சுடு தண்ணீரில் நெய் கலந்து சாப்பிடுவதால் இத்தனை நன்மைகளா?

நெய்யில் சிறிதளவு வெதுவெதுப்பான சுடு தண்ணீரைக் கலந்துக் குடிக்கும் போது சரும பாதுகாப்பு முதல் எடை குறைப்பு, ஹார்மோன் சமநிலை போன்ற பல நன்மைகளைப் பெற முடியும்.
image
image

நம்முடைய முன்னோர்கள் வாழ்நாள் முழுவதும் ஆரோக்கியத்துடன் வாழ்வதற்கு அவர்கள் கெமிக்கல் இல்லாத உணவுப் பொருட்கள் முதல் அன்றாடம் பின்பற்றக்கூடிய வாழ்வியல் முறைகளாக இருந்துள்ளது. வீட்டிற்குத் தேவைப்படக்கூடிய காய்கறிகள் முதல் எண்ணெய் வரை இயற்கையாக அவர்களே விளைவித்துப் பயன்படுத்தினர். குறிப்பாக பொருளாதார தேவைகளை நிவர்த்தி செய்வதற்காக, பலரது வீடுகளில் மாடுகள் வளர்க்கப்பட்டனர். பால் , நெய், வெண்ணெய் என சுத்தமான பொருட்களை உபயோகித்தனர். இவையெல்லாம் முன்னோர்கள் ஆரோக்கியத்துடன் வாழ்வதற்கு உறுதுணையாக இருந்துள்ளது.

தற்போதுள்ள சூழலில் இதையெல்லாம் பின்பற்ற முடியாது. இருந்தப்போதும் உணவு முறைகளில் ஆற்றலை அளிக்கும் நெய்யைப் பயன்படுத்த முயற்சிக்கவும். அந்தளவிற்கு நெய்யில் பல வகையான ஊட்டச்சத்துக்கள் உள்ளது. இதை அப்படியே சாப்பிடுவதை விட சுடு தண்ணீரில் நெய் கலந்து சாப்பிடும் போது ஏராளமான நன்மைகளைப் பெற முடியும். அவற்றில் சில உங்களுக்காக.

சுடு தண்ணீரில் நெய் கலந்து சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்:

200 மில்லி வெதுவெதுப்பான சுடு தண்ணீரில், 1 தேக்கரண்டி நெய் சேர்த்துக் கலந்துக் கொண்டு,வாரத்திற்கு ஒருமுறையாவது இந்த தண்ணீரைக் குடித்து வர வேண்டும்.

மலச்சிக்கல்:

இன்றைக்கு பெரும்பாலான மக்கள் சந்திக்கும் பிரச்சனைகளில் ஒன்றாக உள்ளது மலச்சிக்கல். இவற்றிற்குத் தீர்வு காண வேண்டும் என்றால், காலையில் வெறும் வயிற்றில் சுடு தண்ணீரில் நெய் கலந்து சாப்பிட வேண்டும். நெய்யில் உள்ள பியூட்ரிக் அமிலம் வளர்சிதை மாற்றத்தை சீராக்குவதோடு, செரிமான பிரச்சனையின்றி இருக்கவும் உதவியாக உள்ளது.

எடை இழப்பு:

உடல் பருமன் பிரச்சனை உள்ளவர்கள் சுடுநீரில் நெய் கலந்து சாப்பிடலாம். இதில் உள்ள லினோலிக் அமிலம் உடலில் படிந்துள்ள தேவையில்லாத கொழுப்புகளைக் கரைக்கவும், தொப்பையைக் குறைக்கவும் பேருதவியாக உள்ளது.

மேலும் படிக்க:மன அழுத்த பிரச்சனையா? இந்த 5 டிப்ஸ் உங்களுக்கு உதவலாம்

நோய் எதிர்ப்பு சக்தி:

நெய்யில் உள்ள பியூட்ரிக் அமிலம், குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு, நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கிறது. இதோடு சுடு தண்ணீரையும் கலந்துக் குடிக்கும் போது உடலில் நோய் எதிர்ப்பு மண்டலம் வலுவாகிறது. வைரஸ், பாக்டீரிய போன்ற தொற்று பாதிப்புகள் ஏற்படுதையும் தடுக்கிறது.

ghee

சரும ஆரோக்கியம்:

நெய்யில் உள்ள வைட்டமின் ஈ, ஆக்ஸிஜனேற்றிகள் போன்ற பல்வேறு ஊட்டச்சத்துக்கள் சருமத்தை எப்போதும் ஈரப்பதத்துடன் வைத்திருக்க உதவுகிறது. ஆண்கள் முதல் பெண்கள் வரை சுடுநீரில் கலந்த நெய்யைப் பருகும் போது, முகம் எப்போதும் இயற்கையான பளபளப்புடன் இருக்க உதவக்கூடும்.

மேலும் படிக்க:நீங்கள் மலம் கழிக்கும் போது அடிக்கடி கழிவறையில் ஒட்டிக்கொள்கிறதா? இந்த பிரச்சினையாக இருக்கும்

மூளையின் செயல்திறன்:

நெய்யில் உள்ள அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நினைவாற்றல் மற்றும் அறிவாற்றல் செயல்பாட்டை மேம்படுத்த உதவியாக உள்ளது. இதுபோன்ற பல்வேறு ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளதால், உங்களுடைய அன்றாட வாழ்க்கையில் சுடு நீரில் நெய்யைக் கலந்து சாப்பிட முயற்சி செய்யுங்கள்.

Image source - Freepik

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP