கண்மூடி திறப்பதற்குள் 4 கிலோ எடையைக் குறைக்க மிலிட்டரி டயட் பின்பற்றுங்க

மிலிட்டரி டயட் என்றால் என்ன ? மிலிட்டரி டயட் பின்பற்றி உடல் குறைப்பது எப்படி ? உடல் எடை குறைப்புக்கு மிலிட்டரி டயட் எந்த வகையில் உதவும் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம். இந்த உணவுமுறையை பின்பற்றி 4-5 கிலோ எடையை ஒரு வாரத்திற்குள் குறைத்திடலாம்.
image

மிலிட்டரி டயட் ( உணவுமுறைக்கு ) பல பெயர்கள் உண்டு. இதில் முன்று நாட்களுக்கு பின்பற்ற கூடிய உணமுறையும் உள்ளது. உடல் எடையைக் வேகமாக குறைப்பதற்கு உதவும் உணவுமுறைகளில் மிலிட்டரி உணவுமுறையும் ஒன்று. இந்த உணவுமுறை குறைவான கார்போஹைட்ரேட் உட்கொள்ளலை வலியுறுத்துகிறது. அதே போல எத்தனை கலோரிகளை எடுத்துக்கொள்கிறோம் என்பதும் முக்கியமாகிறது. மிலிட்டரி உணவுமுறையை பின்பற்றி உடல் எடையைக் குறைப்பது எப்படி என இந்த பதிவில் பார்க்கலாம்.

military diet weight loss

மிலிட்டரி உணவுமுறை என்றால் என்ன ?

முதல் 3 நாட்களுக்கு கடுமையான உணவுமுறையும், அடுத்த 4 நாட்களுக்கு சமச்சீரான உணவுமுறையையும் பின்பற்ற வேண்டும். மிலிட்டரி உணவுமுறையை கச்சிதமாக பின்பற்றினால் வாரத்தில் 4-5 கிலோ எடையைக் குறைக்கலாம். நீங்கள் எதிர்பார்த்த அளவிற்கு எடையைக் குறைக்கும் வரை மிலிட்டரி உணவுமுறையை தொடர்ந்து பின்பற்றலாம்.

ஒரு நாளைக்கு 1,200 முதல் 1,400 கலோரிகளை மட்டுமே உட்கொள்ள வேண்டும்.

முதல் நாள்

காலை : அரை கிரேப் ஃபுரூட், பிரெட், டீ

மதியம் : ஒரு மீன், பிரெட், டீ

இரவு : 100 கிராம் இறைச்சி, ஒரு கப் பீன்ஸ், ஒரு ஆப்பிள், சிறிய கப் ஐஸ் கிரீம்.

இரண்டாம் நாள்

காலை : ஒரு முட்டை, பிரெட், ஒரு வாழைப்பழம்

மதியம் : ஒரு கப் சீஸ், ஒரு முட்டை, 50-50 பிஸ்கட் (5)

இரவு : 100 கிராம் இறைச்சி, ஒரு கப் ப்ரோக்கோலி, சிறிய கப் ஐஸ் கிரீம், அரை கப் கேரட்

மூன்றாம் நாள்

காலை : 50-50 பிஸ்கட் (5), பாலாடைக்கட்டி, ஒரு ஆப்பிள்

மதியம் : டீ, ஒரு முட்டை, பிரெட்

இரவு : ஒரு மீன், ஒரு வாழைப்பழம், ஒரு கப் ஐஸ் கீரிம்

குறைந்த அளவிலான கலோரிகளை உட்கொள்வதால் உடல் எடை வேகமாக குறையும். இதை பின்பற்றுவதும் எளிதாக தோன்றும்.

மிலிட்டரி டயட் சாதகம், பாதகம்

1,400 குறைவான கலோரிகளை உட்கொள்வதால் ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படலாம். குறிப்பாக உடலில் புரத குறைபாடு ஏற்படும். இந்த உணவுமுறையை பின்பற்றும் முன்பாக மருத்துவரின் ஆலோசனையை பெறுங்கள். 3 நாட்களில் உடல் எடை வேக வேகமாக குறையும். அட்கின்ஸ் அல்லது கீட்டோ உணவுமுறையை பின்பற்ற நினைப்பவர்களுக்கு மிலிட்டர் டயட் ஒரு சிறந்த பயிற்சியாகும். இந்த உணவுமுறையில் ஐஸ் கிரீம் இருப்பதால் உடலில் இரத்த சர்க்கரை அதிகரிக்க வாய்ப்புண்டு. குறைவான நாட்களுக்கு மட்டுமே மிலிட்டரி உணவுமுறையை பின்பற்ற முடியும். புரத இழப்பால் தசைகள் வலுவிழக்கும்.

இதுபோன்ற கட்டுரைகளுக்கு ஹெர் ஜிந்தகியுடன் தொடர்ந்து இணைந்திருங்கள்.

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP