herzindagi
kallanai dam district

Kallanai Dam : கரிகால சோழன் கட்டிய கல்லணையில் என்ன சிறப்பு தெரியுமா?

தஞ்சாவூர் மாவட்டத்தில் அமைந்திருக்கும் கல்லணையின் சிறப்பு குறித்து இந்த பதிவில் பார்ப்போம். தமிழர்களின் பெருமையை உலகுக்கு காட்டும் இந்த கல்லணை பல சிறப்பம்சங்களை கொண்டது.   
Editorial
Updated:- 2023-04-13, 13:49 IST

சோழ மன்னர்களில் மாவீரனாக போற்றப்படும் கரிகாலன் சோழனால் கட்டப்பட்டது தான் கல்லணை. இதன் நீளம் 1080 அடி அகலம் 66 அடி மற்றும் உயரம் 18 அடியாகும். இதன் அமைப்பு நெளிந்து வளைந்த கட்டுமானம் ஆகும். வெறும் மணலில் அடித்தளம் அமைத்து அணை கட்டிய தமிழர்களின் தொழில்நுட்பம் இன்று வரை வியத்தகு சாதனையாக அனைவராலும் பார்க்கப்படுகிறது.

பழைமையான அணைகளோடு ஒப்பிடத்தக்க இந்தியாவின் ஒரே அணை காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட இந்த கல்லணையாகும். . தஞ்சாவூர் மாவட்டத்தில் தோகூர் - கோவிலடி கிராமத்தில் அமைந்துள்ளது. கல்லணையின் சிறப்புகள் குறித்து விரிவாக பார்ப்போம்.

இந்த பதிவும் உதவலாம்:சென்னைக்கு அருகில் சுற்றி பார்க்க இத்தனை இடங்கள் இருக்கா!

கல்லணை கட்டப்பட காரணம்

காவிரியின் வெள்ளப்பெருக்கை தடுக்கவும், நீரை பயன்படுத்தி பாசனப் பரப்பை அதிகமாக்கவும் இந்த கல்லணை கட்டப்பட்டது. ஏறக்குறைய 2100 ஆண்டுகள் பழமையான இந்த கல்லணை இன்றும் காவிரி வெள்ளத்தைத் தடுத்து நிறுத்தி வருவது தான் மிகப்பெரிய ஆச்சரியம். கல்லணையின் வயது 2100 ஆண்டுகள் என்பதை கேட்டு ஆய்வாளர்களும் சுற்றுலா பயணிகளும் இன்றும் வியக்கின்றனர்.

kallanai dam history

சிறப்புகள்

  • கல்லும் களிமண்ணும் மட்டுமே சேர்ந்து கட்டப்பட்டது கல்லணை=
  • கல்லணையை கட்டிமுடிக்க 30 ஆண்டுகள் எடுத்தன. அதற்கு காரணம்
  • 12 அடி ஆழத்திற்கு கீழே பாறைகள் ஒன்றன் மீது ஒன்றாக அடுக்கி அணை கட்டப்பட்டது. அந்த பாறைகளின் இணைப்புக்கு களிமண் மட்டுமே பயன்படுத்தப்பட்டது கூடுதல் சிறப்பு.
  • 1839 ஆம் ஆண்டு கல்லணை மீது பாலம் ஒன்று அமைக்கப்பட்டது. அதன் மேல் நின்று பார்த்தால் மொத்த கல்லணையின் அழகும் ஆச்சரியும் கண்ணில் தெரியும். தினந்தோறும் ஏராளமான பொதுமக்கள் பல ஊர்களில் இருந்து வந்து கல்லணையை வியப்புடனும் ஆச்சரியத்துடனும் பார்த்து செல்கின்றனர்.
  • பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஆங்கில ஆட்சியின் போது கல்லணை புதுப்பிக்கப்பட்டது. ஆங்கிலேயர் கால மேற்கட்டுமான பணிகளால் கல்லணை புதுபிக்கப்பட்டது. கேப்டன் கால்ட்வெல், மேஜர்சிம், சர் ஆர்தர் காட்டன் போன்ற வல்லுநர்கள் கரிகாலன் கட்டிய கல்லணையை பார்த்து வியந்து அதை இடிக்காமல் புதுப்பித்தனர்.

இந்த பதிவும் உதவலாம்:குற்றாலத்தில் குளிக்க எத்தனை ஃபால்ஸ் இருக்கு தெரியுமா?

இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com