herzindagi
image

ஆரோக்கியமான முறையில் கூந்தல் வளர்ச்சியை அதிகரிக்க நீங்கள் அருந்த வேண்டிய 5 பானங்கள்

ஆரோக்கியமான முறையில் கூந்தல் வளர்ச்சியை அதிகரிக்க விரும்பினால், உங்கள் வீட்டிலேயே தயாரித்து அருந்தக் கூடிய 5 சுவையான பானங்கள் என்னவென்று இந்தப் பதிவில் பார்க்கலாம். இதன் மூலம் உங்கள் முடி உதிர்வு குறைந்து, அடர்த்தியான கூந்தல் வளர்ச்சி அதிகரிக்கும்.
Editorial
Updated:- 2025-11-21, 14:00 IST

முடி உதிர்வு, அடர்த்தி குறைதல் ஆகியவை பலரை மனதளவில் பாதிக்கக் கூடிய பிரச்சனைகள் ஆகும். வெளிப்புறமாக எவ்வளவு விலை உயர்ந்த கூந்தல் பராமரிப்பு பொருட்களை பயன்படுத்தினாலும், கூந்தலின் ஆரோக்கியம் என்பது நமது உள்ளிருந்து பெறும் ஊட்டச்சத்தையே சார்ந்துள்ளது. எளிமையாக கூற வேண்டுமானால், உங்கள் கூந்தலின் ஆரோக்கியம் உங்கள் உணவுமுறையிலேயே தொடங்குகிறது. இதில் பால் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது

பால் என்பது சத்தான பானம் மட்டுமல்ல; அது புரதங்கள், பயோட்டின், கால்சியம் மற்றும் அத்தியாவசிய வைட்டமின்கள் நிரம்பிய ஒரு இயற்கை அமிர்தம். இது கூந்தல் வேர்களை வலுப்படுத்தவும், முடி உதிர்வதை தடுக்கவும், உச்சந்தலையை உள்ளிருந்து ஊட்டமளிக்கவும் உதவுகிறது. ஆனால், இந்த பாலை சில பொருட்களுடன் சேர்த்து பயன்படுத்தும் போது, இது இயற்கையாகவே கூந்தல் வளர்ச்சியை வேகப்படுத்தும் ஒரு சக்திவாய்ந்த பானமாக மாறுகிறது.

 

அதன்படி, உங்கள் சமையலறையில் எளிதில் கிடைக்கும் சில பாரம்பரிய பொருட்களை பயன்படுத்தி, கூந்தல் வளர்ச்சியை ஊக்குவிக்கும் அதிசய பானங்களை எவ்வாறு தயாரிப்பது என்று காணலாம்.

 

மஞ்சள் மற்றும் பால்:

 

மஞ்சள் என்பது பளபளப்பான சருமத்திற்கு மட்டும் அல்ல; இது உங்கள் கூந்தலுக்கும் உதவும். மஞ்சளில் உள்ள குர்குமின் (Curcumin) என்ற கலவை, அழற்சி எதிர்ப்பு (Anti-inflammatory) மற்றும் அன்டிஆக்சிடென்ட் பண்புகளை கொண்டுள்ளது. இது இரத்தத்தை சுத்திகரித்து, உச்சந்தலையில் வீக்கத்தை குறைத்து, ஆரோக்கியமான முடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. ஆயுர்வேதத்தில், மஞ்சள் பால் ஹார்மோன்களை சமநிலைப்படுத்தும் ஒரு பானமாக கருதப்படுகிறது. இது வலுவான கூந்தல் வளர்ச்சிக்கு அவசியம்.

ஒரு கிளாஸ் பாலை சூடாக்கி, அதில் அரை டீஸ்பூன் மஞ்சள் தூள் மற்றும் ஒரு சிட்டிகை மிளகுதூள் சேர்க்கவும். இதை இரவு உறங்கும் முன் குடிக்கவும். காலப்போக்கில், உங்கள் உச்சந்தலை ஆரோக்கியமடைவதையும், பொடுகு குறைவதையும், உங்கள் கூந்தல் அடர்த்தியாகவும், ஊட்டச்சத்து நிறைந்ததாகவும் தோன்றுவதை நீங்கள் காணலாம்.

 

பாதாம் மற்றும் பால்:

 

பாதாமில் பயோட்டின், வைட்டமின் ஈ மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் நிறைந்துள்ளன. இது கூந்தலின் நெகிழ்வுத்தன்மைக்கும், பளபளப்புக்கும் உதவுகிறது. பாதாம் பால், உங்கள் கூந்தலை உள்ளிருந்து வலுப்படுத்தி, முடி உதிர்வதை தடுக்கும் ஒரு சத்தான பானமாகும். 4 முதல் 5 பாதாம் மற்றும் 2 பேரீச்சம்பழங்களை இரவு முழுவதும் ஊறவைக்கவும். காலையில் பாதாமின் தோலை உரித்து, அனைத்தையும் ஒரு கிளாஸ் சூடான பாலுடன் சேர்த்து அரைத்து குடிக்கலாம்.

