cracked heels home remedies

Cracked Heels Tips : குதிகால் வெடிப்பை சரிசெய்ய சிம்பிள் டிப்ஸ்

குதிகால் வெடிப்பை சரிசெய்ய என்னென்ன செய்யலாம் என்பதை இந்த பதிவில் பார்ப்போம். குளிர்காலத்தில் குதிகால் வெடிப்பு என்பது பெண்கள் சந்திக்கும் பொதுவான பிரச்சனை.
Editorial
Updated:- 2023-04-30, 10:24 IST

குளிர்காலத்தில் குதிகால் வெடிப்பு என்பது பெண்கள் சந்திக்கும் பொதுவான பிரச்சனை. இது பாதங்களின் அழகை கெடுக்கும். இதை எளிமையாக வீட்டிலேயே எப்படி சரிசெய்யலாம்? என்பதை இந்த பதிவில் பார்ப்போம். பெண்களின் குதிகால் வெடிப்பை சரிசெய்ய, இந்த பேக்குகள் உதவும்.

அரிசி மாவில் எலுமிச்சை சாறு மற்றும் தேன் சேர்த்து நல்ல கெட்டியான பேஸ்ட் போல் தயார் செய்யவும். அதை குதிகாலில் தடவி, காய்ந்ததும் சுத்தம் செய்யவும். இப்படி வாரத்திற்கு 2 முறை செய்வது நல்ல பலனை தரும். கிளிசரின், ரோஸ் வாட்டர் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து நல்ல கெட்டியான பேஸ்ட் போல் தயார் செய்யவும். இந்த பேஸ்ட்டை இரவில் குதிகாலில் தடவி கொண்டு தூங்கவும். இதனால் வெடிப்பு சரியாகி பாதங்கள் மென்மையாக மாறும்.

இந்த பதிவும் உதவலாம்:ஐப்ரோ எடுத்த பின்பு அதிகம் வலிக்கிறதா? இதை செய்யுங்கள்

அரைத்த ஓட்ஸ், தேங்காய் எண்ணெய் மற்றும் ஆலிவ் எண்ணெய் ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். இந்த பேஸ்ட்டை குதிகாலில் தடவி 20 நிமிடங்கள் காய விடவும். கிளிசரின், தேங்காய் எண்ணெய் மற்றும் கற்றாழை ஜெல் ஆகியவற்றை சேர்த்து நன்கு கலந்து பேஸ்ட்டை தயார் செய்யவும். இதை பாதங்களில் தடவி 15 நிமிடம் மசாஜ் செய்து அப்படியே காய விடவும். பின்பு, அதை சுத்தம் செய்யவும்.

cracked heels remdies

குதிகால் வெடிப்பு ரிப்ஸ்

  • தேனுடன் தேயிலை மர எண்ணெய் மற்றும் தேங்காய் எண்ணெய் ஆகியவற்றை சேர்த்து நன்கு கலந்து பாதங்களில் தடவவும். 20 நிமிடம் கழித்து இதனை ஈரமானதுணியால் சுத்தம் செய்யவும். இதன் பின்பு பாதத்தைச் சுற்றி மாய்ஸ்சரைசரை பூசவும்.
  • வாழைப்பழத்துடன் தேன் சேர்த்து நன்கு மசித்து அதை பாதங்களில் தடவி 20-30 நிமிடங்கள் வரை காய விடவும். பின்பு அதை சுத்தம் செய்துவிட்டு மாய்ஸ்சரைசரை பூசவும். வாரத்திற்கு 1 முறை இப்படி செய்வது நல்ல பலனை தரும்.
  • கோதுமை மாவு, தேன் மற்றும் சில துளிகள் வினிகர் சேர்த்து நன்கு கலந்து கெட்டியான பேஸ்ட்டை தயார் செய்யவும். பின்பு, பாதங்களை வெதுவெதுப்பான நீரில் 10 நிமிடம் வைத்துவிட்டு கடைசியாக இந்த பேஸ்ட்டை தடவவும். காய்ந்ததும் பாதங்களை சுத்தம் செய்யவும்.

இந்த பதிவும் உதவலாம்:முக சுருக்கத்தை சரிசெய்ய என்ன செய்ய தெரியுமா?

எனவே, நீங்களும் குதிகால் பிரச்சனையால் அவதிப்பட்டு வந்தால் அதை சரிசெய்ய இந்த வழிமுறைகளை பின்பற்றலாம். இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.

Images Credit: freepik

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com