நாம் காலையில் சாப்பிடும் உணவானது உடல் ஆரோக்கியத்தை தீர்மானிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. நீங்களும் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பின்பற்ற விரும்பினால், உங்களுடைய உணவு முறையில் நல்ல மாற்றங்களை செய்ய விரும்பினால் இன்றைய பதிவில் பகிரப்பட்டுள்ள ஊற வைத்த பிஸ்தா பருப்பின் நன்மைகளை நிச்சயமாக தெரிந்து கொள்ளுங்கள்.
பிஸ்தா பருப்பில் புரதம், நார்ச்சத்து, ஆரோக்கியமான கொழுப்புகள், பொட்டாசியம் போன்ற பல ஊட்டச்சத்துக்கள் காணப்படுகின்றன. ஊட்டச்சத்து நிபுணர் ஏத்தா அவர்களின் கருத்துப்படி, " பிஸ்தா ஊட்டச்சத்துக்கள் நிறைந்த ஒரு சிற்றுண்டியாகும். இதில் வைட்டமின் B6, தயாமின் பொட்டாசியம் தாமிரம், மாங்கனீசு போன்ற பல அத்தியாவசிய வைட்டமின்களும், தாதுக்களும் நிறைந்துள்ளன. இந்த சத்துக்கள்யாவும் ஆற்றல் உற்பத்தி, மூளை செயல்பாடு, எலும்பு ஆரோக்கியம் மற்றும் நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. ஊற வைத்த பிஸ்தா பருப்பை உடற்பயிற்சிக்கு முன் அல்லது உடற்பயிற்சி செய்து பிறகு ஸ்நாக்ஸ் ஆக எடுத்துக் கொள்ளலாம்”.
இந்த பதிவும் உதவலாம்: உடல் எடையை குறைக்க இரவு உணவை இந்த நேரத்தில் சாப்பிடுங்க!
பிஸ்தா பருப்பின் ஓடுகளை நீக்கிவிட்டு, ஒரு கைப்பிடி அளவு எடுத்து இரவு முழுவதும் சாதாரண நீரில் ஊற வைக்கவும். போதுமானவரை உப்பு சேர்க்காத பிஸ்தா பருப்புகளை பயன்படுத்துவது நல்லது. இரவு முழுவதும் ஊறிய பிஸ்தாவை காலையில் சாப்பிடலாம். தினமும் ஒரு கைப்பிடி அளவு பிஸ்தா பருப்புகளை எடுத்துக் கொள்ளும்படி நிபுணர் பரிந்துரை செய்கிறார்.
பிஸ்தாவை ஊறவைப்பது அதன் வெளிப்புற அடுக்கில் இருக்கும் இன்ஹிபிட்டர்கள் மற்றும் பைடிக் அமிலம் போன்ற என்சைம்களை உடைக்க உதவுகிறது. இந்த என்சைம்களால் செரிமானம் கடினமாகலாம் மற்றும் முறையான ஊட்டச்சத்து உறிஞ்சுதல் தடைபடலாம். இந்நிலையில் பிஸ்தா போன்ற நட்ஸ் வகைகளை ஊறவைப்பதன் மூலம், அவற்றை எளிதாக ஜீரணிக்க முடியும். மேலும், அவற்றில் நிறைந்துள்ளன மதிப்பு மிக்க ஊட்டச்சத்துக்களை உடல் திறம் பட உறிஞ்சிக் கொள்ளும்.
பிஸ்தாவை ஊறவைப்பதால் வைட்டமின்கள், தாதுக்கள், ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களின் உறிஞ்சுதல் சிறப்பாக இருக்கும். இது பிஸ்தா பருப்புகளை அப்படியே சாப்பிடுவதை விட இன்னும் ஆரோக்கியமானது. பிஸ்தாக்களை ஊறவைத்து சாப்பிடுவதன் மூலம் உடலுக்கு அத்தியாவசியமான பல ஊட்டச்சத்துக்களை பெற முடியும்.
அடிக்கடி செரிமானம் சார்ந்த பிரச்சினைகளால் அவதிப்படுபவர்களுக்கு ஊற வைத்த பிஸ்தா மிகவும் நல்லது. பிஸ்தாவை ஊற வைக்கும் செயல்முறையானது, அதில் உள்ள ஆன்டி நியூட்ரியன்ட்களை குறைக்க உதவுகிறது. செரிமான அசௌகரியத்தை ஏற்படுத்தும் இது போன்ற ஆன்டி நியூட்ரியன்ட்களை நீக்குவதன் மூலம் செரிமான செயல்முறை சீராக நடைபெறும்.
ஊற வைத்த பிஸ்தா பருப்பு குடல் ஆரோக்கியத்திற்கும் உங்களுடைய ஒட்டு மொத்த உடல் ஆரோக்கியத்திற்கும் நன்மை தருவதாக நிபுணர் குறிப்பிட்டுள்ளார். பிஸ்தாவின் ஊட்டச்சத்து மதிப்பை அதிகரிக்கவும், அதை எளிதாக ஜீரணிக்கவும் ஊற வைத்து சாப்பிடுவது நல்லது. ஊற வைத்த பிஸ்தா பருப்புகளை அப்படியே சாப்பிடலாம் அல்லது நீங்கள் சமைக்கும் ஏதேனும் உணவுகளிலும் சேர்த்து சாப்பிடலாம்.
உங்களுக்கு ஏதேனும் உடல்நல பிரச்சனை இருந்தால் மருத்துவரை ஆலோசனை செய்த பின் பிஸ்தா பருப்புகளை சாப்பிடுவது நல்லது.
இந்த பதிவும் உதவலாம்: இடுப்பு கொழுப்பை குறைப்பது இவ்வளவு ஈஸியா! சிறந்த பலன் தரும் 2 யோகாசனங்கள்!
இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.
image source:freepik
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com