முகம் ஜொலிப்பிற்கு உதவும் வைட்டமின் சி பழங்கள் இவை தான்!

 வைட்டமின் சி நிறைந்த பழங்களை உணவு முறையில் சேர்த்துக் கொண்டாலும், தினமும் 2 முறையாவது முகத்தை கழுவ வேண்டும்

glowing skin for vitamin c
glowing skin for vitamin c

முகம் எப்போதும் பளபளப்பாக இருக்க வேண்டும் என்பது பெண்களின் இயல்பான குணங்களில் ஒன்று. ஆம் ஆடம்பரமாக ஆடைகள் அணிந்தாலும் சருமம் அழகாக இல்லையென்றால் நிச்சயம் பார்ப்பதற்கு அழகாக இருக்க மாட்டோம். இதற்காக பல அழகுச் சாதனப் பொருள்களையெல்லாம் பயன்படுத்த ஆரம்பிப்போம். இது ஒருபுறம் உங்களது சருமத்திற்குப் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். எனவே எவ்வித ரசாயன பொருட்கள் எதுவும் இல்லாமல் சருமத்தில் இயற்கையான பொலிவை பெற வேண்டும் என்ற ஆசை உள்ளதா? அப்படியென்றால் வைட்டமின் சி நிறைந்த பழங்களில் உங்களது சரும பொலிவிற்கு உதவியாக இருக்கும். இதோ என்னென்ன பழங்கள்? என்பது குறித்து இங்கே அறிந்துக் கொள்ளலாம் வாருங்கள்.

skin glowing fruits

முகத்தை பளபளபாக்கும் வைட்டமின் சி பழங்கள்:

  • கிவி: வைட்டமின் சி அதிகம் உள்ள பழங்களில் ஒன்று கிவி. இது பசியைத் தூண்டும் பழமாக மட்டுமல்ல, இதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் முகத்தில் ஏற்படக்கூடிய பருக்கள், கரும்புள்ளிகளை அகற்றுவதற்கு உதவியாக உள்ளது. கிவி பழங்களை நீங்கள் ஜூஸாகவோ அல்லது அப்படியே சாப்பிடலாம்.
  • ஆரஞ்சு: சருமத்திற்கு சிறந்த வைட்டமின் சி சத்துக்கள் நிறைந்த பழங்களில் ஒன்றாக உள்ளது ஆரஞ்சு. இது உங்கள் சருமத்தை இளமையாகவும் புத்துணர்ச்சியாகவும் வைத்திருக்க உதவுகிறது. குறிப்பாக ஆரஞ்சு பழத்தில் உள்ள வைட்டமின் சி கொலாஜன் உற்பத்தியை அதிகரித்து முகத்தில் ஏற்படும் சுருக்கங்களைத் தவிர்க்க உதவுகிறது. ஜூஸ் அல்லது பழமாகவே ஆரஞ்சை உங்களது உணவு முறையில் சேர்த்துக் கொள்ளலாம்.
  • தக்காளி: தக்காளியில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்கள் மற்றும் வைட்டமின் சி போன்ற பிற ஊட்டச்சத்துக்கள் அழற்சி எதிர்ப்பு பண்புகளாக செயல்படுகிறத. முகம் சிவப்பாகுதல், முகப்பரு போன்ற பிரச்சனைகளுக்குத் தீர்வு காண, தக்காளி சாறை முகத்தில் அப்ளை செய்யலாம். தக்காளி ஜூஸ் அல்லது பழமாகவே சாப்பிடலாம்.
  • அன்னாசி: வைட்டமின் சி நிறைந்த பழங்களில் ஒன்றான அன்னாசி பழம், உங்களது சருமத்தின் நிறத்தை சமன் செய்யவும் மற்றும் சூரிய ஒளியால் ஏற்படக்கூடிய பாதிப்பை எதிர்த்துப் போராடும் சக்தியைக் கொண்டுள்ளது. எனவே அன்னாசி பழங்களை உங்களது உணவு முறையில் சேர்த்துக் கொள்வது நல்லது
  • ஸ்ட்ராபெர்ரிகள்: வைட்டமின் சி, பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் நிறைந்த ஒரு பிரபலமான பெர்ரி வகைகளில் ஒன்று ஸ்ட்ராபெர்ரிகள். இதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் மற்றும் தாதுக்கள் உங்கள் சருமத்தை சுத்தப்படுத்தவும், மென்மையாக்கவும் உதவுகின்றன.
  • எலுமிச்சை: வைட்டமின் சி சத்துக்கள் நிறைந்த எலுமிச்சை சரும பராமரிப்பிற்கு நீங்கள் பயன்படுத்தலாம். இதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் உங்களது சருமத்தை எப்போதும் பளபளப்பாக வைத்திருக்கவும், சருமத்தில் படிந்திருக்கும் அழுக்குகளை அகற்றவும் உதவுகிறது.
fruits helps skin glowing

இதுபோன்று வைட்டமின் சி நிறைந்த பழங்களை உணவு முறையில் சேர்த்துக் கொண்டாலும், தினமும் 2 முறையாவது முகத்தை கழுவ வேண்டும், அதிகளவு தண்ணீர் குடிப்பது போன்ற பழக்கவழக்கங்களைக் கட்டாயம் பின்பற்ற வேண்டும்.

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP