தலைமுடி உதிர்வா? பொடுகுத் தொல்லையா? என்ன செய்யலாம்? எப்படி சரி செய்யலாம்? என்ற குழப்பத்தில் உள்ள பெண்களில் நீங்களும் ஒருவராக இருந்தால், இதோ உங்களுக்கான சில டிப்ஸ்களை இங்கே பகிர்கிறோம்.முடி வளர்ச்சியை அதிகரிக்க வேண்டும் என்பதற்காக சந்தைகளில் விற்பனை செய்யப்படும் இரசாயனப் பொருள்களைப் பயன்படுத்துவதால் முடி கொட்டுதல் பிரச்சனையைப் பெண்களில் அதிகளவில் சந்திக்கின்றனர். இதிலிருந்து தப்பிக்க வேண்டும் என்றால், வெங்காயம் உங்களுக்கு சிறந்த தேர்வாக அமையும். ஆம் வெங்காயத்தில் உள்ள பொட்டாசியம், வைட்டமின் சி, பி9, பி6, ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் போன்ற பல்வேறு ஊட்டச்சத்துக்கள் உள்ளதால் முடியின் வளர்ச்சிக்குப் பேருதவியாக உள்ளது. இதோ தலைமுடியைப் பாதுகாக்கும் வெங்காய எண்ணெய்? எப்படி தயாரிப்பது மற்றும் எப்படி உபயோகிப்பது? என இங்கே அறிந்துக் கொள்ளுங்கள்.
முடி வளர்ச்சிக்கு உதவும் வெங்காய எண்ணெய்:
மேலும் படிக்க:உடல் எடையை குறைக்க தினமும் காலை வெறும் வயிற்றில் அத்திப்பழ நீர் குடியுங்கள்!
வெங்காயத்தை முதலில் சிறிது சிறிதாக வெட்டி வைத்துக் கொள்ளவும். பின்னர் ஒரு மிக்ஸி ஜாரில் வெங்காயம் மற்றும் தண்ணீரை ஊற்றி நைஸாக அரைத்துக் கொள்ளவும். இதையடுத்து ஒரு வாணலில் அரைத்த வெங்காயம் மற்றும் சிறிதளவு தேங்காய் எண்ணெய் சேர்த்து நன்றாக கொதிக்க விடவும். பின்னர் இதை ஒரு துணியில் வடிகட்டி சிறிய பவுலில் மாற்றினால் போதும். தலைமுடி வளர்ச்சிக்கு உதவக்கூடிய வெங்காய எண்ணெய் ரெடி. இதை 6 மாதங்கள் வரை பதப்படுத்தி உபயோகிக்கலாம்.
வெங்காய சாற்றில் உள்ள ஊட்டச்சத்துக்கள்:
- வெங்காயத்தில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளதால் தலைமுடி உதிர்தலைத் தடுக்கிறது. மற்றும் வெங்காய சாறில் உள்ள ஊட்டச்சத்துக்கள் உச்சந்தலையில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்த உதவுகிறது.
- வெங்காயத்தில் உள்ள வைட்டமின்கள் மற்றும் பாக்டீரிய எதிர்ப்பு பண்புகள் உள்ளதால், விரைவில் முடி நரைமுடி பாதிப்பைத் தடுக்கிறது.
- வெங்காய சாறுகள் கொண்ட ஷாம்புகள் மற்றும் எண்ணெய்களைப் பயன்படுத்தும் போது இதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் தலைமுடி வேர் வரை செல்கிறது. மற்றும் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தி முடி வளர்ச்சிக்கு பேருதவியாக உள்ளது.
பயன்படுத்தும் முறை:
வெங்காய எண்ணெய்யை லேசாக கையில் ஊற்றி தலையில் மசாஜ் செய்யவும். தினமும் அல்லது வாரத்திற்கு இருமுறையாவது உச்சந்தலையில் மசாஜ் செய்யும் போது இதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் தலைமுடியைப் பாதுகாக்கிறது. ஒருவேளை உங்களால் வெங்காய எண்ணெய் தயாரிக்க முடியவில்லை என்றால், வெங்காய சாறை மட்டும் எடுத்து தலைமுடியில் அப்ளை செய்து 15 நிமிடங்களுக்குப் பிறகு தலை அலசினால் போதும். தலை முடி வலுவாகும்.
மேலும் படிக்க:சுட்டெரிக்கும் கோடை வெயில்; சருமத்தைப் பாதுகாக்க நீங்கள் செய்ய வேண்டியது இது தான்!
இதே போன்று வெங்காய சாறுடன் ஒரு ஸ்பூன் தேன் சேர்த்து தலைமுடியின் வேர்பகுதியில் நன்றாக அப்ளை செய்த பின்னர் அரை மணி நேரத்திற்குப் பிறகு தலை அலசினால் போதும் தலைமுடி வேகமாக வளர்ச்சியடையும்.
Image Source - Google
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation