உலகெங்கிலும் கோலாகலமாக கொண்டாடப்படும் ஒரு பண்டிகை கிறிஸ்துமஸ். இந்த கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் என்று கூறினால் பலருக்கும் வீட்டின் வாசலில் ஸ்டார் கட்டுவது வீடுகளில் கிறிஸ்துமஸ் ட்ரீ வைத்து அலங்காரம் செய்வது பிளம் கேக் சுவையான உணவு வகைகள் வயின் போன்றவை முதலில் நினைவில் வரும். ஆனால் இந்த கொண்டாட்டங்களுக்கு கூடுதல் சிறப்பு சேர்ப்பது கேரல்ஸ் என்று கூறப்படும் கிறிஸ்துமஸ் பாடல்கள். ஷாப்பிங் மால்கள், தேவாலயங்கள் மற்றும் வீடுகளில் கூட தற்போது கிறிஸ்துமஸ் கேரல் பாடல்கள் பாடுவது வழக்கமாகிவிட்டது. அந்த வரிசையில் இந்த கிறிஸ்துமஸ் கேரல்ஸ் தோன்றிய வரலாறு குறித்து இந்த கட்டுரையில் பார்க்கலாம்.
கிறிஸ்துமஸ் கேரல்ஸ் என்றால் என்ன?
13 ஆம் நூற்றாண்டில் இந்த கிறிஸ்துமஸ் கேரல்ஸ் முதன் முதலில் தோன்றியது. இத்தாலி நாட்டில் பிறந்த இந்த கேரல்ஸ் மெதுவாக ஜெர்மனி பிரான்ஸ் இங்கிலாந்து போன்ற நாடுகளுக்கும் பரவியது. இதனைத் தொடர்ந்து 1426 ஆம் ஆண்டு கிறிஸ்துவ மதத் தலைவர் ஜான் ஆடிலே என்பவர் கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு முதன் முதலாக 25 கேரல் பாடல்களை வெளியிட்டார். இந்த பாடல்களை வீடு வீடாக சென்று கேரல்ஸ் குழுவினர் பாடினர்.
இதனை தொடர்ந்து இங்கிலாந்து போன்ற நாடுகளில் 1660 ஆம் ஆண்டு பொது இடங்களில் கூட கேரல்கள் பாட அனுமதி வழங்கப்பட்டது. இதற்கு பிறகு தான் கிறிஸ்துமஸ் பண்டிகையில் கேரல் பாடல்கள் ஒரு முக்கியமான அம்சமாக மாறியது. மேலும் பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு இன்றும் இந்தியாவில் இந்த கிறிஸ்துமஸ் கேரல்ஸ் நடைபெற்று வருகிறது. குறிப்பாக தமிழ்நாட்டிலும் கேரளாவிலும் இந்த கிறிஸ்மஸ் கேரல்ஸ் ஒரு தவிர்க்க முடியாத நிகழ்ச்சியாக மாறிவிட்டது.
பொதுவாகவே கிறிஸ்மஸ் கேரள்ஸ் பாடும் குழுவினர் தங்கள் ஊர்களில் உள்ள கிறிஸ்தவ வீடுகளுக்கு சென்று கேரல்ஸ் பாடல்களை பாடுவார்கள். இதற்குப் பிறகு அந்த வீடுகளில் பிரார்த்தனை செய்த பிறகு கிறிஸ்துமஸ் பண்டிகை முன்னிட்டு கேக் அல்லது ஸ்னாக்ஸ் வழங்கப்படும். இந்த கிறிஸ்துமஸ் கேரல்ஸ் டிசம்பர் மாதம் துவக்கத்தில் இருந்தே ஆரம்பமாகிவிடும். இது மட்டுமல்லாமல் இந்த கிறிஸ்மஸ் கேரல்ஸ் பாடும் குழுவினர் மத்தியில் ஒருவர் சாண்டா தாத்தா போல வேடம் அணிந்து நடனம் ஆடிக் கொண்டு குழந்தைகளுக்கு சாக்லேட் கொடுத்து செல்வார்.
முதல் கேரல் பாடல்:
இன்று பல புதிய கிறிஸ்துமஸ் கேரல்ஸ் பாடல்கள் வந்திருந்தாலும், அனைவரும் மறக்க முடியாத முதன் முதலில் பாடப்பட்ட கிறிஸ்மஸ் கேரல் பாடல் ஒன்று உள்ளது. 129 இல் ரோமானிய பிஷப் ஒருவர் "ஏஞ்சல்ஸ் ஹிம்" என்ற பாடலை கிறிஸ்துமஸ் பிரார்த்தனையின் போது ரோம் நாட்டில் பாடினார். இதுவே முதன் முதலில் தோன்றிய கிறிஸ்துமஸ் கேரல் பாடல் ஆகும். இதற்கு பிறகு ஐரோப்பிய நாட்டில் உள்ள அனைத்து இசை குழுவினர்களும் இதே பாடலை லாட்டின் மொழியில் எழுதி பாட துவங்கினர். அந்த வரிசையில் இன்றும் நம் வீடுகளில் மற்றும் தேவாலயங்களில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு கேரல்ஸ் பாடுவதற்கான வரலாறு இது தான்.
Image source: freepik
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation