
முழு தானியமான கம்பில் உடலுக்கு நன்மை பயக்கக்கூடிய பல நன்மைகள் நிறைந்துள்ளன. ஆரோக்கியமான வாழ்க்கை முறையை கடைபிடிக்க விரும்பும் பலரும் சிறுதானியங்களை தங்கள் உணவில் சேர்த்து வருகின்றனர். கம்பு, சோளம், வரகு, திணை போன்ற சிறு தானியங்களை சாப்பிட்டால் குச்சி ஊன்றும் வயதிலும் யாருடைய உதவியும் இன்றி சுயமாகவும், திடமாகவும் வாழலாம்.
இந்த சிறுதானியங்களை வைத்து கஞ்சி, களி, தோசை, இட்லி போன்ற பல உணவுகளை சமைக்கலாம். இதனை வடித்து வெள்ளை சாதத்திற்கு பதிலாகவும் சாப்பிடலாம். காலத்தால் அழிக்க முடியாத நம் நாட்டு பாரம்பரிய உணவுகளை பராமரிப்போம். இயற்கை உணவுகளை சாப்பிட்டு நோய் நொடியின்றி வாழலாம். நீங்களும் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பின்பற்ற விரும்பினால், கம்பை வாரம் ஒரு முறையாவது உங்கள் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். கம்பு தானியத்தின் மிகச்சிறந்த ஆரோக்கிய நன்மைகள் பின்வருமாறு…
இந்த பதிவும் உதவலாம்: உடலுக்கு பல அபார நன்மைகளை தரும் பலாக்கொட்டை!
கம்பு தானியத்தில் குறைந்த அளவு கலோரி மட்டுமே உள்ளது. உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பை குறைக்க விரும்புபவர்கள் கம்பை தங்கள் உணவில் சேர்த்துக் கொள்ளலாம். இதில் உள்ள நார்ச்சத்து குடல் இயக்கத்தை எளிதாக்கவும், உடல் எடையை குறைக்கவும் உதவும். கம்பு தானியத்தை கொண்டு செய்யப்பட்ட உணவுகளை சாப்பிடும் பொழுது உங்களுக்கு நீண்ட நேரத்திற்கு பசி எடுக்காது. இதன் மூலம் தேவையற்ற உணவு உட்கொள்ளலை தடுக்கலாம்.

நார்ச்சத்தின் சிறந்த ஆதாரமான கம்பு சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ற சிறந்த உணவாக அமைகிறது. அரிசி மற்றும் கோதுமை போன்ற தானியங்களுடன் ஒப்பிடுகையில் கம்பு மிகக்குறைந்த அளவு கிளைசெமிக் குறியீட்டைக் கொண்டுள்ளது. டைப் 2 சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் கம்பை தங்கள் உணவில் சேர்த்து வர இரத்த சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைத்திருக்கலாம்.
கம்பில் புரதம், வைட்டமின் B6, துத்தநாகம், இரும்புச்சத்து மற்றும் ஃபோலேட் போன்ற பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இந்த ஊட்டச்சத்துக்கள் யாவும் ஆரோக்கியமான முடி மற்றும் சருமத்திற்கு அத்தியாவசியமானவை. கம்பை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இந்த ஊட்டச்சத்து குறைபாடுகளையும் தடுக்கலாம். உங்கள் சருமத்தில் இயற்கையான பளபளப்பைத் தக்கவைத்துக்கொள்ள, இறந்த சரும செல்களை நீக்க கம்பு தானியத்தை சாப்பிடலாம்.
கம்பு தானியத்தில் உள்ள மெக்னீசியம் இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள உதவுகிறது. மேலும் பொட்டாசியம் நிறைந்த கம்பு இதயத்தின் இரத்த நாளங்களை விரிவுபடுத்தி, இரத்த ஓட்டத்தை சீராக்குகிறது. தமனிகளில் இரத்த ஓட்டம் சீராக இருப்பதால் மாரடைப்பு போன்ற கடுமையான இதயம் சார்ந்த நோய்களை தடுக்கலாம்.

கம்பு தானியத்தில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் வயது முதிர்வின் அறிகுறிகளை தாமதப்படுத்துகின்றன. சிறுநீரகம் மற்றும் கல்லீரலின் ஆரோக்கியத்தை பராமரிப்பது முதல் புற்றுநோயை தடுப்பது வரை கம்பு சாப்பிடுவதால் ஏராளமான நன்மைகளை பெறலாம். இது உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி உங்கள் ஆரோக்கியத்தை பாதுகாக்கும்.
இத்தகைய நன்மைகள் உடைய கம்பு தானியத்தை வாரத்தில் ஒரு முறையாவது சேர்த்துக் கொள்ள முயற்சி செய்வோம்!
இந்த பதிவும் உதவலாம்: 30 நாட்களுக்கு இதை செய்து பாருங்கள், உடல் எடையை விரைவில் குறைக்கலாம்!
இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.
image source:freepik
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com