகிச்சைக்கு மருந்தாக நாம் பயன்படுத்தலாம். இந்த பழத்தின் விதையில் உள்ள 'ஜாம்போலின்' என்ற அமிலம் ஸ்டார்ச்சை சர்க்கரையாக மாற்றும் செயல்பாட்டை கொண்டது. அதே போல நீரிழிவினால் ஏற்படும் “அடங்காதாகம்" கூட நாவல் பழ சாறு குடித்தால் தணியும் என்று கூறப்படுகிறது.
நாவல் பழ விதைகளை வெயிலில் காய வைத்து பொடி செய்து வைத்துக் கொள்ளவும். இந்த பொடியை ஒரு டீஸ்பூன் எடுத்து ஒரு கப் பால் அல்லது தண்ணீர் சேர்த்து ஒரு நாளைக்கு 2 வேளை குடித்து வரலாம். நாவல் பட்டையை காய வைத்து உலர்த்தி தீயில் எரிக்க வேண்டும். இதில் கிடைக்கும் சாம்பலை இன்னும் பொடியாக்கி ஜல்லடையில் சலித்து பாட்டிலில் போட்டு வைத்துக் கொள்ளலாம். நீரிழிவு நோயாளிகள் இந்த பொடியை காலை வெறும் வயிற்றில் தண்ணீருடன் கலந்து குடித்து வரலாம். அதே போல இரவு உணவுக்கு பின் ஒரு மணி நேரம் கழித்து இந்த தண்ணீரை குடிக்க வேண்டும்.
மேலும் படிக்க: குழந்தைகளின் மூளை செயல்திறனை அதிகரிக்கும் எட்டு சிறந்த உணவுகள்
இந்தியா, சீனா, வியட்நாம் நாடுகளில் காணப்படும் இந்த நெல்லிக்காய் நோய்களை தடுக்கும் ஒரு அமிர்தம் என்று கூறப்படுகிறது. இதில் வைட்டமின் 'சி' அதிகம் இருப்பதால், சர்க்கரை நோய்க்கு மட்டுமில்லாமல், உடலின் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், இதயத்தை பாதுகாக்கவும், மூட்டுவலி குறைய, கண்களை பாதுகாக்க, மொத்தத்தில் உடல் ஆரோக்கியமாக இருக்க பெரிதும் உதவுகிறது.
நெல்லிக்காய் சாற்றை ஒரு டேபிள் ஸ்பூன் எடுத்து, ஒரு கப் பாகற்காய் சாற்றுடன் 2 மாதம் குடித்து வந்தால் சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவும். மேலும் நீரிழிவு நோயினால் வரும் கண் கோளாறுகள் தடுக்கப்படும். அதே போல நெல்லிக்காய் பொடி, நாவல் பழம் மற்றும் பாகற்காய் இந்த மூன்றையும் சம அளவில் கலந்து சாப்பிட்டால் நீரிழிவு நோய் நாளடைவில் குணமாகும். நெல்லிக்காய் சாற்றுடன் மஞ்சள் பொடி சேர்த்து சாப்பிடுவது சர்க்கரை வியாதிக்கு நல்ல நிவாரணம் அளிக்கும் ஒரு எளிமையான மருந்து. அதே போல நெல்லி விதைகளை நீரில் ஊறவைத்து, அந்த நீரை குடித்து வந்தால் நீரிழிவு நோய் குறையும் என்று கூறப்படுகிறது.
Image source: google
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com