herzindagi
image

கூந்தல் அடர்த்தியாக இல்லை என்ற கவலையா? முடி உதிர்வுக்கு தீர்வு தரும் கற்றாழை ஹேர்பேக்

முடி உதிர்வு பிரச்சனையை போக்க கற்றாழை கொண்டு ஹேர்பேக் தயாரித்து பயன்படுத்தும் முறையை இந்தக் குறிப்பில் பார்க்கலாம். நமது கூந்தலுக்கு தேவையான பல்வேறு வகையான சத்துகளை கற்றாழை வழங்குகிறது.
Editorial
Updated:- 2025-10-09, 14:30 IST

முடி உதிர்வு என்பது இன்றைய சூழலில் பலருக்கு கவலை அளிக்கும் ஒரு பிரச்சனையாக மாறி இருக்கிறது. இதனை தடுப்பதற்காக பல்வேறு விதமான முயற்சிகளை மேற்கொள்கின்றனர். குறிப்பாக, சில வீட்டு வைத்திய முறையில் இதற்கு தீர்வு காண விரும்புகின்றனர்.

மேலும் படிக்க: பளபளக்கும் சருமம் வேண்டுமா? உங்கள் தினசரி உணவில் சேர்க்க வேண்டிய பழங்களின் லிஸ்ட் இதோ!

 

அதன்படி, முடி உதிர்வு பிரச்சனையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கற்றாழை ஜெல் பரிந்துரைக்கப்படுகிறது. ஏனெனில், இயற்கையாக முடி வளர்ச்சியை ஊக்கப்படுத்தும் ஆற்றல் கற்றாழையில் இருப்பதாக கூறப்படுகிறது. அதன்படி, கற்றாழையில் இருக்கும் நன்மைகளை முதலில் பார்க்கலாம்.

 

முடி வளர்ச்சியை தூண்டும்:

 

தினமும் கற்றாழையை பயன்படுத்துவது உங்கள் முடி ஆரோக்கியத்தை மேம்படுத்தும். இதனை தொடர்ந்து பயன்படுத்தும் போது, முடி உதிர்வது குறைந்து, கூந்தல் வளர்ச்சிக்கு வழிவகுக்கும்.

Aloe vera for hair

 

கூந்தலை வலுப்படுத்தும்:

 

கற்றாழையில் உள்ள சில பொருட்கள் மற்றும் தாதுக்கள் உங்கள் முடியை வலுப்படுத்த உதவுகின்றன. இதில் கொழுப்பு அமிலங்கள், அமினோ அமிலங்கள் மற்றும் வைட்டமின்கள் ஏ, பி12, சி, மற்றும் ஈ நிறைந்துள்ளன. இவை அனைத்தும் முடியின் வேர்க்கால்களை ஆரோக்கியமாக்க உதவுகின்றன.

 

எண்ணெய் பிசுபிசுப்பை கட்டுப்படுத்தும்:

 

கற்றாழையில் உள்ள என்சைம்கள், கொழுப்பை பிரித்து, உச்சந்தலையில் உள்ள கூடுதல் எண்ணெய் பசையை அகற்ற உதவுகின்றன. இதன் மூலம் உங்கள் உச்சந்தலை ஆரோக்கியமாக இருக்கும்.

மேலும் படிக்க: கூந்தல் வளர்ச்சியை அதிகரிக்க உதவும் ஆலிவ் எண்ணெய்; எப்படி பயன்படுத்த வேண்டும் என தெரியுமா?

 

பொடுகு போன்ற பிரச்சனைகளுக்கு தீர்வு தரும்:

 

பொடுகு, உச்சந்தலையில் ஏற்படக் கூடிய அரிப்பு, தடிப்புகள் போன்ற பிரச்சனையால் பலர் பாதிக்கப்படுகின்றனர். இது போன்ற பிரச்சனைகளை குறைப்பதற்கு கற்றாழை பெரிதும் உதவியாக இருக்கும்.

Aloe vera benefits

 

கற்றாழை ஹேர்பேக்:

 

இவ்வளவு நன்மை அளிக்கும் கற்றாழை கொண்டு ஹேர்பேக் தயாரித்து பயன்படுத்துவதன் மூலம் முடி உதிர்வு போன்ற பிரச்சனையை குறைக்கலாம். இதனை பயன்படுத்துவதற்கு முன்பாக பேட்ச் டெஸ்ட் செய்து பார்த்து ஒவ்வாமை அல்லது பக்க விளைவுகள் ஏற்படவில்லை என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.

 

அதன்படி, கற்றாழை ஜெல் இரண்டு ஸ்பூன், தேங்காய் எண்ணெய் ஒரு ஸ்பூன் எடுத்து நன்றாக கலக்க வேண்டும். இந்தக் கலவையை தலையில் தேய்த்து விட்டு சுமார் 30 நிமிடங்களுக்கு பின்னர் குளித்து விடலாம். இந்த ஹேர்பேக் உங்கள் கூந்தலுக்கு ஆழமான ஊட்டச்சத்தை அளித்து, வறட்சியை போக்கி, முடி உதிர்வை குறைத்து வலுப்படுத்த உதவும்.

 

இதனை வாரத்திற்கு ஒன்று அல்லது இரண்டு முறை தொடர்ச்சியாக பயன்படுத்துவதன் மூலம் நல்ல பலன்களை பெற முடியும்.

 

இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.

 

Image Credit: Freepik

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com