சென்னை என்றாலே அனைவருக்கு முதலில் நினைவுக்கு வருவது மெரினா பீச், மயிலாப்பூர் கோயில், தலைவர்களின் சமாதி, காந்தி மண்டபம் இப்படி பல இடங்களை சொல்லலாம். இவை அனைத்தும் சென்டர் ஆஃப் சென்னையில் அமைந்திருப்பவை. அதனால் வெளி மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு வருபவர்கள் அதிகப்படியாக இந்த இடங்களுக்கு தான் செல்வார்கள். ஆனால் சென்னைக்கு வெளியிலும் சுற்றி பார்க்க ஏகப்பட்ட இடங்கள் உள்ளன்.
குறிப்பாக கோடை விடுமுறையில் வீட்டில் இருக்கும் குழந்தைகளை அழைத்து கொண்டு வெளியில் செல்ல நினைப்பவர்கள் இந்த இடங்களுக்கு செல்லாம். ஒருநாள் ட்ரிப் செல்ல மிகவும் பொருத்தமான இடம். வாருங்கள் சென்னைக்கு அருகில் இருக்கும் சுற்றுலா இடங்களை பற்றி இப்போது பார்ப்போம்.
இந்த பதிவும் உதவலாம்:சென்னை தியாகராய நகர் எதுக்கெல்லாம் ஃபேமஸ் தெரியுமா?
மெட்ராஸ் முதலை பார்க் என அழைக்கப்படும் இந்த இடம் கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ளது. முதலைகள் ஆமைகள் சராணாலயமாக இது உள்ளது. நன்னீர் முதலைகள், பிளாக் வாட்டர் முதலைகள் என அனைத்து வகையான முதலைகளையும் இங்கு பார்க்கலாம். குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த இடமாக இது இருக்கும்.
கிழக்கு கடற்கரை சாலையில் இருக்கும் மிகவும் முக்கியமான சுற்றுலா தலம். பல்லவர்களின் கட்டிக்கலை சிற்பங்கள் தொடங்கி உணவகங்கள், மண்டபங்கள் என மகாபலிபுரத்தில் சுற்றி பார்க்க ஏகப்பட்ட விஷயங்கள் உள்ளன. வரலாற்று சார்ந்த தகவல்களையும் குழந்தைகள் தெரிந்து கொள்வார்கள்.
கிழக்கு கடற்கரை சாலையில் இருக்கும் இந்த புலி குகை மிகவும் புகழ்பெற்ற சுற்றுலா தலமாக உள்ளது. பல்லவர் கால குகைகள், கல்வெட்டுகளை, சிற்பங்களை இங்கு பார்க்கலாம். சில வரலாற்று குறிப்பாக தகவல்களும் இங்கு கல்வெட்டுகளில் பொதிக்கப்பட்டிருக்கும்.
இந்தியாவில் இருக்கும் மிகப்பெரிய சீஷெல் மீயூசித்தில் இதுவும் ஒன்று. மகாபலிபுரத்தில் பின் புறத்தில் இந்த மியூசியம் உள்ளது. ஆய்வாளர் ராஜா உலக கடற்கரையில் இருந்து சேகரித்த கடல் சிப்பிகள் இங்கு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. அதுமட்டுமில்லை விதவிதமான சங்குகளும் இங்கு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இதுத்தவிர குழந்தைகளை கவர டைனோசரஸ் பார்க்கும் இங்கு உள்ளது.
இந்த பதிவும் உதவலாம்:சம்மரில் இந்தியாவில் சுற்றி பார்க்க இவ்வளவு இடங்கள் இருக்கு!
இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.
Images Credit: freepik
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com