herzindagi
diet tips for summer by ayurvedha

கோடை காலத்திற்கு ஏற்ற ஆயுர்வேதிக் டயட் டிப்ஸ்

கோடையில் உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள இப்பதிவில் பகிரப்பட்டுள்ள உணவுகளை உங்கள் அன்றாட உணவு முறையில் சேர்த்துக்கொள்ளலாம்…
Expert
Updated:- 2023-04-24, 19:50 IST

கோடை காலம் ஆரம்பமாகி உள்ள நிலையில், அடுத்து அடுத்து வரும் நாட்களில் வெயிலின் தாக்கம் இன்னும் அதிகமாக இருக்கலாம். இந்நிலையில் அந்த அந்த பருவநிலைக்கு தகுந்த உணவு மாற்றங்களையும் செய்ய வேண்டிய அவசியம். மழை நாட்களில் எடுத்துக்கொள்ளும் ஒரு சில உணவுகள் கோடை காலத்திற்கு உகந்ததாக இருக்காது. ஒரு சில உணவுகளால் உடல் நல பிரச்சனைகளும் ஏற்படலாம். ஏனெனில் பருவநிலைக்கு ஏற்றவாறு எடுத்துக்கொள்ளும் உணவு மற்றும் பானங்களிலும் தேவையான மாற்றங்களை செய்து கொள்ள வேண்டும்.

ஹார்மோன் ஆரோக்கியம், குடல் ஆரோக்கியம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை பராமரிக்க பருவ காலத்திற்கு ஏற்ப உணவுப் பழக்கங்களில் சரியான மாற்றம் செய்ய வேண்டும். குறிப்பாக கோடை காலத்தில் நீர்ச்சத்து குறைபாடு, வெப்ப பக்கவாதம், அஜீரணம் போன்ற பல பிரச்சனைகள் வரலாம்.

இந்த பதிவும் உதவலாம்: தினமும் ஒரு பீட்ரூட் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி தெரியுமா?

இதை தடுக்க கோடை காலத்தில் செய்யப்பட வேண்டிய உணவு மாற்றங்கள் குறித்த தகவல்களை உணவியல் நிபுணர் மன்பிரீத் அவர்களிடம் இருந்து தெரிந்து கொள்வோம். நிபுணர் தனது இன்ஸ்டாகிராம் கணக்கில் பகிர்ந்த தகவல்களை இப்போது விரிவாக பார்க்கலாம்.

  • கோடை காலத்தில் சோளம், பார்லி போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்த தானியங்களை உங்கள் அன்றாட உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். குளிர்ச்சியான விளைவை கொண்ட இந்த தானியங்கள் கோடை காலத்திற்கு ஏற்றது.
  • பாதாம் பிசினை இரவு முழுவதும் ஊற வைத்து காலையில் எடுத்துக் கொள்ளலாம். இது கோடை காலத்தில் ஏராளமான ஆரோக்கிய நன்மைகளை தரும். இது கோடை காலத்தில் ஏற்படும் வெப்ப பக்கவாதம், வியர்வை போன்ற பிரச்சனைகளை நீக்கும்.

butter milk dummer diet

  • கோடையை சமாளிக்க புதினா மோர் ஒரு வரப்பிரசாதம் என்றே சொல்லலாம். இது குடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.
  • இதை கோடை காலத்தில் குடித்து வர ஏராளமான நன்மைகளை பெறலாம்.
  • பொதுவாக கோடை நாட்களில் அசிடிட்டி போன்ற வயிறு சார்ந்த பிரச்சனைகள் ஏற்படும். இதை தடுக்க இரவு பாலுடன் குல்கந்து கலந்து குடிக்கலாம்.
  • கோடை காலத்தில் கிடைக்கக்கூடிய பருவ கால பழங்களான தர்பூசணி, மூலாம் பழம், மாம்பழம், செர்ரி போன்ற பழங்களை உங்கள் அன்றாட வழக்கத்தில் சேர்த்துக் கொள்ளலாம். நார்ச்சத்து நிறைந்த இந்த பழங்கள் உடலை புத்துணர்ச்சியாக வைத்துக் கொள்ளும்.
  • பழங்களுடன் நீர்ச்சத்து நிறைந்த காய்கறிகளையும் எடுத்துக்கொள்ள வேண்டும். சுரைக்காய், வெள்ளரிக்காய் போன்ற நீர்ச்சத்து நிறைந்த காய்கறிகள் கோடையை சமாளிக்க பெரும் உதவும். இவற்றை உங்கள் அன்றாட உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.

cucumber for summer diet

  • பாரம்பரியமாக நடைமுறையில் இருக்கும் கோடைகால பானங்களான சர்பத், இளநீர், மோர், பானகம் போன்றவற்றையும் தவறாமல் எடுத்துக் கொள்ளுங்கள்.
  • கோடை காலத்தில் சமையலுக்கு சீரகம், ஏலக்காய், சோம்பு போன்ற உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடிய மசாலா பொருட்களை பயன்படுத்தலாம்.
  • கோடைக்காலத்தில் ஏற்படும் நோய் தொற்றின் அபாயத்தை குறைக்க நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுவாக வைத்திருக்க வேண்டியது அவசியம். இதற்கு தயிர்யுடன் உலர் திராட்சை சேர்த்து சாப்பிடலாம்.

இந்த பதிவும் உதவலாம்: ஹீமோகுளோபினை அதிகரிக்க உதவும் சிறந்த சாறு எது தெரியுமா?

இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும், பதிவு குறித்த உங்கள் கருத்தினை கமெண்ட் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.

image source:freepik

Herzindagi video

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com