உடல் எடையைக் குறைக்க காலிஃபிளவர் எப்படி உதவுகிறது தெரியுமா?

காலிஃபிளவரில் உள்ள நார்ச்சத்துக்கள் மற்றும் குறைந்த கலோரிகள் இருப்பதால் உடலில் தேவையில்லாத கொழுப்புகள் உடலில் சேர்வதைத் தடுப்பதோடு அதிக பசி ஏற்படுவதையும் கட்டுக்குள் வைக்கிறது.
image

நாம் சாப்பிடக்கூடிய ஒவ்வொரு காய்கறிகளிலும் ஒவ்வொரு விதமான ஊட்டச்சத்துக்கள் இருப்பதோடு உடல் ஆரோக்கியத்திலும் பெரும் பங்கு வகிக்கிறது. இந்த வரிசையில் இன்றைக்கு உடல் எடையைக் குறைப்பதற்கு காலிஃபிளவர் சிறந்த உணவாக கூறப்படும் நிலையில் எப்படி உதவுகிறது? என்பது குறித்து இங்கே அறிந்துக் கொள்ளலாம் வாருங்கள்.

உடல் எடையைக்குறைக்க உதவும் காலிஃபிளவர்:

குறைந்த கலோரிகள்:

காலிஃபிளவரில் கலோரிகள் குறைவாக இருப்பதால் எவ்வளவு சாப்பிட்டாலும் உடலில் கொழுப்புகள் சேர்வதில்லை. இதற்காக அதிக எண்ணெய்களைப் பயன்படுத்தி பொரித்த உணவாக சாப்பிடக்கூடாது. மாறாக வேக வைத்து எப்போதும் பொரியல் செய்வது போன்று செய்து சாப்பிடுவது உடலுக்கு நன்மை பயக்கும். மேலும் குறைவாக சாப்பிட்டாலும் கூட நாள் முழுவதும் பசியைக் கட்டுப்படுத்த உதவும்.

நார்ச்சத்துக்கள் அதிகம்:

நார்ச்சத்துக்களை அதிகம் கொண்டது காலிஃபிளவர். உடலில் எந்தளவிற்கு நார்ச்சத்துக்கள் கொண்ட உணவுகளைச் சேர்த்துக் கொள்கிறோமோ? அந்தளவிற்கு உடல் ஆரோக்கியமாக இருக்கும். ஆம் சாப்பிடக்கூடிய உணவு எளிதில் செரிமானம் அடையவதற்கு நார்ச்சத்துக்கள் கொண்ட உணவு பெரும் பங்கு வகிக்கும். எனவே நார்ச்சத்துக்கள் அதிகம் கொண்ட காலிஃபிளவரை உணவில் சேர்த்துக்கொள்ளும் போது செரிமானம் சீராவதோடு பசியைக் கட்டுப்படுத்த வழிவகுக்கும்.

மேலும் படிக்க:ஒரே மாதத்தில் 10 கிலோ எடையை குறைக்கலாம் - இதை செய்தால் போதும், நல்ல ரிசல்ட் கிடைக்கும்

குறைவான கார்போஹைட்ரேட்:

மற்ற காய்கறிகளை விட காலிஃபிளவரில் குறைந்த அளவிலான கார்போஹைட்ரேட் சத்துக்கள் உள்ளது. இவற்றை உணவில் எந்தளவிற்கு சேர்த்துக் கொள்கிறோமோ? அந்தளவிற்கு இரத்த்தில் சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைப்பதோடு உடல் எடையைக் குறைக்க உதவுகிறது.


நச்சு நீக்கியாக செயல்படும் காலிஃபிளவர்:

காலிஃபிளவரில் குளுக்கோசினோலேட்டுகள் போன்ற சேர்மங்கள் அதிகளவல் உள்ளது. இது உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் நச்சுத்தன்மையை நீக்குவதோடு கல்லீரல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது. பொதுவாக கல்லீரலின் செயல்பாடு என்பது உடலில் உள்ள கொழுப்புகளை அகற்றுவதோடு வளர்சிதை மாற்றத்தையும் சீராக்குகிறது. எனவே உடல் எடையைக் குறைக்கவும் உதவுகிறது.

cauliflower benefits

மேலும் படிக்க:Raw Banana Benefits: பச்சை வாழைக்காய் உணவில் எடுத்துக்கொள்வதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்

ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்த காலிஃபிளவர்:

வைட்டமின் சி மற்றும் பீட்டா கரோட்டின் போன்ற ஆன்டிஆக்ஸிடன்ட்கள் அதிகம் கொண்ட காய்கறிகளில் ஒன்றாக உள்ளது காலிஃபிளவர். உடல் எடையைக் குறைக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் காலிஃபிளவரை உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.

காலிஃபிளவரை உணவில் சேர்த்துக் கொள்ளும் முறை:

காலிஃபிளவரில் கலோரிகள், கார்போஹைட்ரேட்டுகள், புரதம், வைட்டமின் சி, மெக்னீசியம், சோடியம், வைட்டமின் கே, பீட்டா கரோட்டின், நார்ச்சத்துகள், கார்ப்ஸ் போன்ற பல்வேறு ஊட்டச்சத்துக்கள் கொண்ட காலிஃபிளவரை பல்வேறு வழிகளில் உணவு முறையில் சேர்த்துக் கொள்ளலாம். குறிப்பாக குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த காலிஃபிளவரை பொரித்துக் கொடுக்கலாம். ஒருவேளை உடல் பருமன் அதிகம் உள்ளவர்கள் டயட்டில் காலிஃபிளவரை சேர்த்துக் கொள்ள வேண்டும் என்றால் தயிருடன் காலிஃபிளவரை செய்து சாப்பிடலாம். மேலும் காலிஃபிளவர் சாதம், காலிஃபிளவர் பிஸ்கட் போன்ற பல்வேறு ரெசிபிகளாக செய்து சாப்பிடலாம்.

Image credit - Freepik

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP