Ash Gourd Juice : தலை முதல் பாதம் வரை! அற்புதமான பலன்களை தரும் வெண்பூசணி ஜூஸ்

உடலுக்கு ஆரோக்கியம் தரும் பல உணவுகளை நாம் விரும்புவதில்லை. அதுபோல தான் இந்த வெண்பூசணி ஜூஸ். இதன் நன்மைகள் கிடைக்கும் வெறும் வயிற்றில் ஒரு டம்ளர் குடிக்கவும்.

 
ash gourd juice

அபரிமிதமான மருத்துவ குணங்கள் கொண்ட வெண்பூசணி பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை அளிக்க உதவுவதால் இதை தங்களது உணவு பழக்கத்தில் சேர்க்க மக்கள் விரும்புகின்றனர். குறைவான கலோரிகள் கொண்ட வெண்பூசணி உடலில் சர்க்கரை கொழுப்பாக மாறுவதை தடுக்கிறது. வெண்பூசணி அளவில் மிகப்பெரியது என்பதால் ஜுஸ் போட்டு குடிக்கலாம். பல ஆண்டுகளாக வெண்பூசணி ஜூஸ் அதன் மருத்துவ குணங்களுக்காக சிறந்த ஆயுர்வேத பானமாக கருதப்பட்டது. வெண்பூசணி ஜூஸ் வயிற்று பிரச்சினை, கல்லீரல் பிரச்சினை மற்றும் தோல் பிரச்சினைகளுக்கு சிகிச்சை அளிக்கும் சிறந்த பானமாகும். காலையில் வெறும் வயிற்றில் வெண்பூசணி ஜூஸ் குடிப்பது நல்லது. பெரும்பாலானோர் இதன் சுவை பிடிக்காத காரணத்தால் ஜூஸாக குடிக்காமல் உணவுப் பழக்கத்தில் சேர்க்கின்றனர்.

energy booster ash gourd juice

வெண்பூசணி ஜூஸின் நன்மைகள்

ஊட்டச்சத்து நிறைந்தது

வெண்பூசணி ஜூஸ் உடலுக்கு தேவையான வைட்டமின்கள் மற்றும் தாதுக்களின் நல்ல மூலமாகும். இதில் கால்சியம், துத்தநாகம், இரும்பு, பாஸ்பரஸ், மெக்னீசியம், மாங்கனீசு மற்றும் நியாசின், தயாமின், வைட்டமின் சி ஆகியவை உள்ளன. இதன் ஊட்டச்சத்து மதிப்பு நோய்களை திறம்பட எதிர்த்து போராடுகிறது.

எடை இழப்புக்கு உகந்தது

வெண்பூசணி ஜூஸில் கொழுப்புச்சத்து துளியும் கிடையாது. இதில் கார்போஹைட்ரேட் குறைவு, அதேநேரம் நார்ச்சத்து அதிகம். இதனால் உடல் எடையை குறைக்க விரும்புவோருக்கு வெண்பூசணி ஜூஸ் மிகவும் ஏற்றது.

எனர்ஜி பூஸ்டர்

வெண்பூசணியில் உள்ள வைட்டமின் பி3 உடலில் எனர்ஜி பூஸ்டராக மாறுகிறது. இரத்த சோகை பிரச்சினை உடையவர்களுக்கு இது சிறந்த பானமாகும். எப்போதும் சோர்வாக உணர்பவர்கள் வெண்பூசணி ஜூஸை குடித்து ஆரோக்கியமாக உணரலாம்.

மேலும் படிங்கதினமும் செள செள சாப்பிடுங்க! ஆறு ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும்

குடல் ஆரோக்கியத்திற்கு நல்லது

வெண்பூசணியில் அதிக நார்ச்சத்து இருப்பதால் இதிலிருந்து தயாரிக்கப்படும் ஜூஸ் குடல் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கிறது. குடலில் நல்ல பாக்டீரியாக்களை வளர்த்து அஜீரணம், மலச்சிக்கல், வாயு போன்ற பிரச்சனைகளை குறைக்கிறது. மேலும் உடலில் இருந்து தீங்கு விளைவிக்கும் நச்சுகளை வெளியேற்றி பெருங்குடலை ஆரோக்கியமாகவும் சுத்தமாகவும் வைத்திருக்க உதவுகிறது. எந்தவொரு உடல்நலப் பிரச்சினையையும் வீட்டிலேயே குணப்படுத்த வெண்பூசணி ஜூஸ் இயற்கையான தேர்வாகும்.

அல்சர் குணமாகும்

வெண்பூசணிக்காய் அல்சரை குணப்படுத்தும் ஒரு இயற்கை மருந்தாகும். இது வயிற்றுப் புண்களைக் குணப்படுத்துகிறது. வெண்பூசணியில் உள்ள நுண்ணுயிர் எதிர்ப்பு பண்புகள் வயிற்றில் உள்ள தீங்கு விளைவிக்கும் கிருமிகள் மற்றும் பாக்டீரியாக்களை அழிக்கிறது.

உடலில் வெப்பத்தை தணிக்கவும் வெண்பூசணி ஜூஸ் உதவுகிறது. உடல் எப்போதெல்லாம் குளர்ச்சியாக இருக்கிறதோ நம் மனம் நன்றாக வேலை செய்யும். வெண்பூசணி ஜூஸ் குடித்து உடல் குளிர்ச்சியை ஊக்குவித்து சிந்தனையை மேம்படுத்துகிறது. வெப்பம் அதிகமாக இருக்கும் போது வெண்பூசணி ஜூஸ் குடித்து உரிய பலன்களை பெறுங்கள்.

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP