
அத்திப்பழங்களை பழமாகவும் அல்லது உலர வைத்தும் சாப்பிடலாம். உலர்ந்த அத்தி பெரும்பாலும் எல்லா பருவ காலத்திலும் எளிதாக கிடைக்கும். பல நோய்களின் அபாயத்தை குறைக்க அத்திப்பழங்களை சாப்பிடலாம். இதில் வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. மேலும் உடல் ஆரோக்கியத்திற்கு அத்தியாவசியமான நார்ச்சத்து, துத்தநாகம், ஃபோலேட், இரும்பு, நியாசின், மெக்னீசியம் மற்றும் ரிபோஃப்ளேவின் போன்ற ஊட்டச்சத்துக்களும் அத்திப்பழத்தில் உள்ளன.
இப்படி பல சத்துக்களை உள்ளடக்கிய அத்திப்பழத்தை பெரும்பாலும் அனைவரும் விரும்பி சாப்பிடுகிறார்கள்.இருப்பினும் சர்க்கரை நோயாளிகள் அத்திப்பழங்களை சாப்பிடலாமா என்ற கேள்வி பலருக்கு எழலாம். இதற்கான விடை அறிய சர்க்கரை நோய் கல்வியாளரும், மூத்த ஊட்டச்சத்து நிபுணருமான சுஜாதா சர்மா அவர்களிடமிருந்து தெரிந்து கொள்வோம்.
இந்த பதிவும் உதவலாம்: மலச்சிக்கல் தீர சோம்பை எப்படி பயன்படுத்த வேண்டும் தெரியுமா?
மருத்துவரின் கூற்றுப்படி அத்திப்பழங்கள் சர்க்கரை நோயாளிகளுக்கு நன்மை பயக்கின்றன. மேலும் இதில் உள்ள அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட் பண்புகள் சர்க்கரை நோயை கட்டுப்படுத்த உதவுகின்றன. இது இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்கவும், இன்சுலின் சுரப்பை மேம்படுத்தவும் உதவுகிறது. மேலும் நார்ச்சத்து நிறைந்த அத்திப்பழங்கள் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களின் இன்சுலின் செயல்பாட்டை ஒழுங்குபடுத்த உதவுகின்றன.
சர்க்கரை நோயாளிகள் தாராளமாக அத்திப்பழங்களை சாப்பிடலாம். ஆனால் அவற்றை குறைவான அளவிலேயே எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

அத்திப்பழத்தில் தாமிரம், மெக்னீசியம், பாஸ்பரஸ் மற்றும் பொட்டாசியம் நிறைந்துள்ளன. இவை செரிமானத்தை மேம்படுத்தவும், பசியைக் குறைக்கவும் மற்றும் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தவும் உதவுகின்றன.
உணவிற்கு பிறகு உடலில் உறிஞ்சப்படும் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்துவதில் பொட்டாசியம் முக்கியப் பங்கு வகிக்கிறது. அத்திப்பழத்திலும் பொட்டாசியம் இருப்பதால் இது சர்க்கரை நோயாளிகள் சாப்பிட பாதுகாப்பானது. மேலும் இதில் உள்ள பண்புகள் கணையத்தில் சேதம் ஏற்படுவதை தடுக்கின்றன.
சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் ஒரு நாளைக்கு 2 அத்திப்பழங்கள் வரை சாப்பிடலாம். அத்திப்பழம் இரத்தத்தை உறைய வைக்கும் தன்மை கொண்டது. எனவே இரத்தத்தை மெலிதாக்க மருந்துகள் எடுத்துக் கொள்பவர்கள் மருத்துவர் ஆலோசனை இன்றி அத்திப்பழங்களை சாப்பிட வேண்டாம்.
ஊற வைத்த அத்தி பழங்களை காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் சாப்பிடலாம். நீங்கள் இதை இரவு வேலையில் சாப்பிட விரும்பினால் பாலுடன் சேர்த்து இரவு தூங்க செல்வதற்கு முன் குடிக்கலாம்.
இந்த பதிவும் உதவலாம்: கொரோனாவின் புதிய மாறுபாடு அதிக ஆபத்தானதா?

இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும், பதிவு குறித்த உங்கள் கருத்தினை கமெண்ட் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.
image source:freepik
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com