Dry Fruits to Avoid: கோடை காலத்தில் தவிர்க்க வேண்டிய உலர் பழங்கள் இதோ

கோடை காலத்தில் சாப்பிடக்கூடாத உலர் நட்ஸ் மற்றும் பழங்கள் குறித்து இந்த கட்டுரையில் பார்க்கலாம். 

nuts to avoid
nuts to avoid

கோடை காலம் துவங்கி விட்டாலே நம்மில் பலருக்கும் உடலில் உஷ்ணம் அதிகரித்து விடும். கோடை காலத்தில் கொளுத்தும் வெயிலை சமாளிக்க நாம் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியம். குறிப்பாக நார்ச்சத்து நிறைந்த பழங்கள் மற்றும் காய்கறிகளை அதிக அளவில் சாப்பிட வேண்டும். இது நம் உடலை நீரேற்றத்துடன் வைத்திருக்க உதவுகிறது. குறிப்பாக நீங்கள் உட்கொள்ளும் உணவுகள் உடலுக்கு குளிர்ச்சியை தரக்கூடிய உணவுகளாக இருக்க வேண்டும். இந்த வரிசையில் சில உலர் பழங்கள் மற்றும் நட்ஸ் வகைகள் நம் உடல் சூட்டை அதிகரிக்க கூடும். இது போன்ற உலர் பழங்கள் மற்றும் நட்ஸ் வகைகளை கோடை காலத்தில் தவிர்க்க வேண்டும். அது எந்த வகை உலர் பழங்கள் என்று இந்த கட்டுரையில் பார்க்கலாம்.

உலர் அத்தி:

A scaled  ()

கோடை காலத்தில் இந்த உலர் அத்தி பழங்களை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். ஏனென்றால் இந்த உலர் அத்தி பழங்களில் அதிக அளவு இனிப்பு சுவை நிறைந்திருக்கும். இது நம் உடல் வெப்பநிலையை அதிகரிக்க கூடும். கொளுத்தும் கோடையில் உடல் சூட்டை குறைக்க வேண்டும் என்றால் உலர் அத்திப்பழத்தை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும் என்று மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.

உலர்ந்த மாங்காய்:

கோடைகாலம் என்று சொன்னாலே நம்மில் பலருக்கும் முதலில் ஞாபகம் வரும் ஒரு பழம் மாம்பழம். ஆனால் இந்த மாம்பழத்தை அதிக அளவில் சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்க கூடும். இந்த கோடை காலத்தில் வருஷம் முழுமைக்கும் தேவைப்படுகிற ஊறுகாய் போன்றவற்றை இந்த மாங்காய் வைத்து தயாரித்து வைத்துக் கொள்வோம். அதேபோல மாங்காய் உப்பு கண்டம் போட்டு சிலர் வீட்டில் எடுத்து வைப்பார்கள். இது போன்ற மாங்காய் சார்ந்த உணவுகளை சமைத்து வைக்கும் போது வெயில் காலம் முடிந்த பிறகு சமைத்து சாப்பிடுங்கள். ஏனென்றால் இந்த உலர் மாங்காய் வெயில் காலத்தில் உடல் சூட்டை வேகமாக உயர்த்தும். ஏனெனில் வெயில் காலத்தில் உலர் மாங்காய் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.

பிஸ்தா பருப்பு:

  ()

ஆரோக்கியமும் சுவையும் நிறைந்த ஒரு உலர் நட்ஸ் வகை தான் இந்த பிஸ்தா. இது நம் உடலுக்கு அதிக ஆற்றலை தரக்கூடியது. அதே போல இந்த பிஸ்தாவில் அதிக கலோரிகளும் நிறைந்துள்ளது. பொதுவாக கோடைகாலத்தில் நம் உடலில் ஏற்கனவே நீர்சத்து குறைபாடு உண்டாகும். அதோடு அதிக கலோரிகளை கொண்ட இந்த பிஸ்தா பருப்பை சாப்பிடும் போது உடல் உஷ்ணம் இன்னும் அதிகரித்து விடும். ஒருவேளை பிஸ்தா பருப்பு சாப்பிட வேண்டும் என்று ஆசை தோன்றினால் கோடை காலத்தில் இரண்டு பிஸ்தா பருப்பு மட்டும் சாப்பிட்டுக் கொள்ளுங்கள். இந்த பிஸ்தாவை அளவாக சாப்பிடும்போது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த முடியும்.

மேலும் படிக்க: தினமும் வெந்தய டீ குடித்தால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் என்ன?

ஏலக்காய்:

கோடை காலத்தில் அதிகமாக ஏலக்காய் எடுத்துக் கொள்ளக் கூடாது. உடல் சூட்டை அதிகரிக்கும் தன்மை ஏலக்காய்க்கு உண்டு. இது வெயில் காலத்தின் போது இன்னும் அதிகமாக உடல் வெப்பநிலையை அதிகரிக்க செய்கிறது. இதனால் கொளுத்தும் வெயிலில் இருந்து தப்பிக்க ஏலக்காய் சேர்த்து டீ குடிப்பதை தவிர்க்க வேண்டும். அதே போல ஏலக்காய் சேர்த்து சமைக்கும் இனிப்பு வகைகளையும் கோடை காலத்தில் அதிகமாக சாப்பிடாமல் இருப்பது நல்லது.

Image source: google

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP