herzindagi
image

கூந்தல் வளர்ச்சி, முகப்பொலிவுக்கு வெந்தயத்தை நெய்யில் வறுத்து இப்படி சாப்பிடுங்கள்

வெந்தயத்தை சிறிது நெய்யில் வறுத்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடுவது பல நோய்களைக் குணப்படுத்துவதோடு பல ஆரோக்கிய நன்மைகளையும் கொண்டுள்ளது, குறிப்பாக முகப்பொலிவு முதல் இரத்த சர்க்கரை அளவைக் குறைப்பதில் மற்றும் எலும்பு தொடர்பான உடல்நலப் பிரச்சினைகள் சரியாகும்.  
Editorial
Updated:- 2025-01-15, 00:03 IST

நாம் உண்ணும் உணவே நமது ஆரோக்கியத்தை தீர்மானிக்கிறது. குறிப்பாக காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடுவது, நாள் முழுவதும் நமது உடல் ஆரோக்கியத்தை பாதிக்கிறது. காலையில் எழுந்ததும் இயற்கை உணவுகளை உண்பது நமது உடலின் புத்துணர்ச்சியை அதிகரிக்கிறது. வெந்தயத்தை நெய்யில் வறுத்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடுவதால் ஏற்படும் ஆரோக்கிய நன்மைகளை இங்கு பார்ப்போம். இதனை பாலுடன் சேர்த்து சாப்பிடுவது நல்லது என்று கூறப்படுகிறது. இதன் பலன்கள் ஏராளம். வெந்தயத்தையை நெய்யில் வறுத்து பாலுடன் காலை உணவுக்கு முன் சாப்பிடுங்கள். ஒரு வாரத்தில் முகப்பொலிவை முடி வளர்ச்சி வரை பல்வேறு நன்மைகளை கிடைக்கும்.

 

மேலும் படிக்க: ஒரு நல்ல உடலுறவுக்கு நீங்கள் கட்டாயம் சாப்பிட வேண்டிய பாலுணர்வு உணவுகளின் லிஸ்ட்

 

வெந்தயத்தை நெய்யில் வறுத்து சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் 

 

how-methi-juice-can-lower-cholesterol-and-unclog-arteriesÂ-naturally-1733768842368 (1)

 

செரிமானம் அதிகரிக்கிறது

 

வெந்தயத்தில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இது ஆரோக்கியமான செரிமான சக்தியை வழங்குகிறது. வெந்தயத்தை நெய்யில் வறுத்து சாப்பிட்டால் வயிறு உப்புசம் தொல்லை நீங்கும்.வெந்தயம் நல்ல குடல் பாக்டீரியாவை உருவாக்க உதவுகின்றன. இது மலச்சிக்கல், வாய்வு மற்றும் பிற பிரச்சனைகளை நீக்குகிறது. நல்ல ஜீரண சக்தியை அளித்து, வயிற்றின் உட்புறத்தை பாதுகாக்கிறது.

 

எடை மேலாண்மை

 

நெய்யில் வறுத்த வெந்தயத்தை வெறும் வயிற்றில் சாப்பிடுவது உடல் எடையை கட்டுப்படுத்த பெரிதும் உதவுகிறது . இது உங்களுக்கு பசி எடுக்காமல் முழுமையான உணர்வைத் தருகிறது மற்றும் நாள் முழுவதும் பசியை கட்டுப்படுத்த உதவுகிறது. நெய் நம் உடலுக்கு ஆரோக்கியமான கொழுப்புகளை வழங்குகிறது மற்றும் உடலுக்கு புரதம் மற்றும் கால்சியத்தை வழங்குகிறது, இது ஆற்றல் அளவைக் கட்டுப்படுத்துகிறது. இது வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது மற்றும் உடலில் உள்ள கொழுப்பின் அளவை குறைக்கிறது.

 

இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்துகிறது

 

வெந்தயத்தில் நமது இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்தும் தன்மை கொண்டது . இதில் கரையக்கூடிய நார்ச்சத்து உள்ளது, இது இரத்தத்தில் உள்ள சர்க்கரையை உறிஞ்சுவதை மெதுவாக்குகிறது. வெந்தயத்தில் உள்ள சத்துக்களை நெய் உடலுக்குத் திறம்படக் கிடைக்கச் செய்கிறது. சர்க்கரை நோயாளிகள் சீரான இரத்த சர்க்கரை அளவை பராமரிக்க உதவுகிறது.

எலும்பு ஆரோக்கியத்திற்கு நல்லது

 

வெந்தயத்தில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் நிறைந்துள்ளது மற்றும் மூட்டு வலி மற்றும் வீக்கத்தையும் கட்டுப்படுத்தும். நெய் மூட்டுகளுக்கு இயற்கையான லூப்ரிகண்டாக செயல்படுகிறது. மேலும் இதனை பாலுடன் சேர்த்து சாப்பிட்டால், உடலுக்கு கால்சியம் மற்றும் வைட்டமின் டி அதிகம் கிடைக்கும். இது எலும்புகளை வலுப்படுத்துவது மட்டுமின்றி மூட்டுகளின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது. இது கீல்வாதம் அல்லது மூட்டு பிரச்சனைகளை குணப்படுத்துகிறது.

 

சரும ஆரோக்கியத்திற்கு நல்லது

 

beautiful-young-woman-with-brown-hair-looking-confidently-camera-generated-by-artificial-intellingence_25030-63867

 

  • வறுத்த வெந்தயத்தை நெய்யில் பாலுடன் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் சருமம் மற்றும் கூந்தலின் ஆரோக்கியம் மேம்படும்.
  • வெந்தய விதைகளில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் மற்றும் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. உதாரணமாக இரும்பு மற்றும் மெக்னீசியம். இது ஆரோக்கியமான தலை முடி வளர்ச்சிக்கு உதவுகிறது.
  • நெய் நம் சருமத்திற்கு உள்ளிருந்து ஊட்டச்சத்துக்களை வழங்குகிறது மற்றும் பாலில் உள்ள வைட்டமின் மற்றும் தாதுக்கள் சருமம் வறண்டு போவதை தடுக்கிறது மற்றும் சருமத்திற்கு மீள் தன்மையை அளிக்கிறது. இதனால் முகம் பொலிவு பெரும்.

முடி வளர்ச்சிக்கு வெந்தயம் எவ்வாறு உதவுகிறது?

 

2006 ஆம் ஆண்டு Kosmetische Medizin இல் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வின் போது , பெண்கள் மற்றும் ஆண்களில் குறைந்த மற்றும் மிதமான முடி உதிர்தலுக்கு வெற்றிகரமான சிகிச்சையாக உணவுப் பொருள்களைக் கொண்ட வெந்தய விதைகள் கண்டறியப்பட்டன. வெந்தய விதைகள் உச்சந்தலையில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது, இதனால் முடி வேர்களுக்கு ஊட்டச்சத்துக்கள் மற்றும் ஆக்ஸிஜன் சப்ளை பெற உதவுகிறது. இது முடி வளர்ச்சியை ஊக்குவிக்க உதவுகிறது மற்றும் முடி உதிர்வை எதிர்த்துப் போராடுகிறது.இது உச்சந்தலையில் pH அளவை சமநிலைப்படுத்தவும், உச்சந்தலையில் எண்ணெய் உற்பத்தியை கட்டுப்படுத்தவும் உதவுகிறது. இது பொடுகு, அதிகப்படியான எண்ணெய் பசை போன்ற பிரச்சனைகளைத் தடுக்க உதவுகிறது, இல்லையெனில் முடி உதிர்வை ஏற்படுத்தலாம் மற்றும் முடி வளர்ச்சியைத் தடுக்கிறது.

 

தேவையான பொருட்கள்

 

  • வெந்தயம் 2 டீஸ்பூன்
  • நெய் 2 டீஸ்பூன்

 

செய்முறை

 

  1. இரண்டு டீஸ்பூன் வெந்தயத்தை எடுத்துக் கொள்ளுங்கள்,
  2. லேசான கடாயில் இரண்டு டீஸ்பூன் வெந்தயத்தை போட்டு மிதமான அளவு சூடாக்கி கொள்ளுங்கள்.
  3. அதன் மீது இரண்டு டீஸ்பூன் நெய்யை ஊற்றி சிறிது நேரம் கிளறி விடுங்கள்,
  4. அதிகமாக தீயில் காட்டாமல் மிதமான அளவில் வெந்தயத்தை எடுத்து அப்படியே அதை வெறும் வயிற்றில் சாப்பிடுங்கள்.
  5. முடிந்தால் காலை வேலைகளில் வெறும் வயிற்றில் சாப்பிடுவது மிகவும் நல்லது.
  6. கூடுதலாக இந்த நெய்யில் வறுத்த வெந்தயத்தை காய்ச்சிய பாலில் சிறிது நேரம் ஊற வைத்து சாப்பிட்டால் கூடுதல் நன்மைகள் கிடைக்கும்.

மேலும் படிக்க: 40 வயதை கடந்த பெண்கள் ஆரோக்கியமாக, அழகாக இருக்க மிக அவசியமான 8 வைட்டமின்கள்

 

இந்த கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு பகிருங்கள். மேலும், இதுபோன்ற உடல்நலம், ஆரோக்கியமான வாழ்வு சார்ந்த  சுவாரஸ்யமான தகவல்களை தினமும் தெரிந்து கொள்ள எப்போதும் ஹெர்ஜிந்தகி உடன் இணைந்திருங்கள். ஹெர்ஜிந்தகியின் முகநூல் பக்கத்தை இந்த லிங்கின் மூலம் பின் தொடருங்கள் HerZindagi Tamil

 

image source: freepik

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com