கொடைக்கானல் டூர் போகனுமா? இ- பாஸ் எப்படி எடுக்கணும் னு இங்க தெரிஞ்சுக்கோங்க!

கொடைக்கானல் பகுதிக்கு வர வேண்டும் என்றால் மே 7 ஆம் தேதி முதல் மே 30 ஆம் தேதி வரை இ- பாஸ் பதிவு செய்ய வேண்டும்.

kodaikannal tourism places

கோடை விடுமுறை விட்டாச்சு..குழந்தைகளை வீட்டில் வைத்து சமாளிக்க முடியவில்லை என்று எங்கேயாவது சுற்றுலா செல்ல வேண்டும் என்று திட்டம் வைத்திருப்பவர்கள் பெரும்பாலோனரின் தேர்வு கொடைக்கானல், ஊட்டி போன்ற மலை பிரதேசங்களாகத் தான் இருக்கும். வெயிலுக்கு இதமாக மலைகளுக்கிடையே பயணம் செய்வதும், இயற்கையை ரசிப்பதற்காகவும் கோடை விடுமுறையில் மக்கள் படையெடுத்து செல்வார்கள். வழக்கமான நாட்களை விட பள்ளி விடுமுறையில் கூட்டம் அலைமோதும்.

ஆனால் ஒரு சில மக்கள் கூட்டத்தைக் கருத்தில் கொள்ளாமல் சுற்றுலா செல்வார்கள். இதனால் கொடைக்கானலில் அதிக கூட்டம் நிலவும். இந்த சூழலைக் கட்டுப்படுத்தவும், வருகின்ற சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடனும், எவ்வித இடையூறு இல்லாமல் இயற்கையை ரசிக்க வேண்டும் என்று என்பதற்காக கொரோனா சமயத்தில் நடைமுறைப்படுத்தப்பட்ட இ- பாஸ் நடைமுறை போன்று தற்போது சுற்றுலா செல்வோருக்கும் இ- பாஸ் நடைமுறை அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழக அரசால் வெளியான தகவல்கள் மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தாலும் கூட்டத்தை சமாளிக்க வேறு வழியில்லை என்பதால் இந்த நடைமுறை தமிழகத்தில் நாளை முதல் அதாவது மே 7 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரவுள்ளது. இதோ எப்படி இ- பாஸ் எடுக்க வேண்டும்? என்பது குறித்த முழு விபரங்களை இங்கே விரிவாக அறிந்துக் கொள்ளலாம் வாருங்கள்.

kodaikannal tour plan

கொடைக்கானல் செல்ல இ-பாஸ்:

  • திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு சுற்றுலா வரவிருக்கும் பயணிகளுக்கு மே 7 ஆம் தேதி முதல் இ-பாஸ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. வெளி மாநில மற்றும் வெளி மாவட்ட வாகனங்கள் கொடைக்கானல் பகுதிக்கு வர வேண்டும் என்றால் மே 7 ஆம் தேதி முதல் மே 30 ஆம் தேதி வரை இ- பாஸ் பதிவு செய்ய வேண்டும். இதை எப்படி எடுக்க வேண்டும்? எங்கே செல்ல வேண்டும்? என்ற குழப்பம் இருக்கிறாதா? அப்படின்னா இதை முதல்ல படிச்சுட்டு போங்க..
  • கொடைக்கானலுக்கு செல்பவர்கள் இ- பாஸ் எடுக்க வேண்டும் என்றால்,https://epass.tnega.org/home என்ற இணைய தளப்பக்கத்திற்கு முதலில் செல்ல வேண்டும்.
  • பின்னர் அப்பக்கத்தில் இந்தியாவிற்கு உள்ளே இருந்து வருகிறீர்களா? இல்லை இந்தியாவிற்கு வெளியில் இருந்து அதாவது வேறு நாட்டிலிருந்து வருகிறீர்கள்? என கேட்கப்பட்டிருக்கும். அதில் நமக்கானதைக் கிளிக் செய்ய வேண்டும். பின்னர் உங்களது மொபைல் எண் மற்றும் கேப்சிகாவை உள்ளீடு செய்து இணைய பக்கத்திற்குள் செல்ல வேண்டும்.
e pass kodikannal
  • இதையடுத்து உங்களது பெயர், முகவரி, வருகையின் விபரம், வாகன எண், போன்ற அனைத்து விபரங்களையும் உள்ளீடு செய்ய வேண்டும். இதையடுத்து ஆடடோ ஜெனரேட் மூலம் இ- பாஸ் எளிதில் பெற்றுக் கொள்ள முடியும். இந்த நடைமுறை சுற்றுலா பயணிகளுக்கு மட்டுமல்ல, வணிகம் மற்றும் வியாபார நோக்கத்திற்காக கொடைக்கானல் செல்வோர்களுக்கும் இ- பாஸ் கட்டாயம் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

Image source - google

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP