தொழில்நுட்பாக ஜெட் வேகத்தில் பறக்கும் உலகில் உடல் எடையை பராமரிப்பது சவாலான காரியமாக தெரிகிறது. சொகுசான வாழ்க்கைமுறை, ஆரோக்கியமற்ற உணவு தேர்வு, மன அழுத்தம் காரணமாக உடல் எடை அதிகரிக்கிறது. உடல் எடையைக் குறைப்பது கடினமான பணியாக தோன்றலாம். எனினும் உங்களிடம் சரியான திட்டமும், ஆரோக்கியமான உணமுறையும் இருந்தால் கட்டாயம் 10 கிலோ எடையைக் 2 மாதங்களில் குறைக்கலாம். 2 மாதங்களில் 10 கிலோ எடை குறைப்பு பற்றி அறிவியல் ரீதியான தரவுகளை தெரிந்து கொள்ளலாம். உடல் எடையைக் குறைக்க வேண்டுமானால் நாம் உட்கொள்ளும் கலோரிகளின் அளவை குறைக்க வேண்டும். இந்த பதிவில் குறிப்பிட்டுள்ள உணவுமுறையில் நீங்கள் ஆயிரம் முதல் ஆயிரத்து 500 கலோரிகள் மட்டுமே தினமும் எடுத்துக் கொள்வீர்கள். முக்கியமான விஷயம் ஊட்டச்சத்து குறைபாடு இன்றி உணவுகள் சாப்பிடுவது அவசியம்.
2 மாதங்களில் 10 கிலோ எடை குறைப்பு
- காலை உணவு 250 - 300 கலோரி
- காலை ஸ்நாக் 100 - 150 கலோரி
- மதிய உணவு 300 - 350 கலோரி
- மாலை நேர ஸ்நாக் 100 - 150 கலோரி
- இரவு உணவு 250 - 300 கலோரி
மொத்தமாக கணக்கிட்டால் நாம் ஒரு நாளைக்கு ஆயிரம் முதல் ஆயிரத்து 200 கலோரிகள் மட்டுமே சாப்பிட்டு இருப்போம்.
காலையில் நச்சு நீக்கம்
- உடலில் உள்ள கழிவுகளை, நச்சுக்களை நீக்குவதற்கு காலையில் ஆரோக்கியமான பானம் குடிப்பது முக்கியம்.
- தண்ணீரில் எலுமிச்சை, தேன் கலந்து குடிக்கலாம். எலுமிச்சையில் வைட்டமின் சி உள்ளது. தேன் நுண்ணயிர் எதிர்ப்பு பண்புகளை கொண்டது.
- கிரீன் டீ குடித்து உடலில் வளர்சிதை மாற்றத்தை ஊக்குவிக்கவும். இதை குடித்தால் உடல் எடையும் குறையும். இதில் கொஞ்சம் புதினா சேர்த்தால் செரிமான பிரச்னை வராது, வயிறு உப்புசம் தவிர்க்கப்படும்.
- உடலில் கொழுப்பை எரிப்பதற்கு இஞ்சியை தண்ணீரில் கொதிக்க வைத்து அரை டம்ளர் குடிக்கலாம்.
காலை உணவு 250 - 300 கலோரி
- ஒரு இட்லி 80 முதல் 100 கலோரி இருக்கும். சாதாரண இட்லி சாப்பிடாமல் மூன்று தானிய இட்லி சாப்பிடவும். அதே போல் தோசையும் 300 கலோரிகளுக்கு மிகாமல் சாப்பிடலாம்.
- ஒரு முட்டையில் சராசரியாக 75 கலோரி இருக்கும். மூன்று வேக வைத்த முட்டை மற்றும் 50 கிராம் கீரை சாப்பிடுங்ஜள்.
காலை ஸ்நாக் 100-150 கலோரி
- 11 மணி அளவில் நார்ச்சத்து, வைட்டமின் நிறந்த பழங்கள் சாப்பிடுங்கள். ஆப்பிள் அல்லது ஆரஞ்சு சாப்பிட்டு 100-150 கலோரி பெறலாம்.
- ஒரு கைப்பிடி அளவு உப்புக்கடலை சாப்பிடலாம். இதில் கலோரி குறைவு, நார்ச்சத்து அதிகம்.
மதிய உணவு 300-350 கலோரி
- 350 கலோரிகள் கொண்ட சாதம், பருப்பு குழம்பு, காய்கறி சாப்பிடலாம்.
- சப்பாத்தியுடன் சிக்கன் சாப்பிட்டால் புரதமும் கிடைக்கும். மீன் சாப்பிட்டாலும் கலோரிகள் அதிகரிக்காமல் பார்த்துக் கொள்ளவும்.
மேலும் படிங்க விளாம்பழத்தில் இவ்வளவு மருத்துவ பயன்களா ? ஆஸ்துமா, செரிமானம், சரும பிரச்னைகளுக்கு உடனடி தீர்வு
மாலை நேர ஸ்நாக் 100-150 கலோரி
கீரை சூப், தக்காளி சூப், கேரட் சூப் குடியுங்கள். இவை குறைந்த கலோரிகளை கொண்டது. ஒரு வெள்ளரிக்காய் அல்லது ஒரு கைப்பிடி பாதாம், வால்நட்ஸ் சாப்பிடலாம்.
இரவு உணவு 250-300 கலோரி
- இரவு நேரத்தில் முடிந்தவரை சாதம் சாப்பிடுவதை தவிர்த்திடுங்கள். வறுத்த சிக்கன் அல்லது மீன் 300 கலோரிகளுக்கு சாப்பிடலாம்.
- இரவில் எளிதில் செரிமானம் ஆகக் கூடிய உணவுகளை மட்டுமே சாப்பிடவும்.
- இந்த உணவுமுறையோடு தினமும் 3 லிட்டர் தண்ணீர் குடியுங்கள். அரை மணி நேரம் உடற்பயிற்சி செய்யவும். 8 மணி நேரம் தூக்கத்தை உறுதி செய்யுங்கள்.
இதுபோன்ற கட்டுரைகளுக்கு ஹெர் ஜிந்தகியுடன் தொடர்ந்து இணைந்திருங்கள்.
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation