herzindagi
image

பெண்களே இனி வருத்தம் வேண்டாம்; கூந்தல் வேகமாக வளர இந்த ஹேர் பேக் போதும்!

பெண்களின் கூந்தல் வளர்ச்சிக்கு எப்போதும் ஊட்டச்சத்துள்ள உணவுகள் மட்டுமின்றி, வீட்டில் உள்ள அன்றாட உணவுப்பொருட்களைப் பயன்படுத்தித் தயாரிக்கும் ஹேர் பேக் பயன்படுத்தலாம். அதன் விபரம் இங்கே
Updated:- 2025-09-08, 16:14 IST

பெண்களின் அழகை வர்ணிக்கும் போதெல்லாம் காதலர்களுக்கு அவர்களின் கூந்தல் தான் பிரதான உதவியாக இருக்கும். ஆம் கார்கூந்தல் பெண்ணழகு, கருப்பு கூந்தல் அழகி, அருவி போல் பாயும் கூந்தலைக் கொண்டவள் என எண்ணற்ற வார்த்தைகளையிட்டு கவிதை எழுதுவார்கள். அந்தளவிற்குப் பெண்களின் கூந்தலுக்கு அத்துணை அழகு உண்டு. ஆனால் இவற்றை முறையாக பேணிக்காப்பதைப் பெண்கள் மறந்து விடுகிறார்கள். அவசர கதியில் தலைவாருதல், எண்ணெய் தேய்க்காமல் இருப்பது போன்ற பல காரணங்களால் தலைமுடியின் வளர்ச்சி குறைந்து விடுகிறது. இவற்றைத் தடுக்க வீட்டிலேயே சில ஹேர் பேக்குகளைத் தயார் செய்து உபயோகிக்கலாம். முடி கொட்டுதல் பிரச்சனைக்கு மட்டுமின்றி தலைமுடி வேகமாக வளர்வதற்கும் பயன்படுத்தும். இதோ அந்த ஹேர் பேக் உங்களுக்காக.

மேலும் படிக்க: முகத்தைப் பொலிவாக்கும் அரிசி தண்ணீர்; ஒருமுறையாவது இப்படி பயன்படுத்திப் பாருங்கள்!

கூந்தல் வளர்ச்சியை அதிகரிக்கும் ஹேர் பேக்:

  • செம்பருத்தி பூ - 2
  • செம்பருத்தி இலை - 1
  • வெந்தயம் - 3 டீஸ்பூன்
  • அரிசி - 2 டீஸ்பூன்
  • பாசிப்பருப்பு - 4 டீஸ்பூன்


ஹேர் பேக் செய்யும் முறை:

  • கூந்தலை ஆரோக்கியத்துடனும், வேகமாக வளர செய்யவும் செய்யக்கூடிய ஹேர் பேக் செய்வதற்கு முதலில் மேற்கூறியுள்ள அனைத்துப் பொருள்களையும் முதலில் எடுத்து வைத்துக் கொள்ளவும்.
  • இவற்றையெல்லாம் ஒரு பாத்திரத்தில் எடுத்து, அனைத்துப் பொருட்களும் மூழ்கும் அளவிற்கு தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க வைக்கவும்.
  • தண்ணீர் நன்கு வற்றியவுடன் இதை ஆற வைத்துக் கொள்ளவும். பின்னதாக மிக்ஸி ஜாரில் நைஸாக அரைத்துக் கொள்ளவும்.

மேலும் படிக்க: கண்ணாடி போன்ற பளபளப்பான சருமம் வேண்டுமா? அரிசி தண்ணீரை இனி இப்படி யூஸ் பண்ணுங்க

  • இந்த ஹேர் பேக்கை உச்சந்தலையிலிருந்து தலைமுடியின் நுனி வரை அப்ளை செய்து அரை மணி நேரத்திற்குப் பிறகு அலசினால் போதும். இதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் தலைமுடி வேகமாக வளர்வதற்கு உதவியாக இருக்கும்.

hair pack uses

 

தலைமுடி உதிர்வதற்கானக் காரணங்கள்:

  • ஆண்களாக இருந்தாலும், பெண்களாக இருந்தாலும் தலைமுடி வளர்ச்சிக்கு புரதம், தாமிரம், வைட்டமின் பி, வைட்டமின் சி, துத்தநாகம், அயோடின் போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் அவசியம் தேவை. இவற்றில் ஏதோ ஒன்று குறைந்துவிட்டால் கூட முடி வளர்ச்சிப் பாதிக்கப்பட்டு முடி உதிர்வதையும் சந்திக்க நேரிடும்.
  • இதோடு மட்டுமின்றி மன அழுத்தம் அதிகமாகுதல், ஹார்மோன் பிரச்சனை போன்றவற்றால் தலைமுடி பாதிப்பைச் சந்திக்க நேரிடும்.

மேலும் படிக்க: முக பொலிவிற்கு எப்படியெல்லாம் பால் உதவியாக உள்ளது தெரியுமா?

  • பெரும்பாலான பெண்கள் தலைக்குக் குளித்துவிட்டு ஈரத்துடன் தலைவாருவதாலும், விலைமலிவான ஷாம்பூகளைப் பயன்படுத்துவதன் மூலம் தலைமுடி உதிர்கிறது.
  • அழகு நிலையங்களுக்குச் சென்று அடிக்கடி ஹேர் ட்ரை செய்வது, தலைமுடியை ப்ளீச் செய்வது, கலர் அடித்துக் கொள்வது போன்ற காரணங்களும் தலைமுடி உதிர்வதற்குக் காரணமாக அமைகிறது.
  • ஊட்டச்சத்து குறைந்த உணவுகளை உட்கொள்வதாலும் தலைமுடி உதிர்வதை அனைவரும் சந்திக்க நேரிடும்.

Image credit - Freepik

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com