ஒரு கப் பீட்ரூட் சாப்பிடுங்க வாழ்க்கையே மாறிடும்; எண்ணற்ற நன்மைகளை கொட்டிக் கொடுக்கும்

தினமும் ஒரு கப் பீட்ரூட் சாப்பிட்டால் உடலுக்கு கிடைக்கும் அற்புதமான நன்மைகள் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம். பீட்ரூட்டில் உடலுக்கு தேவையான எண்ணற்ற ஊட்டச்சத்துகள் அடங்கி இருக்கின்றன.
image

பீட்ரூட் என்ற வார்த்தையை கேட்டாலே பெரும்பாலான குழந்தைகளுக்கு பிடிக்காது. பள்ளி செல்லும் குழந்தைக்கு மதிய உணவில் பீட்ரூட் கொடுத்தால் திரும்பி வரும் போது அந்த காய் அப்படியே இருக்கும். பீட்ரூட்டின் அருமைகளை தெரிந்து கொண்டால் அதை யாரும் தவிர்க்க மாட்டார்கள். உங்களுடைய ஆயுளை அதிகரிக்க விரும்பினால் கட்டாயமாக பீட்ரூட் சாப்பிடுங்கள். இதை பச்சையாக, வேக வைத்து அல்லது ஜூஸ் போட்டு குடிக்கலாம். பீட்ரூட் சாப்பிட்டால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் ஏராளம்.

beetroot health

ஊட்டச்சத்து நிறைந்த பீட்ரூட்

பீட்ரூட்டில் வைட்டமின்ஸ், ஆன்டிஆக்ஸிடண்ட்கள் நிறைந்திருக்கின்றன. குறிப்பாக
வைட்டமின் சி, போலேட், பொட்டாசியம், நார்ச்சத்து ஏராளமாக உள்ளன. இவை அனைத்தும் உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை தரக்கூடியது.

இதய ஆரோக்கியம் மேம்படும்

இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த மற்றும் சீரான இரத்த ஓட்டத்திற்கு பீட்ரூட் சாப்பிவடுது அவசியம். இதில் நைட்ரேட் உள்ளது. பீட்ரூட் சாப்பிடுவதால் மாரடைப்பு, இதய நோய் பிரச்னைகளின் அபாயத்தை குறைக்கலாம்.

செரிமான ஆரோக்கியம்

இதில் நார்ச்சத்து அதிகளவு இருப்பதால் மலச்சிக்கல், செரிமான கோளாறு தவிர்க்கப்படும். குடலில் செரிமானத்திற்கு தேவையான உயிரினங்களை
பீட்ரூட்டின் நார்ச்சத்து பாதுகாக்கும்.

கல்லீரல் சுத்திகரிப்பு

பீட்ரூட்டில் உள்ள ஊட்டச்சத்துகள் கல்லீரல் செயல்பாடுகளை ஊக்குவித்து நச்சுக்களை வெளியேற்றும். பீட்ரூட் தொடர்ந்து சாப்பிட்டால் கல்லீரல் சுத்தமாகும்.

மூளை செயல்பாடு

பீட்ரூட்டில் உள்ள நைட்ரேட்ஸ் மூளைக்கான இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும். இது நினைவாற்றலை அதிகரிக்கும். மூளை சிறப்பாக செயல்பட்டால் வயதான தோற்றத்தையும் தவிர்க்கலாம்.

எடை இழப்புக்கு உதவி

உடல் எடையை குறைக்க விரும்பும் நபர்கள் தினமும் ஒரு கப் பீட்ரூட் சாப்பிடுவது நல்லது. இதில் நார்ச்சத்து அதிகம், கலோரிகள் மற்றும் கொழுப்பு மிகக் குறைவு.
பீட்ரூட்டின் நார்ச்சத்து உங்களை நீண்ட நேரத்திற்கு முழுமையாக உணர வைக்கும். இதனால் நம்முடைய பசி அடங்கும்.

சரும ஆரோக்கியம்

இதன் அழற்சி எதிர்ப்பு பண்புகளும், ஆன்டிஆக்ஸிடண்ட்களும் சரும
ஆரோக்கியத்திற்கு பெரிதும் உதவும். பீட்ரூட்டை உணவுமுறையில் தொடர்ச்சியாக
உணவுமுறையில் சேர்த்துக் கொண்டால் சுருக்கங்களை தவிர்க்கலாம்.

இரத்த சர்க்கரை கட்டுப்பாடு

பீட்ரூட் இயற்கையான இனிப்பு கொண்டது. எனினும் பீட்ரூட்டின் கிளைசெமிக் குறியீடு மிகவும் குறைவே. இதன் காரணமாக இரத்த சர்க்கரை அளவுகள் அதிகரிக்காது. சர்க்கரை நோயாளிகள் பீட்ரூட் சாப்பிடுவது மிகவும் நல்லது.

மேலும் படிங்ககண்மூடி திறப்பதற்குள் 4 கிலோ எடையைக் குறைக்க மிலிட்டரி டயட் பின்பற்றுங்க

எப்போதும் பீட்ரூட் உங்களுக்கு ஊட்டமளித்து புத்துணர்வாக உணர வைக்கும். இதுபோன்ற கட்டுரைகளுக்கு ஹெர் ஜிந்தகியுடன் தொடர்ந்து இணைந்திருங்கள்.

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP