லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் லியோ படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகமாக இருக்கிறது. இந்த படத்தில் திரிஷா, பிரியா ஆனந்த் , அர்ஜுன் , சஞ்சய் தத், கௌதம் வாசுதேவ் மேனன், மன்சூர் அலிகான், மிஸ்கின் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருக்கின்றனர். இந்த படம் லோகேஷ் கனகராஜின் ‘LCU’வில் வருமா அல்லது தனிப்பட்டகதையாக எடுக்கப்பட்டுள்ளதா என ரசிகர்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றனர்.
அர்ஜுன் மற்றும் சஞ்சய் தத் ஆகியோரின் பிறந்தநாளுக்கு கிளிம்ப்ஸ் வீடியோவை பதிவிட்டு படக்குழு வாழ்த்து தெரிவித்தது. படத்தில் ஆண்டனி தாஸ் என்ற கதாபாத்திரத்தில் சஞ்சய் தத் நடித்திருக்கிறார். அதே போல ஹரோல் தாஸ் என்ற கதாபாத்திரத்தில் அர்ஜுன் நடித்துள்ளார் என்பது கிளிம்ப்ஸ் வீடியோ மூலம் தெரியவந்தது. இருவரும் படத்தின் முக்கிய வில்லனாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
அனிருத் இசையில் உருவாகியுள்ள இந்த படம் அக்டோபர் 19 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.படத்தின் இசை வெளியீட்டு விழாவை பிரம்மாண்டமாக நடத்த படக்குழு திட்டமிட்டு இருந்தனர். முதலில் மலேசியாவில் இசை வெளியீட்டு விழாவை நடத்த இருந்தனர். ஆனால் அங்கு சில காரணங்களால் விழாவை நடத்த முடியாமல் போனது. இதனையடுத்து நேரு உள்விளையாட்டு அரங்கில் விழாவை நடத்த அனைத்து ஏற்பாடுகளும் தீவிரமாக நடைப்பெற்று வந்தன.
இந்த பதிவும் உதவலாம் :வாடகை வீட்டில் வசிக்கும் நடிகை ஆலியா பட்.. ஒரு மாசத்திற்கு இத்தனை லட்சமா!
இந்நிலையில் திடீரென படத்தின் இசை வெளியீட்டு விழா ரத்து செய்யப்படுவதாக படக்குழு அறிவித்திருக்கிறது. இதற்கு காரணத்தையும் படக்குழு விளக்கியிருக்கிறது. அதிக அளவில் டிக்கெட் பிரஷர் வருகிறது எனவும், பாதுகாப்பு காரணங்களை முன்னிட்டு லியோ இசை வெளியீட்டு விழா நடத்தவில்லை எனவும் கூறியுள்ளனர். அத்துடன் வேறு எந்த அரசியல் அழுத்தமும் இல்லை எனவும் குறிப்பிட்டுள்ளனர். இதை கேட்ட விஜய் ரசிகர்கள் பெரும் ஏமாற்றத்தில் உள்ளனர்.
ஒவ்வொரு இசை வெளியீட்டு விழாவிலும் விஜய்யின் உரையாடலை கேட்க ரசிகர்கள் காத்திருப்பார்கள். அவர் சொல்லும் அந்த குட்டி கதை தான் ரசிகர்களின் ஃபேவரெட். இந்த முறை விஜய்யின் குட்டி கதையை கேட்க முடியாத வருத்தத்தில் ரசிகர்கள் இருக்கின்றனர்.
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation