herzindagi
chennai fish market list

Fish Market : சென்னையில் குறைந்த விலையில் மீன் வாங்க எங்கே செல்ல வேண்டும் தெரியுமா?

சென்னையில் எந்தெந்த மீன் மார்க்கெட்டில் கம்மியான விலைக்கு மீன் வாங்கலாம் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். சென்னையில் இருக்கும் முக்கியமான மீன் மார்க்கெட்டுகள் இவை. 
Editorial
Updated:- 2023-04-28, 19:40 IST

சென்னையில் மீன் மார்க்கெட்டுக்களுக்கு பஞ்சமே கிடையாது. ஒரு எரியாவில் குறைந்தது 2 மீன் மார்க்கெட்டாவது இருக்கும். இதுபோக ஞாயிற்றுக்கிழமையில் வண்டியில் வந்தும் மீன்களை விற்பார்கள்.கொரோனாவில் உருவான ஒருநாள் வியாபாரிகள் ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டுமே தெருவில் வண்டியிலே வைத்து மீன்களை விற்பார்கள்.

இப்படி மீன் வாங்க பல வழிகள் இருந்தாலும், சென்னை மக்கள் மீன்களை வாங்க எப்போதுமே ஒரு சில மீன்கள் மார்க்கெட்டுகளுக்கு தான் அதிகம் படை எடுப்பார்கள். அதற்கு காரணம், விலை மற்றும் மீனின் தரம். அந்த வகையில் சென்னையில் இருக்கும் முக்கியமான மீன் மார்க்கெட்டுகள் குறித்து இந்த பதிவில் பார்ப்போம்.

இந்த பதிவும் உதவலாம்:சென்னை தியாகராய நகர் எதுக்கெல்லாம் ஃபேமஸ் தெரியுமா?

காசிமேடு

சென்னையின் மிகப் பெரிய மீன் மார்க்கெட்டாக பார்க்கப்படுகிறது. மொத்த வியாபாரிகள் தொடங்கி தின வியாபாரிகள், ஹோட்டல் தேவைக்கு, சமையலுக்கு என அனைவரும் திரண்டு வந்து மீன் வாங்குவார்கள். விலையும் மிக மிக குறைவு. வஞ்சரம் போன்ற விலை அதிகமான மீன்களையும் இங்கு குறைவான விலைக்கு வாங்கி செல்லலாம். அதுமட்டுமில்லை அதிகம் பார்த்திடாத, பெரிய பெரிய மீன்க்ளையும் இங்கு பேரம் பேசி வாங்கலாம். ஞாயிற்றுகிழமைகளில் காலை 6மணி முதலே கூட்டம் குவிய தொடங்கும்.

saidapet fish market

வானகரம் மீன் மார்க்கெட்

சென்னையில் இருக்கும் மிகப் பெரிய மீன் மார்க்கெட்டில் இதுவும் ஒன்று. அரசாங்கத்தால் கட்டப்பட்ட இந்த நவீன மீன் மாட்க்கெட்டில் அனைத்து விதமான மீன்களையும் பார்க்கலாம். குறைந்த விலைக்கும் வாங்கலாம்.

சைதாப்பேட்டை

சைதாப்பேட்டை மீன் மார்க்கெட் சென்னையின் முக்கியமான அடையாளமாகவே உள்ளது. இந்த மீன் மார்க்கெட்டில் ஞாயிற்றுக்கிழமைகளில் உள்ளே செல்லவே இடம் கிடைக்காது. அந்த அளவுக்கு கூட்டம் குவியும். நல்ல மீன்களை கமியான விலைக்கு வாங்கி செல்லலாம்.

kasimedu fish market

காந்தி மீன் மார்க்கெட்

பல்லாவரத்தில் இருக்கும் காந்தி மீன் மார்க்கெட்டில் கடல் மீன் தொடங்கி ஆற்று மீன், ஏரி மீன், இறாஅல், சுறா என அனைத்து விதமான மீன்களும் கம்மி விலைக்கு கிடைக்கும். இங்கு வார இறுதி நாட்களில் கூட்டம் அலைமோதும்.

இந்த பதிவும் உதவலாம்:தமிழ்நாட்டில் இந்த இடங்களில் மட்டும் தான் துணிகளின் விலை மிக குறைவு

இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.

Images Credit: freepik

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com