herzindagi
image

தென் தமிழகத்து ஸ்பெஷல்; சிறுகிழங்கில் உள்ள ஆரோக்கிய நன்மைகளின் லிஸ்ட்

திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி என தென் தமிழகத்தில் மட்டும் அதிகம் விளையக்கூடிய சிறு கிழங்கில் பல வியக்கத்தகு ஆரோக்கிய நன்மைகள் உள்ளது. அவை என்னென்ன? என்பது குறித்து இந்த கட்டுரையின் வாயிலாக விரிவாக அறிந்துக் கொள்ளலாம் வாருங்கள்.
Updated:- 2025-01-26, 20:39 IST

தை மாதம் வந்தாலே தென் தமிழகத்து மக்கள் விரும்பி வாங்கும் காய்கறிகளில் முக்கியமானது சிறு குழங்கு. இதை பார்ப்பதற்கு என்னவோ? அளவில் மிகச்சிறியதாக தெரியக்கூடும். ஆனால் இந்த கிழங்கில் அந்தளவிற்கு ஆரோக்கிய நன்மைகள் கொட்டிக்கிடக்கிறது. கிழங்கு வகைகளில் உருளைக்கிழங்கு அனைவருக்கும் பிடித்தமான ஒன்று. இருந்தப்போதும் அதிகளவில் சாப்பிடும் போது பல உடல் நல பிரச்சனைகளைச் சந்திக்க நேரிடும் என்ற அச்சம் உள்ளது. அதே சமயம் மற்ற கிழங்குகளைப் போன்றில்லாமல், சிறு கிழங்கு சாப்பிடுவதால் பல ஆரோக்கிய நன்மைகளைப் பெற முடியும். அவற்றுள் சில இங்கே

சிறு கிழங்கும் உடல் ஆரோக்கியமும்:

சைனீஸ் பொட்டேட்டா என்று ஆங்கிலத்திலும், கொலசேனியான்னு என்ற பொட்டானிக்கல் பெயர் கொண்ட சிறு கிழங்கு தமிழகத்தில் அனைத்துப் பகுதிகளிலும் கிடைக்காது. தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி போன்ற தென் தமிழகத்தில் தான் இந்த கிழங்கின் விளைச்சல் அதிகமாக இருக்கும். வைட்டமின் சி, ஆன்டி ஆக்ஸிடன்ட்கள், நார்ச்சத்துக்கள், பொட்டாசியம், கால்சியம் போன்ற பல்வேறு ஊட்டச்சத்துக்கள் உடலுக்கு பல வகைகளில் ஆற்றலை வழங்குகிறது.

மேலும் படிக்க: செரிமானம் முதல் கல்லீரல் ஆரோக்கியம் வரை உலர் திராட்சை சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்

செரிமானத்திற்கு தீர்வு:

சிறு கிழங்கில் நார்ச்சத்துக்கள் அதிகம் உள்ளதால் உடலில் ஆரோக்கியமான செரிமானமத்தை ஊக்குவிப்பதோடு மலச்சிக்கலைத் தடுக்கும். எனவே சீசன் சமயங்களில் தொடர்ச்சியாக சிறு கிழங்கைச் சாப்பிடும் போது, குடல் செயல்பாட்டை சீராக்கி கல்லீரல் பிரச்சனைகள் ஏற்படும் அபாயத்தைத் தடுக்க உதவுகிறது.

அதிகரிக்கும் நோய் எதிர்ப்பு சக்தி:

நம்மை எவ்வித உடல் நல பிரச்சனைகளையும் தாக்காமல் இருக்க வேண்டும் என்றால், நோய் எதிர்ப்பு மண்டலம் வலுவாக இருக்கும். வைட்டமின் சி நிறைந்த இந்த வேர்கிழங்கைத் தொடர்ச்சியாக சாப்பிடும் போது, உடலை தீங்கு விளைவிக்கும் நோயக்கிருமிகளிலிருந்துத் தடுக்கவும், வாழ்நாள் முழுவதும் ஆரோக்கியமாக வைத்திருக்கவும் உதவுகிறது.

எடை மேலாண்மை:

சிறு கிழங்கில் கலோரிகள் குவைறாகவும், அதிக நார்ச்சத்துக்கள் உள்ளதால் உடலில் வளர்சிதை மாற்றம் சீராக இயங்க உதவுகிறது. இதோடு தேவையில்லாத கொழுப்புகள் சேர்வதைத் தடுப்பதோடு சீரான எடையை நிர்வகிக்க உதவக்கூடும்.

மேலும் படிக்க: மாப்பிள்ளை சம்பா அரிசியில் இவ்வளவு நல்ல விஷயங்களா ? ஆரோக்கிய நன்மைகளை தெரிஞ்சிட்டு சாப்பிடுங்க

இதய ஆரோக்கியம்:

சிறு கிழங்கில் உள்ள பொட்டாசியம் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தவும், தேவையில்லாத கொழுப்புகள் சேர்வதையும் தடுக்கிறது.

siru kizhanku

சிறு கிழங்கைப் பயன்படுத்தும் முறை:

இதுபோன்ற பல்வேறு ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும் என்பதால் கிடைக்கும் போதெல்லாம் சிறு கிழங்கை வாங்கிப் பயன்படுத்துங்கள். உருளைக்கிழங்கு போன்று மற்ற கிழங்குகளைப் பயன்படுத்துவது போன்று இதை உபயோகிக்கக்கூடாது. முதலில் கிழங்கின் மேல் உள்ள தோலை நன்கு தேய்த்து எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் இட்லி பாத்திரத்தில் வேக வைத்துக் கொள்ளவும். இதையடுத்து கடாயில் எண்ணெய் ஊற்றி வழக்கம் போல் கிழங்கு பொரியல் போன்று செய்து சாப்பிடலாம்.

 

Image source - Google 

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com