Almond milk

 

இந்த பானம் உங்கள் கூந்தல் ஆரோக்கியத்தை அதிகரிப்பது மட்டுமல்லாமல், உங்கள் உடலுக்கு ஆற்றலை அளித்து சரும பொலிவையும் மேம்படுத்துகிறது. இது போன்ற சத்தான பானங்களை தொடர்ந்து எடுத்துக் கொண்டால், முடி உதிர்வு பிரச்சனையை கட்டுப்படுத்த முடியும்.

மேலும் படிக்க: முடி உதிர்வை தடுக்க வேண்டுமா? அடர்த்தியான கூந்தலுக்கு இந்த 5 எண்ணெய்களை பயன்படுத்தவும்

 

குங்குமப்பூ மற்றும் பால்:

 

குங்குமப்பூ என்பது பண்டிகை இனிப்புகளுக்கு மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டியது அல்ல. இதில் அன்டிஆக்சிடென்டிகள், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிரம்பியுள்ளன. இது, உச்சந்தலைக்கான இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது, முடி வேர்களை வலுப்படுத்துகிறது மற்றும் முடி உதிர்வை கட்டுப்படுத்த உதவுகிறது.

 

ஒரு கிளாஸ் பாலை சூடாக்கி, அதில் 3 முதல் 4 குங்குமப்பூ இழைகளை சேர்க்கவும். பால் தங்க நிறமாக மாறும் வரை 5 முதல் 10 நிமிடங்கள் அதை அப்படியே வைக்கவும். இனிப்புக்காக ஒரு டீஸ்பூன் தேன் சேர்க்கலாம். இதை தினமும் இரவு படுக்கைக்கு முன் குடித்து வந்தால், வலுவான கூந்தல், பளபளப்பான சருமம் ஆகியவற்றை பெறலாம்.

 

பேரீச்சம்பழம் மற்றும் பால்:

 

சுவையாக இருக்க வேண்டும், அதே நேரத்தில் கூந்தல் வளர்ச்சிக்கும் உதவ வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு பேரீச்சம்பழம் ஒரு சிறந்த தேர்வாகும். இதில் இரும்புச்சத்து, ஃபோலேட், மெக்னீசியம் மற்றும் வைட்டமின் பி நிறைந்துள்ளது. இவை அனைத்தும் வலுவான கூந்தல் வேர்களுக்கும் ஆரோக்கியமான வளர்ச்சிக்கும் மிக முக்கியமானவை. பேரீச்சம்பழம், இரத்த ஓட்டத்தை மேம்படுத்தி, கூந்தல் வேர்களுக்கு தேவையான ஊட்டச்சத்துகள் கிடைப்பதை உறுதி செய்கிறது.

Dates and milk

 

2 முதல் 3 விதைகள் நீக்கப்பட்ட பேரீச்சம்பழங்களை எடுத்து, அதை சிறிது சூடான பாலுடன் கலந்து அரைக்கவும். இதை மாலை சிற்றுண்டியாகவோ அல்லது இரவு உறங்கும் முன் குடிக்கலாம். இது உடலுக்கு நிலையான ஆற்றலை வழங்குவதுடன், உள்ளிருந்து கூந்தலுக்கு ஆழமான ஊட்டமளிக்கிறது.

மேலும் படிக்க: உங்கள் சருமத்தின் பொலிவை தக்க வைப்பதற்கு செம்பருத்தி பூ எவ்வாறு பயன்படுகிறது என்று தெரியுமா?

 

வெந்தயம் மற்றும் பால்:

 

வெந்தயம் என்பது பாரமரியமாக பயன்படுத்தப்பட்டு வரும் ஒரு பொருளாகும். வெந்தயத்தில் அதிகளவு புரதம், இரும்பு மற்றும் நிக்கோடினிக் அமிலம் உள்ளன. இவை அனைத்தும் முடி வேர்களை வலுப்படுத்தி, முடி உதிர்ந்து போவதை தடுக்கின்றன. மேலும், இதில் காணப்படும் லெசித்தின் (Lecithin), உச்சந்தலைக்கு ஊட்டமளித்து, முடி உதிர்வுக்கு முக்கிய காரணமான பொடுகை குறைக்கிறது.

 

ஒரு டேபிள்ஸ்பூன் வெந்தயத்தை இரவு முழுவதும் ஊறவைக்கவும். காலையில் அதை அரைத்து, ஒரு கிளாஸ் சூடான பாலுடன் கலந்து குடிக்கலாம். இல்லையெனில், வெந்தயத்தை வறுத்து பொடியாக்கி, அதை தினமும் ஒரு ஸ்பூன் அளவில் எடுத்து பாலில் சேர்த்துக் குடிக்கலாம். இது மிகவும் சுவையாக இல்லாவிட்டாலும், உங்கள் கூந்தல் வளர்ச்சிக்கு பலன் அளிக்கும்.

 

இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.

 

Image Credit: Freepik

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com