உடல் எடை குறையணுமா? சிவப்பு அரிசியை வைத்து இந்த ரெசிபிகளை ட்ரை பண்ணுங்க!

சிவப்பு அரிசி குறைவான கார்போஹைட்ரேட், வைட்டமின் பி1, வைட்டமின் பி 6, இரும்புச்சத்து, மெக்னீசியம் போன்ற பல்வேறு ஊட்டச்சத்துக்களைக் கொண்டுள்ளது

brown rice pulao making

இன்றைக்கு நம்மில் பலர் சந்திக்கும் உடல் நலப்பிரச்சனைகளில் ஒன்றாக உள்ளது உடல் பருமன். அதிகரித்த உடல் எடையைக் குறைக்க வேண்டும் என்பதற்காக உணவுக்கட்டுப்பாட்டில் இருப்பது, ஜிம்மிற்குச் செல்வது என எத்தனையோ? முயற்சிகளை மேற்கொண்டாலும் பலருக்குப் பலன் கிடைக்காது. இந்த சூழலில் உடல் எடையைக் குறைப்பதற்கென்று பல்வேறு உணவுக்கட்டுப்பாடு முறைகளில் ட்ரெண்டிங் ஆகிவருகிறது. இன்டர் மீடியட் டயட் போன்ற பல்வேறு முறைகளை மக்கள் பின்பற்றிவருகின்றனர்.

ஆனாலும் சிலருக்கு 8 அல்லது 16 மணி நேரம் உண்ணாவிரதம் இருக்க முடியாது. எனவே ஆரோக்கியமான உணவுகளுடன் உங்களது உடல் எடையைக் குறைக்க வேண்டும் என்று நினைத்தால், சிவப்பு அரிசியில் செய்யக்கூடிய ரெசிபிகளை ட்ரை பண்ணலாம். இதோ உங்களுக்காக சில ரெசிபி லிஸ்ட்கள் இங்கே..

brown rice ()...

சிவப்பு அரிசி ரெசிபிகளின் லிஸ்ட்:

சிவப்பு அரிசி ஆனியன் புலாவ்:

வெங்காயம் மற்றும் இலவங்கப்பட்டையின் உதவியோடு செய்யக்கூடிய ரெசிபிகளில் ஒன்றாக உள்ளது சிவப்பு அரிசி ஆனியன் புலாவ். வெள்ளை அரிசியில் சமைக்கும் போது, இதில் உள்ள கார்போஹைட்ரேட்டுகள் உடலில் கெட்ட கொழுப்புகளை அதிகரிக்கிறது.

காளான் பிரவுன் ரைஸ் :

பழுப்பு அரிசியில் வெள்ளை அரிசியை விட நார்ச்சத்து அதிகம் உள்ளதால் செரிமான பிரச்சனைகளைச் சீராக்குகிறது. செரிமானம் சீராக நடைபெறும் போது உடலில் கெட்ட கொழுப்புகள் சேர்வதற்கு வாய்ப்பில்லை. இதனால் உடல் எடையையும் அதிகரிக்க வாய்ப்பில்லை. மேலும் காளானிலும் அதிகளவு ஊட்டச்சத்துக்கள் உள்ளதால், உடலுக்கு ஆரோக்கியமும் அளிக்கிறது.

சிக்கன் ஷெஸ்வான் ரைஸ்:

இந்தோ - சீன ரெசிபிகளில் மிகவும் பிரபலமானது சிக்கன் ஷெஸ்வான் ரைஸ். இன்றைக்குக் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரிடமும் சிக்கன் ரைஸ் மீதான மோகம் அதிகம் உள்ளது. வாரத்திற்கு ஒருமுறையாவது வாங்கிச் சாப்பிடுவார்கள். பாஸ்மதி ரைஸ் அல்லது வழக்கமான பொன்னி அரிசியில் செய்து சாப்பிடும் போது, இதில் உள்ள கார்போஹைட்ரேட் போன்ற பிற ஊட்டச்சத்துக்கள் உடல் எடையை அதிகரிக்கிறது.

இதைத் தவிர்க்க விரும்பினால், சிவப்பு அரிசியைக் கொண்டு செய்யப்படும் சிக்கன் ஷெஸ்வான் ரைஸ் ட்ரை பண்ணலாம். ருசியான உணவாக மட்டுமல்ல, உடலுக்கு ஆரோக்கியத்தை அளிக்கும் உணவாகவும் உள்ளது.

schezwan rice

மேலும் படிக்க:சுவையான போஹா நகெட்ஸ் செய்வது எப்படி?

சிவப்பு அரிசியில் உள்ள ஊட்டச்சத்துக்கள்:

சிவப்பு அரிசி குறைவான கார்போஹைட்ரேட், வைட்டமின் பி1, வைட்டமின் பி 6, இரும்புச்சத்து, மெக்னீசியம் போன்ற பல்வேறு ஊட்டச்சத்துக்களைக் கொண்டுள்ளது. எனவே அடுத்த முறை நீங்கள் உடல் எடையைக் குறைக்கத் திட்டமிட்டிருக்கும் சமயத்தில், வழக்கமான அரிசி உணவுகளைச் சமைப்பதற்குப் பதிலாக, சிவப்பு அரிசியில் செய்யப்படும் இதுபோன்ற ரெசிபிகளைக் கொஞ்சம் சமைப்பதற்கு முயற்சி செய்யுங்கள்.

Image source - Google
HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP