
பெண்களுக்கு பருக்கள் இல்லாத தெளிவான சருமத்தைப் பெற வேண்டும் என்ற ஆசை நிச்சயம் இருக்கும். இதற்காக அழகு நிலையங்களுக்கு செல்வது முதல் ரசாயனம் கலந்த அழகு சாதனப் பொருள்களைப் பயன்படுத்துவதைப் பார்த்திருப்போம். இதற்காக பல மணி நேரம் மெனக்கெட்டாலும் நாம் நினைத்ததுப் போன்று முகத்தில் பளபளப்பைப் பெற முடியாது. இனி இந்த கவலை வேண்டாம். ஞ்சள் மற்றும் தேங்காய் கலந்து தயாரிக்கப்படும் மஞ்சள் பேஸ் மாஸ்க் எப்படி செய்வது? இதன் பயன்கள் என்னென்ன? என்பது குறித்து இங்கே அறிந்துக் கொள்வோம்.

மஞ்சளில் உள்ள குர்குமின் சக்திவாய்ந்த அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆக்ஸிஜனேற்ற பண்புகளாக செயல்படுகிறது. இதை நீங்கள் முகத்தில் அப்ளை செய்யும் போது, சருமத்தை கருமையாக்கும் அல்லது சேதப்படுத்தும் ப்ரீ ரேடிக்கல்களைக் குறைக்கிறது. மேலும் மஞ்சளில் உள்ள ஆன்டி- ஆக்ஸிடன்ட்கள் சரும செல்கள் சேதமடையாமல் பாதுகாக்கிறது. இதே போன்று தேங்காய் எண்ணெயில் உள்ள ஈரப்பதமூட்டும் பண்புகள் சருமம் வறண்டு விடாமல் பாதுகாக்கிறது. இவை இரண்டையும் பயன்படுத்தி செய்யக்கூடிய பேஸ் மாஸ்க்கை நீங்கள் பயன்படுத்தும் போது, சருமத்தை நீரேற்றத்துடன் வைத்திருக்கவும், முகத்தில் ஏற்படுத்தில் ஏற்படக்கூடிய சரும பிரச்சனைகளைத் தடுக்கிறது.
மேலும் படிக்க: முகம் ஜொலிப்பிற்கு உதவும் வைட்டமின் சி பழங்கள் இவை தான்!
ஒரு கிண்ணத்தில் மஞ்சள் மற்றும் தேங்காய் எண்ணெய்யை ஊற்றி நன்றாக கலந்துக் கொள்ளவும். பேஸ்ட் பதத்திற்கு வந்ததால் போ.தும் முகத்தை பளபளப்பாக உதவும் மஞ்சள் மற்றும் தேங்காய் எண்ணெய் பேஸ் மாஸ்க் ரெடி
மேலும் படிக்க: முடி வளர்ச்சிக்கு வெங்காய எண்ணெய் சரியான தேர்வாக அமையுமாம்!
இந்த பேஸ் மாஸ்க்கை வாரத்திற்கு ஒன்று அல்லது இரண்டு முறைப் பயன்படுத்த வேண்டும். இவ்வாறு பயன்படுத்தும் போது காலப்போக்கில் பிரகாசமான மற்றும் பளபளப்பான சருமத்தை நீங்கள் பெறுவதற்கு உதவியாக இருக்கும். அப்புறம் என்ன? இனி அதிக செலவு செய்து உங்களது முகத்தை அழகாக்குவதை நிறுத்திவிட்டு வீட்டில் கிடைக்கக்கூடிய பொருள்களைப் பயன்படுத்தி முகத்தைப் பொலிவாக்குவதற்கு முயற்சி செய்யவும்.
Image Source- Google
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com