வெந்தயத்தை அப்படியே சாப்பிடுவதை விட முளைக்கட்டி சாப்பிடும் போது பல நன்மைகளைப் பெற முடியும் என ஊட்டச்சத்து நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இதுவரை உங்களுக்கு அதைப்பற்றி எவ்வித விழிப்புணர்வும் இல்லையென்றால் இந்த கட்டுரையைக் கொஞ்சம் வாசித்துப்பாருங்கள். முளைகட்டிய வெந்தயத்தில் அந்தளவிற்கு பல்வேறு ஆரோக்கிய நன்மைகள் கொட்டிக்கிடக்கிறது. அவற்றில் சில உங்களுக்காக.
நம்மில் பலர் வெந்தயத்தை முதல் நாள் இரவில் ஊற வைத்து சாப்பிடுவோம். ஒரு சிலர் காலையில் எழுந்ததும் நீர் ஆகாரத்துடன் வெந்தயத்தை அப்படியே சாப்பிடுவார்கள். இந்த நடைமுறைகள் உடலுக்கு ஆரோக்கியத்தைத் தந்தாலும் இருமடங்கு ஆரோக்கிய நன்மைகளைப் பெற வேண்டும் என்று நினைத்தால் வெந்தயத்தை முதல் நாள் இரவு ஈரத்துணியில் கட்டி வைத்து முளைகட்டிய பின்னதாக மறு நாள் காலையில் சாப்பிடலாம். இதில் அதிகப்படியான வைட்டமின் பி, ப்ரோட்டீன், நியாசின், பொட்டாசியம், இரும்புச்சத்து மற்றும் ஆல்கலாய்ட்ஸ் போன்ற பல்வேறு ஊட்டச்சத்துக்கள் நிரம்பியுள்ளதால் உடலில் பல நோய்களின் தாக்கம் ஏற்படுவதைத் தடுக்கிறது.
மேலும் படிக்க: Banana Peel Benefits: உடல் ஆரோக்கியம் முதல் சரும பிரச்சனைகள் வரை நல்ல தீர்வை தரும் வாழைப்பழ தோல்
இளைஞர்கள் முதல் முதியவர்கள் வரை பலரும் சந்திக்கும் பிரச்சனைகளில் முக்கியமானதாக உள்ளது இதய நோய். அமைதியாக தாக்கும் இந்நோய் பாதிப்பைத் தவிர்க்க வேண்டும் என்று நினைப்பவர்கள், முளைகட்டிய வெந்தயத்தைத் தினமும் சாப்பிட வேண்டும். இதில் 75 சதவீதத்திற்கும் அதிகமாக நார்ச்சத்துக்கள் உள்ளது. இதோடு அதிகப்படியான கொழுப்புகள் உடலில் சேர்வதையும் தடுக்கும் என்பதால் இதயம் சம்பந்தப்பட்ட பல பிரச்சனைகள் ஏற்படுவதைத் தடுக்கிறது. குறிப்பாக வெந்தயத்தில் உள்ள பொட்டாசியம் உடலில் இருக்கும் சோடியம் அளவை சீராக்கி இரத்த அழுத்தம் ஏற்படாமலும் பாதுகாக்கிறது.
இன்றைய பருவ மாற்றத்தின் காரணமாக பலருக்கும் காய்ச்சல், சுவாசக் கோளாறு போன்ற பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகிறது. இதுபோன்று வைரஸ் தொற்றினால் ஏற்படக்கூடிய காய்ச்சல், தலைவலி போன்ற பிரச்சனைகளுக்குத் தீர்வு காண வேண்டும் என்று நினைத்தால் கட்டாயம் முளைகட்டிய வெந்தயத்தை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். மேலும் அதிகப்படியான ஆன்டிஆக்ஸிடன்டகள் அதிகளவில் உள்ளதால் உடலின் செல்களின் வளர்ச்சிக்கும் உதவுகிறது.
சர்க்கரை நோய் பிரச்சனை உள்ளவர்கள் தினமும் முளைகட்டிய வெந்தயத்தை உணவு முறையில் சேர்த்துக் கொள்ள வேண்டும். இதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் இன்சுலின் அளவை அதிகரிக்கவும், ரத்ததத்தில் சர்க்கரை அளவைக் கட்டுக்கள் வைத்திருக்கவும் உதவுகிறது. டைப் 2 சர்க்கரை நோய் பாதிப்பு உள்ளவர்கள் உடல் நல பிரச்சனைகளைத் தீர்க்கவும் முளைகட்டிய வெந்தயத்தைச் சாப்பிடலாம்.
மேலும் படிக்க: எலும்புகளை வலுப்படுத்தும் ஆரோக்கியம் நிறைந்த எள்ளு லட்டு!
பெண்களுக்கு மாதவிடாய் சமயத்தில் ஏற்படக்கூடிய வயிற்று வலி, தலைவலி போன்றவற்றிற்குத் தீர்வு காண வேண்டும் என்றால் முளைகட்டிய வெந்தயத்தை உணவில் சேர்த்துக்கொள்ளலாம். தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் குழந்தைகளுக்கான தாய்ப்பாலை அதிகரிக்க வேண்டும் என்று நினைத்தால் வெந்தயத்தைச் சாப்பிடவும். மேலும் பொதுவாக ஏற்படக்கூடிய வயிற்றுப்பெருமல், அஜீரணம் போன்ற பிரச்சனைகளுக்குத் தீர்வு காணவும் வெந்தயம் உதவுகிறது.
முளைகட்டிய வெந்தயத்தை உணவு முறையில் சேர்த்துக் கொள்ளும் போது உடல் நலத்திற்கு மட்டுமல்ல சம ஆரோக்கியத்திற்கும் மிகவும் உதவியாக உள்ளது. இதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் சருமத்தை எப்போதும் இளமையாக வைத்திருக்கவும், தலைமுடி பாதிப்பையும் தடுக்கிறது.
மேலும் படிக்க: தினமும் இரவு ஒரு பல் பூண்டு சாப்பிடுவதால் கிடைக்கும் மகத்தான நன்மைகள்!
முளைகட்டிய வெந்தயத்தில் பல்வேறு ஆரோக்கிய நன்மைகள் இருந்தாலும், இரவில் ஈரத்துணியில் முளைகட்டி தினமும் ஒரு ஸ்பூன் அளவிற்கு சாப்பிட வேண்டும். அளவுக்கு அதிகமாக சாப்பிடும் போது உடலுக்கு கேடு விளைவிக்கும் என்பதையும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
Image source - Google
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com